பிளம்ஸ்
பிளம்ஸ்

பிளம்ஸ் பழத்தின் பயன்கள்!

பிளம்ஸ் பழங்களில் வைட்டமின் சி சத்து  நிறைந்திருக்கிறது இது உடலின் எலும்புகளை பலப்படுத்துகிறது,

இதில் இருக்கும் மெக்னீசியம் சத்து உடலின் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.

பிளம்ஸ் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்புகள் அனைத்தும் சீராகி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுப்பதிலும் சிறந்த செயலாற்றுகிறது.

பிளம்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் பலம் பெற்று அதன் செயல்பாடுகள் சிறக்கும். உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தையும் சுத்திகரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

போலிக் அமிலங்கள் நிறைந்த பிளம்ஸ் பழங்களை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவது நல்லது. போலிக் அமிலங்கள் கர்ப்பிணி பெண்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உடல் வளர்ச்சிற்கும் மிகவும் அவசியமானதாகும்.

இந்த பழங்களில் தலைமுடி உதிர்வை தடுக்கும் வைட்டமின் ஏ சத்துகள் அதிகம் உள்ளதால் முடிகொட்டுவதை தடுக்கிறது. இளம் வயதிலேயே தலைமுடி நரைக்கும் பிரச்சனையையும் போக்குகிறது.

இந்த பழத்திலுள்ள வைட்டமின் சத்து ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லட்ஸ் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

பிளம்ஸ் பழத்தில் “பிளவினாய்ட்ஸ்” எனும் வேதிப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இது பெண்களுக்கு ஆஸ்டியோபொரோசிஸ் நோய் ஏற்படும் வாய்ப்புகளை வெகுவாக குறைகிறது. (ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் அடையும் ஒரு நோயாகும்.)

பிளம்ஸ் பழங்களில் மூளை செல்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் இறுக்கம், அழுத்தம் போன்றவற்றை குறைத்து மனதில் ஏற்படும் வீணான பதட்டத்தை குறைக்கிறது.

பிளம்ஸ் பழம்
பிளம்ஸ் பழம்

பிளம்ஸில் அடங்கியுள்ள வைட்டமின் கே, உடலில் தேவையற்ற இடங்களில் இரத்தம் உறைதலை தடைசெய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு போன்றவை சமநிலையில் உள்ளது.

மேலும் பிளம்சில் உள்ள பொட்டாசியம் மற்றும் தாது பொருட்கள், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்பை தடுக்கிறது.

பிளம்சில் உள்ள அந்தோசயணி என்ற சிவப்பு கலந்த ஊதா வண்ண நிறமி, புற்று நோயை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. ப்ளம்சில் உள்ள பீட்டா கரோடின் என்ற வேதி பொருள் நுரையீரல் மற்றும் பல உறுப்புகளில் ஏற்படும் புற்று நோயை தடுக்கும் வல்லமை வாய்ந்தது.

பிளம்சில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. பித்த நீர், கல்லீரலில் கொழுப்பை செரிக்க உதவுகிறது.

பார்வைத்திறனை மேம்படுத்தவும், நீரிழிவு நோயை எதிர்த்து போராடவும் பிளம்ஸ்  உதவுகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com