நீங்கள் யாருடைய சந்தோசத்திற்குக் காரணமாக இருக்கிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் மிகவும் அழகாகத் தெரிவீர்கள். அதனால் உங்களுக்கு யாரையாவது பிடித்திருந்தால், அவர்களைக் கவர வேண்டும் என்று ஆசைப்பட்டால், முதலில் நீங்கள் அவர்களைச் சந்தோஷமாக வைத்திருங்கள். பின்னர் தானாகவே அவர் உங்களை விரும்புவார்.
மகிழ்ச்சிக்கான சைக்காலஜி
சரியான தூக்கம் உங்களுக்கு இல்லை என்றால் உங்கள் மனநிலை இயல்பாக இருக்காது. உங்களுக்கு அதிக கோபமும் எரிச்சலும் ஏற்படும். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க நினைத்தால் முறையாக 7 - 8 மணி நேரம் உறங்க வேண்டும். அப்படித் தூங்கினாலே நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
உண்மை பேசும் நபர்களுக்கான சைக்காலஜி
உள்ளத்தில் உள்ளதை அப்படியே கூறும் நபர்களா நீங்கள். உங்களுக்கு நண்பர்கள் மிகக் குறைவாகவே இருப்பர். ஆனால், உங்கள் உடன் இருக்கும் சிலர் உள்ளே ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் மற்றவர்களைப் பார்த்தால் நடிப்பார்கள். அவர்களுக்கு அதிகம் நண்பர்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட நபர்களுக்குத்தான் இன்று காலம் உள்ளது. இதை புரிந்துகொண்டால் நாம் உஷாராகி விடுவோம்.
மனக்கவலை தீருவதற்கான சைக்காலஜி
பெரும்பாலான பெண்கள் தங்களுக்குக் கவலை ஏற்பட்டால் அதனை அழுது தீர்த்துவிடுகிறார்கள். இதனால் 80% பெண்கள் கவலையில் இருந்து விடுபடுகிறார்கள். ஆனால் 27% ஆண்கள் மட்டுமே அழுகையின் மூலம் தங்கள் கவலைகளைத் தீர்த்துக்கொள்கிறார்கள். மற்ற ஆண்கள் அழுவதும் இல்லை. மனக்கவலையில் இருந்து விடுபடுவதும் இல்லை. ஆண்களும் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று அழுகை என்பது இயலாமை இல்லை. மனக்கவலையின் அருமருந்து.
காதல் வெற்றி அடைவதற்கான சைக்காலஜி
காதலில் வெற்றி பெரும் மக்கள் பெரும்பாலும்
பள்ளிப் பருவத்திலிருந்து காதலிப்பவர்களாகவே இருக்கிறார்கள். காதலில் வெற்றி பெறுபவர்கள் நூற்றுக்கு 92% பேர் பள்ளியிலிருந்து காதலித்ததாக ஆய்வின் மூலம் அறியப்படுகிறது.
இந்த ஐந்து சைக்காலஜி உண்மைகளை நீங்கள் தெரிந்து வைத்திருக்கலாம். இல்லையெனில் இனியாவது சிந்தியுங்கள்!