கிருமி நாசினியாகும் மஞ்சள்!

கிருமி நாசினியாகும் மஞ்சள்!

தை மாதம் மஞ்சள் கிழங்குகள் புதியதாக கிடைக்கும். இதனை வாங்கி வட்ட வட்டமாக நறுக்கி வெயிலில் காயவைத்து நன்கு காய்ந்ததும் (கையால் உடைத்துப் பார்க்க ஒடியும்) மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து எடுத்து நன்கு ஆறியதும் ஜிப் லாக் கவரில் போட்டு வைத்து ஃப்ரீசரில் வைத்து விட ஒரு வருடம் ஆனாலும் கெடாது. கொஞ்சம் கொஞ்சமாக தேவைப்படும் சமயத்தில் எடுத்துப் பயன்படுத்தலாம் பூச்சி, வண்டு பிடிக்காது. கடையில் வாங்கும் மஞ்சள் தூளை விட சுத்தமாக கலப்படம் ஏதும் இன்றி இருக்கும். அதேபோல் கஸ்தூரி மஞ்சள் கிழங்கையும் வாங்கி இதே போல் நறுக்கி வெயிலில் காயவைத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொண்டு உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய்கள் எதுவும் நம்மை அண்டாது. இந்த கஸ்தூரி மஞ்சள் பொடியை தினமும் கவலை இன்றி உடலில் தேய்த்து குளிக்கலாம் மஞ்சள் கரை நம் உடையில் படியாது.

தேபோல் இந்த மார்கழி தை மாதங்களில் புதினா, பச்சை பட்டாணி, வெந்தயக்கீரை, நார்த்தங்காய், மாகாளி கிழங்கு ஆகியவை விலை மலிவாக கிடைக்கும். இந்த சீசனில் இவற்றை வாங்கி பதப்படுத்தி வைத்துக்கொள்ள ஆறு மாதங்கள் வரை உபயோகிக்கலாம்.

புதினா இலைகளை நிழலில் காய வைத்து நன்கு காய்ந்ததும் மிக்ஸியில் பொடித்து ஈரம் படாமல் டப்பாவில் போட்டு ஃப்ரீசரில் வைக்கலாம். இது ஒரு சிறந்த மூலிகை இலையாகும். வறட்டு இருமல், நரம்பு தளர்ச்சி, அனீமியாக்கும் இது சிறந்த மருந்தாக பயன்படும்‌ இதனை நிழலில் காய வைத்து பாலுடன் சேர்த்து கொதிக்கவிட்டு குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ‌வாய் துர்நாற்றத்தை போக்க வாயில் நாலைந்து இலைகளை போட்டு மெல்ல துர்நாற்றம், பல் பிரச்னைகள் தீரும். ஜீரண சக்தியை அதிகரிக்க கூடியது. இந்த இலைகளின், பூக்களை உலர்த்தி காயவைத்து அதிலிருந்து மெந்தால் எண்ணெய் எடுக்கிறார்கள். இதனை இயற்கை வைத்தியங்கள் மற்றும் அரோமா தெரபிகளில் பயன்படுத்துகிறார்கள். நாம் டீ போடும்போது நாலைந்து இலைகளை சேர்த்து டீ போட ருசியாக இருக்கும். தலைவலிக்கும் நல்லது. கலந்த சாதம் செய்து சாப்பிடலாம். துவையலும் செய்யலாம். பசியை தூண்டக் கூடியது இந்த புதினா.

வெந்தயக் கீரையையும் இதே போல் காயவைத்து உபயோகிக்கலாம். ஃபிரஷ் ஆகவும் சாம்பார், சப்பாத்தி சப்ஜிகள் செய்யவும் பயன்படுத்தலாம்.

ச்சை பட்டாணி விலை மலிவாக கிடைக்கும் இந்த சமயத்தில் வாங்கி தோல் நீக்கி ஜிப் லாக்கர் கவரில் போட்டு ஃப்ரீசரில் வைத்து விட, ஆறு மாதங்களுக்கு தேவையான சமயத்தில் எடுத்து உபயோகிக்க வசதியாக இருக்கும்.

நார்த்தங்காய் மாகாளி கிழங்குகளை வாங்கி ஊறுகாய் போட்டு வைக்க ஒரு வருடம் ஆனாலும் கெடாது சிறந்த மருத்துவ குணம் மிக்க நார்த்தங்காய் மாகாளி கிழங்குகளை வாங்கி பயன்பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com