இந்த 8 பிரிவுகளில் கொட்டிக் கிடக்குது வேலை வாய்ப்புகள்! தெரிஞ்சுக்கோங்க இளைஞர்களே!

Job Opportunities
Job Opportunities
Published on

மாறிவரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளிலும் மாற்றம் இருக்கிறது. அந்த வகையில் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக இருக்கும் 8 வேலை வாய்ப்புகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

1. AI நிபுணர்

சுகாதாரம் முதல் நிதி சேவைகள் வரை செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும், பணிகளை தானியக்கமாக்குவதற்கும், தரவு நுண்ணறிவுகளைத் திறப்பதற்கும் AI அல்காரிதம்கள் மற்றும் அமைப்புகளை வடிவமைத்து, உருவாக்கவும், AI நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து காணப்படுகிறது .

2. தரவு விஞ்ஞானி

தரவு சார்ந்த முடிவுகளை எடுக்கவும், போக்குகளை கணிக்கவும், வணிக விளைவுகளை மேம்படுத்தவும், தரவு பகுப்பாய்வுகளில் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்வதாலும் தரவு விஞ்ஞானிகள் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

3. சைபர் பாதுகாப்பு நிபுணர்

பல நிறுவனங்கள் தங்களுடைய செயல்பாடுகளை ஆன்லைனில் மாற்றுவதால் சைபர் தாக்குதல் ஆபத்து அதிகரித்த வண்ணம் இருப்பதாலும் முக்கியமான தரவை பாதுகாக்கவும் பாதுகாப்பு மீறல்களை தடுக்கவும் நெட்வொர்க்குகளை சாத்தியமான அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும் சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் தேவை அதிக அளவில் உள்ளது.

4. சுகாதார வல்லுநர்கள்

டெலிமெடிசின், ஹெல்த் ஆப்ஸ் மற்றும் AI-உதவியுடன் புதிய கண்டுபிடிப்புகள் ஹெல்த் கேர் துறையில் மாற்றம் அடைந்துள்ளதால் இவற்றை வழி நடத்த தரவு ஆய்வாளர்கள், மெய்நிகர் பராமரிப்பு வழங்குநர்கள் மற்றும் சுகாதார ஐடி நிபுணர்கள் மற்றும் டிஜிட்டல் சுகாதார வல்லுநர்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது .

இதையும் படியுங்கள்:
இந்தியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்களா?
Job Opportunities

5. நிலைத்தன்மை மேலாளர்

சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதிப்படுத்தவும், நிலையான முயற்சிகளுக்கு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் நிலைத்தன்மை மேலாளர்களின் பங்கு அதிகம் என்பதால் அவர்களுக்கான தேவை அதிகரித்தே காணப்படுகிறது.

6. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்ப வல்லுநர்

சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை ஆற்றல் துறைகளில் பசுமை எரிசக்தி ஆதாரங்களை புதுப்பிப்பதற்காகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கும் பராமரித்தல் மற்றும் பழுது பார்ப்பதற்காகவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

7. பிளாக்செயின் டெவலப்பர்

பிளாக்செயின், பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸிகளின் அடிப்படையிலான தொழில்நுட்பம், டிஜிட்டல் நாணயங்களுக்கு அப்பாற்பட்டு வளர்ச்சியடைந்துள்ளதால் சப்ளை செயின், ஹெல்த்கேர் மற்றும் ஃபைனான்ஸ் போன்ற துறைகளில் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான பிளாக்செயின் டெவலப்பர்களுக்கான தேவையை அதிகமாக்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
வேலை பளுவால் இவ்வளவு பிரச்சனை வருமா? 
Job Opportunities

8. கண்டண்ட் கிரியேட்டர் / இன்ஃப்ளூயன்ஸர்

குறிப்பாக சமூக ஊடகங்கள், பிளாகிங் மற்றும் வீடியோ தயாரிப்பு ஆகிய துறைகளில் கண்டண்ட் கிரியேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. தங்களின் சந்தை தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு பல நிறுவனங்களும் இன்ஃப்ளூயன்ஸர்களையே நாடி வருவதால் ஒரு சட்டபூர்வமான வாழ்க்கை பாதையாகவே மாறி உள்ளது.

மேற்கண்ட எட்டு வேலை வாய்ப்புகள் தற்போதைய நவீன யுகத்தில் கொட்டிக் கிடக்கின்றன என்பதில் சற்றும் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com