பலம் தரும் பாதாம் பிசின்!
பாதாம் பிசினில் புரதம், வைட்டமின் ஈ, ஜிங்க், தாது உப்புக்கள் கால்சியம் ஆகியன உள்ளன.
அசிடிட்டியால் உண்டாகும் வயிற்று வலி போன்றவை நீங்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர குணமாகும்.
ஆயுர்வேத முறைப்படி பிரசவத்திற்கு பிறகு பாதாம் பிசின் சேர்க்கப்பட்ட லட்டை பெண்களுக்கு கொடுக்கும் சடங்கு உள்ளது. இந்த பாதாம் பிசின் பெண்களின் உடலில் ஊட்டச்சத்துக்களை பிரசவத்திற்கு பிறகு திரும்பப் பெற உதவுகிறது.
பாதாம் பிசினில் உள்ள வைட்டமின் ஈ புற்றுநோய் கட்டிகளுக்கு வழிவகுக்கும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுவதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
பாதாம் பிசின் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும், இது மயிர்க்கால்களின் புதிய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
பாதம் பிசினில் கால்சியம் உள்ளதால் எலும்புகளையும், பற்களையும் பலப்படுத்துகிறது.
பாதாம் பிசின் ஒரு அற்புதமான இயற்கை உடல் குளிரூட்டியாகும். கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பாதாம் பிசின் உதவுகிறது.
பாதாம் பிசினை தேங்காய்ப் பாலுடன் கலந்து அதில் வெல்லத்தை சேர்த்து உட்கொண்டால், அமிலத்தன்மை மற்றும் வயிற்று எரிச்சல் இரண்டையும் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெட்டு காயங்கள், மற்றும் தீயினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பிசினை சிறிது உள்ளங்கையில் எடுத்து, நன்றாக குழைத்து புண்கள மீது தடவி வந்தால் அவை சீக்கிரத்தில் ஆறும்.
இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
பாதாம் பிசினை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு வந்தால் இரைப்பை பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, பாதாம் பிசினை அளாவோடு ்சாப்பிடுதல் நலம்.