தமிழ்நாட்டின் பாரம்பரியமான வேலூர் முள்ளு கத்தரிக்காய்!
வேலூர் முள்ளு கத்தரிக்காய் என்பது ஒரு புகழ் பெற்ற காய் வகை. வேலூர் மாவட்டக்கிராமங்களில் விளைவிக்கப்படும் இதற்கு முள்ளுக் கத்தரிக்காய் என்பதன் மறுபெயர் இலவம்பாடிகத்தரிக்காய். உண்மையில் அதில் முள் இருக்கும். அதன் சுவையும் ஒப்பிட இயலாதது. இது ஒரு கலப்பினமற்ற பாரம்பரிய காய்.
வேலூர் முள்ளு கத்தரிக்காய் எப்படி இருக்கும் :
இளஞ்சிவப்பு நிறத்துடன் கலந்த ஊதா நிறத்தில் பளபளப்பாக காணப்படும். ஒருகத்தரிக்காயின் சராசரி எடை 40 கிராம் ஆகும், மேலும் அறை வெப்பநிலையில் 3 நாட்களும், குளிரூட்டப்பட்ட சுற்றுப்புறத்தில் சுமார் 8 நாட்களும் இருக்கும்.
புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது மற்ற கத்தரி வகைகளை விடசுவையாக இருக்கும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்க்கும் தனி சக்திஇதற்கு உண்டு. செடியின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் முட்கள், பயிரைமிகவும் தனித்துவமாகவும், அடையாளம் காணக்கூடியதாகவும் ஆக்குகின்றன.
தமிழில் இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய் என்று அழைக்கப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி, ஒரு அரிய, முட்கள் நிறைந்த நாட்டு கத்தரிக்காய் இனமாகும். இது மென்மையாகவும், சதைப் பற்றுள்ளதாகவும் இருக்கும். மேலும் இது கொத்தாகத் தொங்கும் இது 140-150 நாட்களில் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 40-45 டன்கள்மகசூல் தரும்.
இதில் சொத்தை இருக்கும். புழு கூட இருக்கும். சொத்தையை விலக்கி விட்டுச் சமைப்பார்கள். இப்போது ஆர்கானிக் என்று கூறப்படும் பல காய்களுக்கு இடையில் இயற்கையான முறையில் விளைவிக்க பட்டு விற்கப்படுகின்றது.
சென்னை மக்களுக்கு மட்டுமே இது வேலூர் கத்தரிக்காய் சென்னை சூப்பர் மார்க்கெட்டுகளில் அவ்வப்போது தான் வருகை புரியும். ஆனால் வேலூரில் இது இலவம்பாடி கத்தரிக்காய் என்றுதான் கூறப்படுகின்றது.

இதனை என்னென்ன வகைகளில் சமைக்கலாம் :
பிரியாணி வகைகளுக்கான ஒரு அருமையான சைட்டிஷ் இந்த இலவம்பாடி அல்லது முள்ளு கத்தரிக்காய் தொக்கு. இதன் சுவைக்கு ஈடு இணை இல்லை எனலாம். வேலூர் முள்ளு கத்தரிக்காயை சுட்டு பலவகையில் சமைத்து பயன்படுத்தலாம் , பார்பிக்யூட் உணவுகள் செய்யலாம், வறுக்கலாம் , வேக வைக்கலாம். அல்லது ஊறுகாய்களாகவும் செய்யலாம். பல குழம்பு வகைகள் வைக்கலாம் .
புவி சார் குறியீடு :
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக விளையும் வேலூர் இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய், (ஜி.ஐ) புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புவிசார்குறியீடு அங்கீகாரம் பெற்ற மொத்த தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 45 ஆகஉயர்ந்து, மாநிலம் 2-வது இடத்தில் உள்ளது. கர்நாடகா 46 அதிகபட்ச புவிசார்குறியீடுகளைப் பெற்றுள்ளது. கேரளா 36 தயாரிப்புகளுடன் மூன்றாவது இடத்தில்உள்ளது.