கடுகில் உள்ள சத்துக்கள்!

கடுகு
கடுகு

கடுகில் கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்புச்சத்து, செலினியம், மெக்னீசியம், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், போலேட்ஸ், நியாசின், பான்டோ தெனிக் அமிலம் ஆகிய பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்களும் உள்ளன.

கடுகின் மருத்துவ குணங்கள்:

* தேனில் கடுகை அரைத்து கொடுக்க ஆஸ்துமா, கபம், மார்புச்சளி குணமடையும்.

* கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு, கடுகை அரைத்து பூசினால் சீக்கிரமாக கட்டி உடைந்து குணமாகும்.

* கடுகில் வைட்டமின் ஏ, கே மற்றும் சி நிறைந்து காணப்படுவதால், உணவில் கடுகை சேர்த்துக் கொள்வதன் மூலம் முதுமையைத் தாமதப்படுத்தலாம். 

* ஒற்றைத் தலைவலி ஏற்படும்போது கடுகை அரைத்து அந்த சாற்றை தலையில் பற்று போட, தலைவலி பறந்து விடும்.

* கடுகில் உள்ள நியாசின் என்ற வகை சத்து ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

கடுகு
கடுகு

*மேலும் இதிலுள்ள கால்சியம் மற்றும் தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், எலும்புகளின் உறுதிக்கும் பெரிதும் உதவுகிறது.

* கடுகினை சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை குணமாகும்.

* கடுகு உள் உறுப்புகளை தூண்டும் தன்மையை உடையது. பசியை தூண்டக் கூடியது.

* இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானதும் ஆகும் கடுகு

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com