எண்ணெய் வழியும் முகத்திற்கு எளிய தீர்வுகள்

எண்ணெய் வழியும் முகத்திற்கு எளிய தீர்வுகள்

ண்ணெய் பசையுடைய சருமத்தினருக்கு கோடையில் அதிகளவில் முகத்தில் எண்ணெய் வழியும். இதனால் பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சனைகள் ஏற்படும். நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதற்கு எளிய முறையில் தீர்வு காணலாம்.

1. கைப்பிடியளவு வேப்பிலையை சிறிது நீர் விட்டு அரைத்து சாறெடுத்து, முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் எண்ணெய் பசைக் கட்டுப்படுத்தப்படுவதோடு, முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளும் அகலும்.

2. க்காளியில் சாலிசிலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி பருக்கள் வருவதை தடுக்கிறது. மேலும் பருக்களால் உருவான தழும்புகளையும் மறைய செய்கிறது. ஒரு பழுத்த தக்காளியை எடுத்து இரண்டாக வெட்டி அதில் ஒரு துண்டை எடுத்து முகத்தில் வட்ட வடிவில் மெதுவாக மசாஜ் செய்யவும். இருபது நிமிடம் உலர விட்டு, கழுவினால் சரும பிரச்சனைகள் நீங்கி  முகம் பொலிவாகும்.

3. ரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. தினமும் அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் கரும்புள்ளிகளை நீக்கிவிடும்.

4. ன்கு கடைந்த மோரை எடுத்து அவற்றை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து பின் கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் மோரில் உள்ள நல்ல பாக்டிரீயாக்கள் சருமத்தில் உண்டாகும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி முகத்தை பொலிவடைய செய்யும்.

5. ழுத்த பப்பாளி பழத்தின் ஒரு துண்டத்தை அரைத்து முகத்தில் பேக் போல போட்டு மசாஜ் செய்து பத்து நிமிடம் கழித்து கடலைமாவு கொண்டு கழுவினால் முகம் புத்துணர்ச்சியுடன் பளபளவென்று இருக்கும்.

6. ரு ஸ்பூன் தேன் எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு  பத்து நிமிடங்கள் நன்கு உலர விடவும். பின்னர் ஒரு காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைத்து விட்டு சிறது நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசையினால் ஏற்படும் பருக்களை மறைய செய்து முகத்திற்கு பொலிவை தரும்.

7. ருமத்தில் வழியும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த ஐஸ் கட்டி உதவும்.  ஐஸ் கட்டியை ஒரு துணியில் வைத்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் சருமம் புத்துணர்ச்சியுடனும், எண்ணெய் வழியாமலும் இருக்கும். ஐஸ் கட்டியை நேரடியாக முகத்தில் பயன்படுத்தக் கூடாது.

8. ற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி அரைமணிநேரம் கழித்து பின் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் முகத்தில் எண்ணெய் வழிவது படிப்படியாக குறையும்.

9. ரு வெள்ளரிக்காயை மிக்ஸ்யில் அரைத்து சாறெடுத்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு  சருமத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்பட்டு  முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

10. ருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையையும் அழுக்குகளை நீக்க உதவுகிறது பாதாம். பாதாமை இரவு நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் பேஸ்ட் போல நன்கு அரைத்து கொள்ளவும், இதனுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து முகத்தில் தடவவும். ஐந்து நிமிடம் நன்கு மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து, முகம் கழுவவும். பளீரென மின்னும்.

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

ண்ணெய் வழியும் சருமம் உடையவர்கள் பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட வெண்ணெய், கிரீம், நெய் மற்றும் சீஸ் போன்ற நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

பிரட், கேக்ஸ், குக்கீஸ், மிட்டாய், பாஸ்தா, பான்கேக்ஸ் மற்றும் ப்ரீட்ஜெல்ஸ், பஜ்ஜி, போண்டா, போன்ற எண்ணெய் பலகாரங்களையும் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் முகத்தில் எண்ணெய் வழிவதை அதிகமாக்கி, பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com