பேஸ்ட்தான் பெஸ்ட்!

பேஸ்ட்தான் பெஸ்ட்!

நாம் காலையில் விழிப்பதே டூத் பேஸ்ட் முன்னால்தான். டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும், வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளைப் பலப்படுத்தும் என்பது போன்ற பயன்கள் நாம் அறிந்ததே.

நாம் அறியாதது அல்லது அறிய வேண்டியது:-

பூச்சிக் கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்பளங்கள், அரிப்பு போன்றவற்றைப் போக்க சிறிது டூத் பேஸ்ட்டைத் தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும்.

சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எஃபெக்ட் கொடுக்கும்.

முகப்பருக்கள் வேகமாக மறைய, தூங்கப் போகுமுன் பருவின் மேல் ஒரு புள்ளி அளவுக்கு  பேஸ்ட்டை வைத்தால் இரண்டு மூன்று நாட்களில் பரு மறையும். காலையில் எழுந்தவுடன் முகம் கழுவுதல் அவசியம்.

ற்களுக்கு எனாமல் கோட்டிங் உண்டு. பற்கள் பளிச்சிட நாம் டூத்பேஸ்ட் உபயோகிக்கிறோம். அதேபோல் நகங்களுக்கும் எனாமல் கோட்டிங் உண்டு. நகங்கள் சுத்தமாகவும் பளிச்சிடவும் பற்களை சுத்தம் செய்வது போல் மேல்புறமும் இடுக்குகளிலும் பேஸ்ட் + பிரஷ்ஷால் தேய்த்தால் நல்ல பலன் தெரியும். இது நகங்களை வலுப்படுத்தவும் செய்யும்.

பூண்டு, வெங்காயம், மீன் இவற்றைக் கையாளும் பொழுது, கைகளில் இருந்து ஒருவித வாடை வரும். சிறிது டூத் பேஸ்ட் எடுத்து தேய்த்துவிட்டு கழுவினால் வாடை நீங்கும்.

துணிகளிலும் கார்பெட்களிலும் படிந்த கனமானக் கறைகளை டூத் பேஸ்ட் மூலம் நீக்க முடியும்.  பேஸ்ட்டை கறை படித்த இடங்களில் தடவி நன்றாகத் தேய்த்தால் கறைகள் நீங்கும். கலர் துணிகளில் படிந்த கறைகளில் பேஸ்ட் உபயோகித்தால் அந்தப் பகுதி வெண்மையாக வாய்ப்புண்டு. ஆகையால் அதிக கவனம் தேவை.

ஜாகிங் ஷூக்கள் மற்றும் லெதர் ஷூக்களில் கறை படிந்தால் பேஸ்ட் தடவி பிரஷ் செய்யலாம்.

குழந்தைகள், வீட்டுச் சுவர்களில் க்ரேயான் கொண்டு கோடுகள் கிறுக்குவது சகஜம்.  ஈரத்துணியில் பேஸ்ட் தடவி, க்ரேயான் கோடுகளின்மீது தேய்த்தால் மறைந்து விடும்.

வெள்ளிப் பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்ட் தடவி மெதுவாக பாலிஷ் செய்வதுபோல் தேய்த்தால் புதிதுபோல் இருக்கும். இது வைர நகைகளுக்கும் பொருந்தும். கடைசியில் தண்ணீரில் நன்றாகக் கழுவி காற்றாட உலர வைக்க வேண்டும்.

சி.டி./ டி.வி.டி.களில் கோடுகள் விழுந்துவிட்டதா? ஒரு துளி டூத் பேஸ்ட் கோட்டிங் கொடுத்து மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள்.

பியானோ இல்லாவிட்டாலும் பல வீடுகளில் ‘யமஹா’ போன்ற இசைக்கருவிகள் இருக்கின்றன. அதன் கீ-போர்ட் கறை படிந்து தூசிகள் படர்ந்து இருக்கும். டூத் பேஸ்டுடன் மெல்லிய ஈரமான காட்டன் துணியால் சுத்தம் செய்யலாம். மறுபடியும் உலர்ந்த துணியால் நன்றாகத் துடைக்க வேண்டும்.

குழந்தைகளின் பால் பாட்டில் ஒருவித வாடை வீசும். சிறிது டூத் பேஸ்ட் விட்டு நன்றாக அலசினால் வாடை போகும்.

வீடுகளில் இஸ்திரிப் பெட்டி உபயோகிக்கும்போது நாளடைவில் துருப்பிடித்ததுபோல் ஒருவித கருமை நிறகோட்டிங் படிந்து இருக்கும். டூத்பேஸ்டில் உள்ள சிலிக்கா இந்தத் துருவை நீக்கிவிடும்.

மது மூக்கு கண்ணாடியைத் துடைப்பதற்கு டூத் பேஸ்ட்டை விட சிறந்தது ஒன்றுமில்லை. சிறிது பேஸ்ட் தடவி நன்றாகக் கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com