உருவமோ சிறியது; தொல்லையோ பெரிது!

உருவமோ சிறியது;  தொல்லையோ பெரிது!

ம் தலையில் நமது அனுமதியின்றி குடியேறி இனப்பெருக்கம் செய்து பல்கிப்பெருகி ஆதிக்கம் செலுத்தும் உயிரினம் பேன். நம் ஆரோக்கியத்திற்கு விடும் சவால் பேன்தொல்லை. கொசுக்களால் மலேரியா, சிக்கன் குனியா டெங்கு போன்ற காய்ச்சல் வகைகள் பரவுவது போல பேன்கள் மூலமும் காய்ச்சல் பரவும். அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் தற்போது இல்லை.

பேன், எக்டோ பாரசைட் (Ectoparasite) எனப்படும்  ஒரு உயிரினம். உடலுக்கு வெளியே தங்கி இரவில் மட்டும் தாக்கி ரத்தம் குடிக்கும். பேன்களில் மூன்று வகைகள் உண்டு. தலைப்பேன், உடல் பேன், அந்தரங்கப்பேன்.

தலைப்பேன்:

பெண்களுக்கென்று பிரத்தியேகமாக வரக்கூடியது தலைப்பேன். இரு காதுகளுக்கிடையே உள்ள முடிக்கற்றைகளிலும் தலையின் பிடரிப் பகுதியிலும் முட்டை இடும்  பேன்கள் மாலை 6 மணிக்கு சுறுசுறுப்பாக ட்யூட்டியை ஆரம்பிக்கும். 

பரவும் முறைகள்;

து சிறு குழந்தைகளைக் கூட தாக்கும். தன் தாயிடம் இருந்தோ, கூடப்பிறந்த சகோதரியிடமிருந்தோ, அல்லது தன் அருகில் தூங்குபவர்கள் மூலமோ கைக்குழந்தைக்கு கூட பேன் பரவி, தொல்லை தரும்.

ஒருவர் பயன்படுத்திய படுக்கை, தலையணை, சீப்பு முதலியவற்றால் பேன் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவும்.  தலையின் தோல்பகுதியில் கடித்து ரத்தத்தை உறிஞ்சும் போது குழந்தைகளை நகத்தால் அதை கீறி விடுவர். அதனால் தலையில் சீழ் கொப்பளங்கள் உருவாகும். கிராமப்புறங்களில் வளர் இளம் பெண்களுக்கு பேன் தொல்லையினால் மொட்டை அடித்து விடுவதை பார்த்திருப்போம். ஆனால் அது சரியான தீர்வு அல்ல.

மேலும் நம் நாட்டில் வளரிளம் பெண்களுக்கு கழுத்தில் தோன்றும் கழலை நோய்க்கு முதலும் முக்கியக் காரணமும் பேன்கள் தான். சீழ்க் கொப்பளங்களில் இருந்து கழுத்துப்பகுதியில் கழலை நோய் உருவாகும். 

பாதிப்புகள்:

பேன்கள் கடிப்பதால் சிறு குழந்தைகள் இரவு நேரத்தில் விடாமல் அழும். பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு மாலையில் இருந்து இரவு உறங்கும் வரை கடிப்பதால் பாடம் படிப்பதில் கவனம் சிதறும். சொறிந்துகொண்டே இருப்பதால் அரிப்பு, புண் போன்ற தொல்லைகள் ஏற்படும். ரத்தம் உறிஞ்சப்படுவதால் எப்போதும் சோர்வாக இருப்பர். வீட்டில் பாடம் படிப்பதிலும் மறுநாள் பள்ளியில் பாடத்தை கவனிப்பதிலும் சிரமம் ஏற்படும்.  12 முதல் 15 வயது சிறுமிகளுக்கு மொட்டை அடிப்பது மிகப்பெரிய பாதிப்பை மனதளவில் ஏற்படுத்தும்.

சிகிச்சை முறைகள்:

பேன் தொல்லைக்கு ஆளானவர்கள் தோல் மருத்துவரை அணுகி பேன் மருந்தை வாங்கி, கைகளுக்கு க்ளவுஸ் அணிந்து கொண்டு, தலையில் உள்ள தோலிலும் முடியின் வேர்க்கால்கள், மற்றும் முடியிலும் நன்கு தடவி அரை மணி நேரம் ஊற வைத்து ஷாம்பு போட்டு தேய்த்து குளித்தால் போதும். மீண்டும் எட்டாவது நாள் அதே மருந்தை தேய்த்துத் குளிக்க வேண்டும். பேனை மட்டும் அழித்தால் போதாது. ஈறுகளையும் கவனமாக அழிக்க வேண்டும். சீழ் கொப்புளங்கள் இருந்தால் களிம்பு, மாத்திரைகள்  எடுத்துக் கொண்டு அதை சரிப்படுத்த வேண்டும்

ஏனெனில், ஈறுகள் தலையின் தோல் பகுதியில் ஒட்டிக்கொண்டு இருக்கும்.  பேன் தனது முட்டையை தனது உமிழ் நீர் மற்றும் நமது ரத்தத்துடன் கலந்து தலைமுடியில் இருக்க பற்றும்படிஈறுகளாக ஒட்டி வைத்திருக்கும். நெருக்கமான பற்களை உடைய பேன் வாரும் சீப்பினால் மட்டும் பேன் அழிவதில்லை. சமையலுக்குப் பயன்படுத்தும் ஒயிட் வினிகரை நன்றாக தலையிலும், முடியிலும் தடவி ஷாம்பு போட்டு அலசினால் போதும பேன் தொல்லை அகலும்.

இயற்கை முறையில் பேன்களைத் தடுக்க:

ண்ணெய்ப் பசை இல்லாத தலையில் பேனும், பொடுகும் சுலபமாக நுழைந்து விடும். தலையின் தோல் பகுதியில் வழுவழுவென்று தேங்காய் எண்ணெய் பூசி ஜடை போடும் பெண்களுக்கு பேன் தொல்லை இராது. அதே சமயம் உறங்கும் போது தலைப்பின்னலை அவிழ்த்து,  முடியை லூசாகப் பின்னி, காதுகளின் பின்புறக் கூந்தலைக் காற்றோட்டமாக விடுதல் பேன்ப் பெருக்கத்தை குறைக்கும்.

வாரம் இரு முறை நம் முன்னோர்கள் செய்தது போல தலைக்கு எண்ணெய் தேய்த்து அரை மணி நேரமாவது ஊற வைத்து கெமிக்கல் குறைவாக உள்ள மைல்டு ஷாம்பு அல்லது சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க வேண்டும். வெளிநாடுகளில் தலைக்கு நம்மை போல தேங்காய் எண்ணெய் தடவுவதில்லை. அவர்கள் தலையில் வேசிலைன் எனப்படும் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி அரை மணி நேரம் கழித்து குளிப்பார்கள்.

பிறர் உபயோகப்படுத்திய சீப்பு, தலையணை போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. நாம் உபயோகப்படுத்தும் சீப்பை வாரம் ஒரு முறையாவது சோப்பு தண்ணீறில் ஊற வைத்துக் கழுவ வேண்டும். முடியை சுத்தமாகப் பேணுபவர்களுக்கு  பேன் வராது.

உடல் பேன். காரணங்கள்.

பொதுவாக சிறைச்சாலைக் கைதிகளிடையேயும், விடுதியில் தங்கிப் பிடிக்கும் மாணவர்களிடையேயும், நீண்ட நாட்களாக துவைக்காத ஆடைகளை அணிப வரிடமும், பிறர் ஆடையை மாற்றி அணிபவரிடமும் தோன்றுவதே உடற்பேன். இவை உடலின் வெளிப்பக்கம் காட்சி தருவதில்லை. ஆடையின் உள்பக்க தையல் மடிப்புகளில் ஒளிந்திருக்கும். இரவு நேரத்தில் வெளிவந்து கடித்து ரத்தம் உறிஞ்சிச் செல்லும். பெரும்பாலும் தொப்புள், வயிறு, இடுப்பு பகுதிகளில் ரத்தம் கன்றிப் போய் ரத்தம் கசிந்த நிலையில் தென் பட்டால் அது உடல் பேன் கடித்ததனால்  ஏற்பட்டது என தெரிந்து கொள்ளலாம்.

சிகிச்சை முறை;

தற்கான சிகிச்சை முறை உடலுக்கு அல்ல, துணிகளுக்கு தான். தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது அழுக்குத் துணிகளைத் துவைத்து விட வேண்டும். உடல்பேன் தொல்லை உள்ளவர்களின் உடைகளை ஒரு பக்கெட்டில் பேன் மருந்தை தண்ணீரில் கலந்து ஊற வைத்து, துவைத்து அலசி நல்ல வெயிலில் காயப்போட வேண்டும்.

அந்தரங்கப் பேன்: (Grab louse)

வற்றை நண்டுப்பேன்கள் என்று அழைப்பார்கள். கண் இமைகள், புருவம், அக்குள் பகுதி மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் தோன்றும். பொதுவாக ஹாஸ்டல் மாணவர்கள் உள்ளாடைகளை 10, 15 நாட்களுக்கு மொத்தமாக சேர்த்து வைத்து, இரு வாரங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வரும்போது போது துவைப்பார்கள். அவர்களுக்கு நிச்சயம் உடலின் அந்தரங்கப் பகுதிகளில் பேன்கள் உருவாகும். அந்தரங்க சுத்தம் பேணாதவர்களுடன் உடல் தொடர்பு கொள்ளும் போது (sexually Translated Infection) இவை தோன்றும்.

தோல் மருத்துவரிடம் சென்று களிம்புகளை வாங்கி, முதல் மற்றும் எட்டாம் நாள் இரவு, கழுத்திற்குக் கீழ் உடல் முழுவதும் தடவி மறுநாள் காலையில் குளிக்க வேண்டும். கண் இமை, புருவம் இவற்றில் பேன் இருந்தால் அவற்றிற்கு கெமிக்கல் க்ரீம்கள் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும்.

பேன்கள் மற்ற ஒட்டுண்ணிகள் போல சாதாரணமானவை அல்ல. ஒருவருக்கு பேன் தொல்லை இருந்தது என்றால் உடனடியாக சிகிச்சையில் இறங்க வேண்டும். காலம் தாழ்த்தினால் பேன் ஒரே வாரத்தில் 10 மடங்கு இனப்பெருக்கத்தை அதிகரித்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com