உலகில் சுறுசுறுப்பான நாடுகள் எவை? இதனால் நமக்கு என்ன பயன்!
இன்றைக்கு வேகமாக வளர்ந்து கொண்டு வரும் இந்த உலகில், வல்லரசு நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் என்று பிரிந்து அவரவர்களுக்கென்று தங்கள் நிலத்திற்கேற்ப பல முன்னேற்றம் மற்றும் மாற்றங்களை அடைந்து வருகிறார்கள். அதில் குறிப்பாக, எந்நேரமும் முன்னேற்றம் மற்றும் புதுமைகளை விரும்பும் சில நாடுகளில் வாழும் மக்கள் 'சுறுசுறுப்பானவர்கள்' என்று பெயர் பெற்றிருப்பார்கள். இந்நிலையை எவ்வாறு அவர்கள் அடைந்திருப்பார்கள், எது அவர்களை ஊக்குவிக்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சுறுசுறுப்பாக இயங்கும் நாடுகள்:
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள், உலகில் சுறுசுறுப்பாக இயங்கும் நாடுகளுக்கு முன்னணி எடுத்துக்காட்டுகளாக அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. இந்த நாடுகள் தொழில்நுட்பம், வணிகம் முதல் சுகாதாரம், கல்வி என்று மனித வாழ்விற்கான பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளன. பல்வேறு மாற்றங்கள் மற்றும் சவால்களுக்கு விரைவாக செயல்படும் திறன் தான் இந்த நாடுகளை உலக அரங்கில் தனித்து காட்டுகிறது.
இந்த நீடித்த சுறுசுறுப்புக்கு எது பங்களிக்கிறது?
மாற்றத்தைத் தழுவுதல்: சுறுசுறுப்பான சமூகங்களில் வாழும் மக்கள் மாற்றத்தை ஓர் அச்சுறுத்தலாக பார்க்காமல் அதை ஒரு வாய்ப்பாக கருதுகின்றனர். இந்த எண்ணம் அவர்களை புதுமை மற்றும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல தொடர்ச்சியாக ஊக்குவிக்கிறது.
தொடர்ச்சியான கற்றல்: வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது சுறுசுறுப்புக்கு ஒரு மூல சொத்தாகும். வேகமாக வளர்ந்து வரும் உலகில், அதற்கேற்றவாறு நிலைத்து நிற்பதற்காக புதிய திறன்களையும், அறிவையும் பெற அங்குள்ள மக்கள் அவரவர்களின் வாழ்வியல் சூழலுக்கேற்ப தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
கூட்டுப் பண்பாடு: குழுப்பணி மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை மிகவும் மதிப்புமிக்கவை, இந்த நாடுகளில் வாழும் அனைவரும் தங்களுக்குக்கான சமூக பொறுப்புணர்வை வளர்ப்பதோடு, பல நேரங்களில் தங்கள் இலக்குகளை ஒன்று சேர்ந்து அடைக்கின்றன.
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கருவிகள் தினசரி வாழ்க்கையில் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களின் உற்பத்தி, புதுமை சார்ந்த விஷயங்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் போன்றவை மேம்படுத்தப்படுகிறது.
மற்ற நாடுகள் இதை எவ்வாறு கடைபிடிக்கலாம்?
கொள்கை மற்றும் உள்கட்டமைப்பு: வேலை மற்றும் கல்வியில் நெகிழ்வுத்தன்மையை ஆதரிக்கும் கொள்கைகளை அரசாங்கங்கள் உருவாக்க வேண்டும், மேலும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் அந்தந்த வாழ்வியல் சூழலுக்கேற்ப எதையும் திணிக்காமல் முதலீடு செய்யலாம்.
கல்வி மற்றும் பயிற்சி: வாழ்நாள் முழுவதும் கற்றலை அனைத்து வயதினருக்கும் வலியுறுத்துவது மற்றும் அதற்கேற்ப கல்விக்கான அணுகலை தொடர்ந்து வழங்குவதால், தனிநபர் முதல் அனைவரையும் புதிய சவால்களை ஏற்க அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தோடு தூண்டலாம்.
கலாச்சார மாற்றம்: மாற்றத்தைத் தழுவிய ஒத்துழைப்பை மதிக்கும் மனநிலையை அனைவரிடமும் ஊக்குவிப்பது, மிகவும் சுறுசுறுப்பான சமூகத்தை வளர்க்க உதவியாக இருக்கும்.
தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது: அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் பல்வேறு செயல்முறைகளை ஒழுங்குபடுத்தி, மக்களின் செயல்திறனை மேம்படுத்தலாம். எனவே அதற்கு உதவும் தொழில் நுட்பங்களை மக்களிடம் விழிப்புணர்வோடு கொண்டு சென்றுஅவற்றைப் பயன்படுத்த வழிவகை செய்யலாம்.
சுறுசுறுப்பு என்பது இங்கு வெறும் வார்த்தை மட்டும் அல்ல, மாறிவரும் உலகில் எவ்வாறு மனிதன் வாழப்போகிறான் என்பதே அதன் அர்த்தம். ஆக சுறுசுறுப்பாக இயங்கும் முன்னணி நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், மேலே குறிப்பிட்ட நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலமும், வளர்ந்து வரும் அல்லது பின்தங்கிய நாடுகள் அவற்றின் தகவமைப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தலாம், ஓர் ஆற்றல் மிக்க முற்போக்கு சிந்தனையில் இயங்கும் ஓர் உலகிற்கு இதுவே வழிவகை செய்யும்.