உங்களுக்குள்ளும் ஒரு 'டைலர் டர்டன்' இருக்கிறான்! அவனை எழுப்ப நீங்க தயாரா?

Fight club
Fight club
Published on

'பைட் கிளப்' (Fight Club) படத்தோட கிளைமாக்ஸை மாதிரி ஒரு குழப்பமான, ஒரு கிளைமாக்ஸை நாம வேற எந்தப் படத்துலயும் பார்த்திருக்க முடியாது. இந்தப் படம் நமக்கு என்ன சொல்ல வருது? அந்த கிளைமாக்ஸ் மூலமா நாம என்ன கத்துக்கலாம்னு வாங்க பார்க்கலாம். இந்தப் படம், பேரு கூட இல்லாத ஒரு சாதாரண 'நரேட்டர்' (Narrator) பற்றியும், அவனுக்குக் கிடைக்கிற 'டைலர் டர்டன்' (Tyler Durden) என்கிற ஒரு விசித்திரமான நண்பனைப் பற்றியும்தான்.

நரேட்டர் Vs டைலர்: நீங்கள் யார்?

நரேட்டர்ங்கிறவன் நம்மல முக்காசி பேர் மாதிரிதான். பிடிக்காத வேலை, திருப்தி இல்லாத வாழ்க்கை, எதுக்கு வாழ்றோம்னே தெரியாத ஒரு குழப்பம். அவனோட ஒரே சந்தோஷம், வீட்டுக்குத் தேவையே இல்லாத புதுப் புதுப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறதுதான். ஆனா, டைலர் டர்டன் அப்படி இல்லை. அவன் எதைப் பற்றியும் கவலைப்படாதவன், நினைச்சதைச் செய்றவன், ரிஸ்க் எடுக்கத் தயங்காதவன். நரேட்டர் எப்படி வாழணும்னு ஆசைப்படுறானோ, அதோட மொத்த உருவம்தான் டைலர்.

படத்தோட மிகப்பெரிய ட்விஸ்ட்டே, நரேட்டரும் டைலரும் ஒருத்தர் இல்லை, ரெண்டு பேருமே ஒரு ஆள்தான்ங்கிறதுதான். ஆமாம், நரேட்டர் தனக்குள்ளேயே டைலர் டர்டன்கிற ஒரு கற்பனையான கேரக்டரை உருவாக்கிக்கிறான். சமுதாயத்தோட கட்டுப்பாடுகளால ஒடுக்கப்பட்ட நரேட்டர், தனக்கு இருக்கிற கோபத்தையும், ஆசைகளையும் டைலர்ங்கிற ஒரு மாஸ்க் போட்டுக்கிட்டு நிறைவேத்திக்கிறான்.

பைட் கிளப்பின் உண்மையான அர்த்தம்!

பைட் கிளப்ங்கிறது சும்மா ரெண்டு பேர் அடிச்சுக்கிற இடம் மட்டும் இல்லை. அதுவரைக்கும் சமுதாயத்துக்காக நடிச்சுக்கிட்டு இருந்த ஆண்கள், அங்கேதான் தங்களோட உண்மையான கோபத்தையும், வலியையும் வெளிப்படுத்துறாங்க. வலி மிகுந்த ஒரு வாழ்க்கையை ஏத்துக்கிறதுதான் உண்மையான சந்தோஷம்னு அவங்க கத்துக்குறாங்க. ஜிம்முக்குப் போய் உடம்பை ஏத்துறதை விட, இப்படி அடிச்சுக்கிறதன் மூலமா அவங்க ஒரு உண்மையான உணர்வை அடையறாங்க.

ஆனா, டைலரோட திட்டம் வெறும் சண்டை போடுறது இல்லை. தேவையே இல்லாத பொருட்களை நம்ம தலையில கட்டி, நம்மளைக் கடன்காரனாக்கி, பிடிக்காத வேலையைச் செய்ய வைக்கிற இந்த கார்ப்பரேட் சமூகத்தையே அழிக்கணும்ங்கிறதுதான் அவனோட பிளான். அதனாலதான் அவன் கிரெடிட் கார்டு கம்பெனிகளை வெடிச்சுத் தகர்க்க நினைக்கிறான்.

இதையும் படியுங்கள்:
உள்ளத்தை உயர்த்தும் 5 கற்பனை சக்திகள்!
Fight club

கடைசியில, நரேட்டர் தன்னோட கற்பனைக் கேரக்டரான டைலரை துப்பாக்கியால சுட்டு, அவனை அழிச்சிடுறான். அவன் எதுக்காக டைலரா மாற முயற்சி செஞ்சானோ, அந்த மார்லாவுக்கு (Marla), அவன் நரேட்டரா, அதாவது அவனாவே இருந்தாலே பிடிக்கும்ங்கிற உண்மை அவனுக்குப் புரியுது. நாமளும் அப்படித்தான். மத்தவங்களுக்குப் பிடிச்ச மாதிரி வாழணும்னு நினைச்சு, நம்ம உண்மையான முகத்தை மறைச்சுக்கிட்டு இருக்கோம்.

படம் முடியும்போது, நரேட்டரும் மார்லாவும் கை கோர்த்துக்கிட்டு, கிரெடிட் கார்டு கம்பெனி பில்டிங்குகள் ஒண்ணொண்ணா வெடிச்சுச் சிதறுறதைப் பார்த்துட்டு நிப்பாங்க. இதுக்கு என்ன அர்த்தம்னா, நம்ம வாழ்க்கையைக் கட்டுப்படுத்துற அந்தப் பொய்யான விஷயங்களை நாம அழிச்சிட்டு, ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கணும்ங்கிறதுதான். 

நம்ம எல்லாருக்குள்ளயும் ஒரு டைலர் டர்டன் இருக்கான். அவனை முழுசா அழிச்சிடவும் கூடாது, முழுசா அவன் கட்டுப்பாட்டுல போயிடவும் கூடாது. ரெண்டுக்கும் நடுவுல ஒரு சமநிலையான வாழ்க்கையை வாழ்றதுதான் உண்மையான விடுதலை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com