இளமை காக்கும் இலந்தை!

இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.
பெண்களுக்கு மாதாமாதம் உருவாகும் மாதவிடாய் காலத்தில் சிலருக்கு அதிகமான ரத்தப்போக்கு இருக்கும். இந்த சமயத்தில் பெண்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.
பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.
40 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்படும் உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.
இலந்தை மர இலைகளை நன்றாக அரைத்து காயங்கள் மீது தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
இலந்தை மர இலை சாறெடுத்து வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் முடி வளரும்.
கை, கால்களில் புண் இருப்பவர்கள், வாய் வீக்கம் இருப்பவர்கள் இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புண்கள் ஆறிவிடும். பல் ஈறுகளில் இரத்த கசிவு, உதடு, வாயில் புண் போன்றவைகள் எது இருந்தாலும் இப்பழம் குணமாக்கும்.
இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.
இலந்தை மர இலையை அரைத்து புளித்த மோரில் சிறிதளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு நீங்கும்.
இலந்தை இலைகளை வேகவைத்து அதனை அடிவயிற்றில் தடவினால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி மற்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதி போன்றவைகள் குணமாகும்.
இலந்தை பழ கொட்டையை நன்றாக உலர்த்தி இடித்து மாவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த பொடியினை தினமும் 2 அல்லது 3 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவும், அழகும் பெறும்.
இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.
மூளையைத் தூண்டும் பாஸ்பரஸ் உப்புடன் ஜியூடாமிக் என்ற அமிலமும் இலந்தைப் பழத்தில் இருப்பதால் அவை ரத்தத்தில் கலந்து மூளை நன்றாக செயல்பட உதவுகிறது.