
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய வேலைகள் அனைத்தும் சுலபமாகிவிட்டன. இது ஒருபக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் AI போன்றவற்றின் ஆதிக்கத்தால் மூளையை பயன்படுத்துவது, யோசிப்பது, ஞாபகம் வைத்துக் கொள்வது போன்ற மனிதர்களுடைய முக்கியமான சிந்திக்கும் திறனையே குறைக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனால் மனிதர்களின் மூளை மழுங்கி யோசிக்கும் திறனே யோய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
MIT இன்ஸ்டிட்யூட் செய்த ஆராய்ச்சியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் தெரிய வந்துள்ளது. இதற்கு முதலில் 54 பேரை மூன்று குரூப்பாக பிரித்து கட்டுரைகள் எழுத சொல்லியிருக்கிறார்கள். அதில் முதல் குரூப்பை யோசித்து எழுத சொல்லியிருக்கிறார்கள். இரண்டாவது குரூப்பை கூகுளில் தேடி எழுத சொல்லியிருக்கிறார்கள். மூன்றாவது குரூப்பை ChatGPT பயன்படுத்தி கட்டுரையை காப்பி செய்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
இந்த ஆராய்ச்சியில் இருந்து என்ன தெரிய வந்துள்ளது என்றால், ChatGPT ஐ பயன்படுத்தி எழுதுவோருக்கு மூளை நிறைய நேரம் பெரிதாக இந்த செயலில் ஈடுபடுவதேயில்லை. இதனால் நாளடைவில் அவர்கள் கற்றுக்கொள்ளும் திறனும், யோசிக்கும் திறனும் குறைந்துவிட்டது. அதிகமாக ChatGPT ஐ பயன்படுத்துவதால் சிக்கலான மற்றும் சவாலான பணிகளை செய்வதில் மூளை பின்தங்கிவிடும். ChatGPT ஐ பயன்படுத்தி கட்டுரை எழுதப்படும் போது அந்த படைப்பின் மீதான உரிமை உணர்வை எழுத்தாளர்கள் குறைவாக உணர்கிறார்கள். இவர்களுக்கு படைப்பாற்றல் மற்றும் புதுமையாக யோசிக்க வேண்டும் என்ற திறன் குறைகிறது.
அதன் பிறகு அவர்களால் சாதாரணமாக யோசித்து எழுதுவது கூட கடினமாக இருக்கிறது. கிரியேட்டிவ்வாக யோசிப்பது(Creativity), மெம்மரி (Memory), கான்சென்டிரேஷன்(Concentration) போன்றவற்றில் தோய்வு ஏற்படுட்டுள்ளது. தாங்கள் எழுதிய கட்டுரையில் இருக்கும் வரிகளையே நினைவு வைத்துக்கொள்ள முடியாதவர்களாய் இருக்கிறார்கள் ChatGPT பயன்படுத்தி எழுதியவர்கள். தற்போது சிறு குழந்தைகள் கூட ஏதாவது எழுத வேண்டும் என்றால் உடனேயே ChatGPT ஐ பார்த்து எழுத வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
இப்படி செய்தால் வளரும் குழந்தைகளுக்கு கூட சாதாரணமாக யோசித்து எழுதக்கூடிய திறன் போய்விடும். AI நமக்கு பல விதத்தில் உதவியாக இருந்தாலும், இது சுலபமாக எல்லாவற்றையும் செய்துவிடுவதால் நாளடைவில் யோசிக்கும் திறன் கூட போய்விடுமோ? என்றொரு பயம் வந்துள்ளது.
காலப்போக்கில் மனிதர்கள் யோசிப்பதையே நிறுத்திவிட்டால் Machine நம்மை கட்டுப்படுத்தும் நிலை வந்துவிடும். இதுப்போன்ற AI பயன்படுத்தும் போது நமக்கு உதவிக்கு வைத்துக்கொள்ளலாமே தவிர, மூளை செய்ய வேண்டிய அனைத்து செயலையும் இதற்கு விட்டுக் கொடுத்து அதை சார்ந்து இருப்பது தவறாகும்.
உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு AI Tools ஐ சரியான முறையில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லிக் கொடுங்கள். வளரும் குழந்தைகளுக்கு சொந்தமாக யோசிக்கும் திறனைக் கற்றுக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகள் வைத்திருப்பவர்கள் கட்டாயம் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.