வாஷிங் மெஷின்கள் வாங்கலாமா? - கண்ணை கவரும் புதுப்புது மாடல்கள்... எதை வாங்கலாம்?

தற்போது அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்ட வாஷிங்மெஷின்களில் உங்களுக்கு ஏற்றது எது என்பதை தெரிந்து கொள்வோமா?
Washing Machine
Washing Machine
Published on

வாஷிங் மெஷின் எனும் சலவை இயந்திரம், துணிகளைச் சலவை செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு வீட்டு உபகரணமாகும். இது தற்போது அனைத்து வீடுகளிலும் இருக்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. இது துணிகளைச் சலவை செய்வதற்கான செயல்முறையை தானியங்கி ஆக்குகிறது. நேரத்தை மிச்சப்படுத்தி, வேலையை சுலபமாக்கக்கூடியதாக இருப்பதால் பெண்களிடையே இதற்கு மவுசு அதிகம். அதேசமயம் உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ற சலவை இயந்திரத்தை தேர்ந்தெடுத்து வாங்குவதில் கவனமுடன் இருக்க வேண்டும்.

அந்த வகையில் வாஷிங் மெஷின்களில் நிறைய வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும், ஒவ்வொரு இயக்க ஆற்றலுடன் தயாராகி இருக்கிறது. அவை டாப் லோடு, பிரண்ட் லோட், மற்றும் செமி ஆட்டோமேட்டிக் என பிரிக்கப்படுகின்றன. இதில் எந்த வாஷிங்மெஷின் உங்களுக்கு ஏற்றது என்பதை தெரிந்து கொள்வோமா..?

செமி ஆட்டோமேட்டிக்:

இந்த வகையில் துணிகளைச் சலவை செய்யும் செயல்முறைக்கு சில செயல்பாடுகளைத் தனியாகச் செய்ய வேண்டியிருக்கும் இயந்திரம்.

இந்த வாஷிங் மெஷினில், இரு பகுதிகள் இருக்கும். ஒன்று தண்ணீர் நிரப்பி துணிகளை துவைத்து எடுக்கவும், மற்றொன்று துவைத்து முடித்த துணிகளை உலர்த்தவும் உதவும். தண்ணீர் நிரப்புவது, ஊற வைப்பது, துவைப்பது, சலவை செய்ததன் மூலம் அசுத்தமாக மாறிய தண்ணீரை அப்புறப்படுத்துவது, துவைத்த துணியை ஒரு டப்பில் இருந்து மற்றொரு டப்பிற்கு மாற்றி உலர்த்துவது... என எல்லா வேலைகளையும் அருகில் இருந்து நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செய்யவேண்டும். முழு தானியங்கி வாஷிங் மெஷின்களை விட குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகிறது. பயன்படுத்துவதற்கு எளிதானது. தற்போது சில செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்கள், தண்ணீரை சேமிக்கும் அம்சங்களோடு வருகின்றன.

ஆனால் இதில் துணிகளைத் துவைக்க அதிக நேரமாகும் மற்றும் துவைக்கும் போது சத்தம் அதிகமாக இருக்கும் போன்ற சில குறைபாடுகள் உள்ளது. செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின், பட்ஜெட் குறைவாக உள்ளவர்கள் மற்றும் துணி துவைக்கும் இயந்திரத்தை அதிக அளவில் பயன்படுத்தாதவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

முழுக்க முழுக்க வாஷிங் மெஷினில்தான் துவைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. விரும்பிய செயல்பாடுகளை மட்டும்கூட செய்யலாம். செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின், முழு தானியங்கி வாஷிங் மெஷின்களை விட விலை குறைவு ஆகும். செமி ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷின் ஆரம்ப விலை ரூ.7,999.

டாப் லோடு:

டாப் லோடு வாஷிங் மெஷின் என்பது, துணிகளை மேல் பக்கமாக உள்ளே போட்டு, துணிகளை துவைக்கும் இயந்திரம் ஆகும். இதை முழு ஆட்டோமேட்டிக், டாப் லோடு வாஷிங்மெஷின்... என இதை எப்படி வேண்டுமானாலும் கூறலாம். இதில் ஆடைகளை நிரப்பி, லிக்விட் டிடெர்ஜென்டை நிரப்பினால் போதும், மற்றபடி ஊற வைப்பது, துவைப்பது, உலர்த்துவது... என எல்லா வேலைகளையும் உங்களது துணையின்றியே செய்து முடித்துவிடும். துணி வகைகளுக்கு ஏற்ப இதில் நிறைய புரோகிராம் இருக்கும்.

அதை முன்கூட்டியே செட் செய்வதன் மூலம், நம் துணையின்றியே துவைத்துவிடும். இது சலவை செய்வதை எளிதாக்குகிறது, குறிப்பாக வயதானவர்கள் அல்லது குனிந்து வேலை செய்ய முடியாதவர்கள் பயன்படுத்த எளிதானது. டாப் லோடு வாஷிங்மெஷின்களில் நிறைய வசதிகள் உள்ளன. இதில் அதிக துணிகளை ஒரே நேரத்தில் துவைக்க முடியும். டாப் லோடு வாஷிங் மெஷின் வாங்கும் போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு சுமை திறனை (kg) தேர்வு செய்யுங்கள். நம்பகத்தன்மை வாய்ந்த பிராண்டுகளைத் தேர்வு செய்யுங்கள். டாப் லோடு வாஷிங்மெஷின்களின் ஆரம்ப விலை ரூ.12,000.

பிரண்ட் லோட்:

இதுவும் டாப் லோட் வாஷிங்மெஷினை போல நம்முடைய துணையின்றியே இயங்கக்கூடியது. ஆனால் பிரண்ட் லோட் வாஷிங்மெஷினுக்கும், டாப் லோடு வாஷிங்மெஷினுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. குறிப்பாக, சலவை செய்யும் முறையிலேயே பல வித்தியாசங்கள் இருக்கின்றன. டாப் லோடு வாஷிங் மெஷினை விட, பிரண்ட் லோட் வாஷிங்மெஷின் துணிகளை மிக சிறப்பாக பராமரித்து சலவை செய்து கொடுக்கும்.

துணிகளை மென்மையாக கையாளும். மிக முக்கியமாக, டாப் லோடு வாஷிங்மெஷின்களை விட மிக குறைந்த தண்ணீரில் மிக சிறப்பாக சலவை செய்து கொடுக்கும்.

அதேபோல மின்சார சேமிப்பு விஷயங்களிலும், பிரென்ட் லோடு சிறப்பானது. டாப் லோடு வாஷிங்மெஷினை விட, பிரண்ட் லோட்டில் சலவை செய்வதற்கான ஆப்ஷன்கள் அதிகம். துணிகளை உலர்த்தி கொடுக்கும் திறனும் அதிகம். இந்த இயந்திரங்கள் பெரும்பாலும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மற்றும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் என்பதால், இவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. பிரண்ட் லோட் இயந்திரங்கள் குறைந்த மின்சாரம் பயன்படுத்துகின்றன. ஏனெனில் அவை துணிகளை சுத்தமாக்குவதற்கு அதிக நேரம் எடுக்காது. இயந்திரத்தின் கதிர் இயக்கத்தினால் துணிகளுக்கு சேதம் ஏற்படாது. மேலும் துணிகள் மென்மையாக துவைக்கப்படுகின்றன. இவ்வளவு ஸ்பெஷலான விஷயங்கள் இருப்பதால்தான், பிரண்ட் லோட் வாஷிங் மெஷின் விலை அதிகமாக இருக்கிறது. ரூ.22,000 முதல் சந்தையில் விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
Washing Machine வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
Washing Machine

எதை வாங்கலாம்..?

இடவசதி இல்லாதவர்கள், செமி ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷினை கொண்டு துணி துவைக்கலாம்.

பிரென்ட் லோட் வாஷிங் மெஷினை உபயோகிக்க அடிக்கடி கீழே குனியவேண்டும். அதனால் முதியவர்கள், முதுகுவலி இருப்பவர்கள் டாப் லோட் வாஷிங் மெஷினை வாங்கலாம்.

மின் துண்டிப்பு சமயங்களில் டாப்லோட் மெஷினில் இருந்து துணிகளை சுலபமாக வெளியில் எடுக்க முடியும். ஆனால் பிரென்ட் லோட்டில் இருந்து வெளியில் எடுப்பது கடினம்.

துணிகளை மென்மையாக பராமரிக்கவும், துணிகளை 80 சதவிகிதம் உலர்த்தவும் விரும்புபவர்கள் பிரென்ட் லோட் வாஷிங்மெஷின்களை தேர்ந்தெடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஃப்ரண்ட்-லோட் Vs டாப்-லோட் வாஷிங் மெஷின்: எது சிறந்தது?
Washing Machine

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com