வெளிநாட்டுப் பயணிகளின் சொர்க்கம்: கோவா கடற்கரை!

payanam articles
Goa beach
Published on

கோவா சுற்றுலா கடற்கரை பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. 2004 ஆம் ஆண்டு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் நாலு லட்சம் பேர் அயல் நாட்டினர். ஆண்டுதோறும் ரஷ்யா பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.  2013இல் ரஷ்யாவின் சுற்றுலா பயணிகள் சுமார் மூன்று லட்சம் பேர் சுற்றி பார்க்க வந்தார்கள். 

கோவாவில் இரண்டு விதமான சுற்றுலா காலங்களை கொண்டது. ஒன்று கோடை காலம். மற்றொன்று குளிர் காலம். குளிர்காலத்தில் அயல்நாட்டினர் அதிகம் பேர் வருகை தருகிறார்கள். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்தவர்கள் அதிக அளவில் வருவார்கள். கோடை காலத்தில் இந்தியாவைச் சார்ந்தவர்கள் அதிக அளவில் இங்கு சுற்றிப் பார்க்க வருகிறார்கள். இந்தியர்கள் அநேகமாக கோடை விடுமுறையில்தான் அதிக அளவில் வருகின்றனர்.

இங்கு மேற்கு கடற்கரை பகுதியில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா எல்லையில் உள்ள சிறிய மாநிலம்தான் கோவா. சுமார் 450 ஆண்டு காலம் போர்ச்சுகீசியர்கள் இந்த பகுதியை ஆண்டு வந்தனர். எனவே இந்த பகுதி முழுவதும் லத்தின் கலாச்சாரத்தை பின்பற்றி உள்ளது. போர்ச்சுகீசியர்கள் அதிகம் உள்ள பகுதியாக பேசப்படுகிறது. எனவே அயல்நாட்டு மக்களை அதிக அளவில் இந்த கோவா சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது என்றால் மிகையாகாது. 

கடற்கரை தேவாலயம் கோவில்கள் என பல உள்ளது. இங்குள்ள பாம் இயேசு தேவாலயம், அகுடா கோட்டை போன்றவை மிகப் பிரபலமாக உள்ளது. சமீபத்தில் புகழ்பெற்ற மெழுகு சிலை அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மசினகுடிக்குச் செல்ல திட்டமா? இந்த ப்ளான் படி போனா பயணம் சூப்பர்!
payanam articles

இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இதன் அழகில் மயங்கி இங்கேயே மாதக்கணக்கில் தங்கி விடுகின்றனர். இந்த கடற்கரையின் நீளம் சுமார் 77 மைல்கள். கரையோரப் பகுதியில் ஆங்காங்கே கடற்கரை சுற்றுலா பகுதிகள் உள்ளது 

இவை வடக்கு கோவா, தெற்கு கோவா என இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளிலும் எண்ணற்ற குடில்கள் வாடகைக்கு கிடைக்கும் சுமார் ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கிறது.  எல்லா குடில்களிலும் சுவையான மீன் சாப்பாடு மதுபானங்கள் தாராளமாக கிடைக்கிறது. சில குடில்களில் கேளிக்கை விருந்துகளும் நடைபெறும். குறிப்பாக ரஷ்யா பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் உயர்தரமான குடில்களில் தங்குகிறார்கள்.

கோவா கடற்கரை பகுதிகளில் தண்ணீர் விளையாட்டுக்கள் மிகப் பிரபலம். பாராசெய்லிங் ஜெட் ஸ்கிங் போன்ற தண்ணீர் விளையாட்டுக்கள் மிகப் பிரபலமாக உள்ளது. 

வடக்கு கோவா கடற்கரை பகுதிகளில் கலங்குட் கடற்கரை கண்டோலம் கடற்கரை பாக கடற்கரை, பனாஜி கடற்கரை மீரா மா கடற்கரை டோனா பவ்லா கடற்கரை போன்றவை மிகப் பிரபலமான கடற்கரை பகுதியாகும். இந்த பகுதிகள் அனைத்திலும் உள்ள குடில்களில் சிறப்பான மீன் சாப்பாடு மதுபானங்களும் தரமான முறையில் கிடைக்கிறது. இந்தப் பகுதிகளில் நிறைய சினிமா சூட்டிங் நடைபெறுகிறது 

தெற்கு கோவா கடற்கரை பகுதிகளை எடுத்துக் கொண்டால் கோல்வா கடற்கரை முழுவதும் வெண் மணல் நிரம்பி காணப்படுகிறது. இது மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இவை தவிர பாலோலும் கடற்கரை அக்கௌன்டா கடற்கரை 

போன்றவையும் உள்ளது. இங்கு உள்ள பாம் ஜீசஸ் பேசிலிக்கா மிகவும் புகழ் பெற்றது. மிகச்சிறந்த தேவாலயமாக கருதப்படுகிறது. இங்கு புனித பிரான்சிஸ் சேவியர் உடல் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

payanam articles
Goa tourist articles

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரான்சிஸ் சேவியர் உடல் வழிபாட்டுக்காகவும் பொதுமக்கள் பார்வைக்காகவும் வைக்கப்படும். இந்தப் பகுதியில் கோப்ரா கோர் ஐயன் அகுடா போன்ற புகழ்பெற்ற கோட்டைகள் உள்ளன. பனாஜி கடற்கரை பகுதியில்  கடற்படை அருங்காட்சியகம் உள்ளது. 

வெளிநாட்டவர்கள் குளிர்காலத்திலும் உள்நாட்டு பகுதியைச் சார்ந்தவர்கள் கோடை காலத்திலும் கோவாவிற்கு அதிக அளவில் சுற்றுலா வருகிறார்கள். இதனால் கோவா கடற்கரை ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. கோடை காலத்தில் சன் பாத் எடுப்பது மிகவும் பிரபலமாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com