இது தெரிந்தால் எந்த அவமானத்தில் இருந்தும் மீண்டு வரலாம்! 

humiliation
Know this and recover from any humiliation!
Published on

“வாழ்க்கைன்னா சில அடிகள் விழதான் செய்யும்” என்பது போல, சில சமயங்களில் எதிர்பாராத விதமாக நாம் அவமானப்படுத்தப்படலாம். அது நம்மை மனதளவில் மிகவும் பாதிக்கும். ஆனால், இத்தகைய அவமானங்களைந் தாண்டினால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியின் உச்சத்தை அடைய முடியும். இந்த பதிவில் எந்த அவமானத்தில் இருந்தும் மீண்டு வருவதற்கான வழிகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

அவமானங்களில் இருந்து மீண்டு வருவதற்கான வழிகள்: 

அவமானம் என்பது நம் மனதை மிகவும் பாதிக்கும் ஒன்று. இதனால் மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, உங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். போதுமான தூக்கம், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி செய்வது மூலமாக உடலையும், மனதையும் திடப்படுத்தி அவமான உணர்வுகளை விலக்கி வைக்க முடியும். 

அவமானம் நம் நம்பிக்கையை உடைக்கக்கூடியது. ஆனால், நம் மீது கொண்ட நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழக்கக்கூடாது. எவ்வளவு அவமானம் அடைந்தாலும் நம்மிடம் உள்ள திறமைகள், வலிமைகளை நினைத்துப் பார்த்து, அதிலிருந்து நிச்சயம் நம்மால் மீண்டு வர முடியும் என நம்பிக்கையுடன் இருக்கவும். 

அவமானம் அடைந்தால் ஓடி ஒளியாமல், நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்களின் ஆதரவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 

கடந்த காலத்தில் நடந்த விஷயங்களை நினைத்து வருந்தி கொண்டிருந்தால் எதிர்காலத்தில் முன்னேற முடியாது. எனவே, கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை நோக்கிச் செல்லுங்கள். புதிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நோக்கி உழைக்கத் தொடங்குங்கள். 

நம் வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களும் நமக்கு மிகச் சிறந்த பாடங்களை கற்றுத் தருகின்றன. அவமானங்களையும் சிறந்த பாடமாகப் பார்க்கவும். இந்த அனுபவத்தின் மூலமாக எதிர்காலத்தில் அதே தவறுகளை செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். 

இதையும் படியுங்கள்:
"The Boys" தொடர் நமக்கு கற்றுத்தரும் வாழ்க்கை பாடங்கள்! 
humiliation

நமது எண்ணங்கள்தான் நம் வாழ்க்கையை கட்டமைக்கின்றன. எனவே, எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்கவும். உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்து உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். அதேபோல உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாராட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

இவ்வாறு நீங்கள் அவமானங்களை நினைத்து வருந்தாமல், அதை ஒரு உந்துதலாக நினைத்து மேலே குறிப்பிட்ட விஷயங்களை முயற்சித்தால், நிச்சயம் அந்த மோசமான உணர்விலிருந்து வெளிவர முடியும். வாழ்க்கையில் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்பதை நம்பி முன்னேறிச் செல்லுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com