

எந்த ஒரு காரியத்துக்கும் திட்டமிடல் மிகவும் அவசியம். அதுவும் வாழ்வில் லட்சியத்தை அடைய விருப்பமான இலக்குகளை அடைய திட்டமிடல் என்பது மிக மிக முக்கியம். ஆனால் திட்டமிட்டு கொண்டே இருந்து செயலில் இறங்காவிட்டால் ஒரு பயனும் இல்லை. எனவே அதீத திட்டமிடலை நிறுத்திவிட்டு செயலில் இறங்கி வேலை செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம் காண்போம்.
அதீத திட்டமிடலின் தீமைகள்.
அதீத திட்டமிடல் என்பது ஒரு வகையான பொறி. அதற்குள் சிக்கிவிட்டால் எந்த ஒரு செயலையும் செய்ய விடாமல் தடுக்கும். முயற்சிகள் தவறாகப் போய்விடுமோ என்ற பயத்தையும் அது தருகிறது. அந்தப் பயம் உங்களை உறுதியற்றவராக செய்துவிடும். மேலும் அதீத திட்டமிடல் அதீத சிந்தனைக்கு வழிவகுக்கும். இப்படி ஆகிவிடுமோ அப்படி ஆகிவிடுமோ என்று நினைத்து எந்த செயலையும் செய்ய முடியாமலேயே அல்லது தொடங்க முடியாமலேயே போய்விடும்.
அதீத திட்டமிடுதலை திட்டமிடுதலை நிறுத்திவிட்டு செயலில் இறங்குவது எப்படி?
முதலில் வரப்போகும் விளைவுகளைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு ஒரு வேலையை உடனே தொடங்குங்கள். திட்டமிடுதலுக்கு முதலில் ஒரு கால வரையறை வைத்துக் கொள்ளுங்கள். அதைப்பற்றி ஒரு அவுட்லைன் உருவாக்கிக் கொள்ளுங்கள். அந்த செயலை எப்போது செய்யப் போகிறீர்கள் என்று ஒரு தேதியையும் நேரத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். தொடங்குங்கள்.
அன்று ஒரு வேலையை தொடங்கும் முன்பு காலையில் ஒரு 15 நிமிடம் மட்டும் ஒதுக்கி அன்று என்ன செய்யப் போகிறோம் என்று தீர்மானித்துக் கொண்டு, செயலில் ஈடுபடுங்கள்.
இந்த ப்ராஜெக்டை அல்லது இந்த இலக்கை இந்த தேதிக்குள் முடிப்பேன் என்று ஒரு டெட்லைன், ஒரு முடிவு தேதி குறித்து, வரையறை செய்து கொள்ளுங்கள். இதை உங்களுடைய மிகவும் நெருக்கமான அல்லது உங்களது நலம் விரும்புகிறவரிடம் சொல்லி அந்த நாளன்று முடித்து விட்டீர்களா என்று அவர்களை கேட்கச் சொல்லுங்கள்.
இலக்கைஅடைய முயற்சி செய்யும்போது அதனுடைய முடிவை எண்ணி கவலைப்பட வேண்டாம். அதற்கான திட்டமிடலை அழகா செய்து முடித்திருப்பீர்கள். அந்த நாள், அல்லது அந்த வாரத்திற்கு மட்டும் நீங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று தீர்மானித்தால் போதும். உங்களுடைய பயணத்தில் அடுத்தது என்ன என்று தீர்மானித்துக் கொண்டு அதை நோக்கி முன்னேறுங்கள். மொத்த இலக்கின், மொத்த திட்டத்தையும் போட்டு ஒரே நாளில் குழப்பிக்கொள்ள வேண்டாம், (பெர்ஃபெக்க்ஷன்) பூரணத்துவம் பற்றி கவலைப்பட வேண்டாம்.
எந்த வேலையிலும் பூரணத்துவத்தை எண்ணி வேலை செய்தால் எந்த வேலையையும் நன்றாக செய்ய முடியாது. உலகத்தில் எதுவுமே 100 சதவீதம் பரிபூரணமாக இருக்காது. செய்யும் சின்ன சின்ன வேலைகளை கூட சிறப்பாக செய்யுங்கள். அதற்கான வழிமுறைகளும் உதவிகளும் தன்னாலே தேடிவரும். செயலில் இறங்குங்கள். வெற்றி உறுதி.
நீங்கள் திட்டமிட்டபடி செயல்கள் நடக்காமல் போனால் அதற்காக கவலைப்பட வேண்டாம் அதற்கு ஏற்ற மாற்று வழிகள் கண்டிப்பாக இருக்கும். அதை கண்டுபிடித்து செயல்படுத்துங்கள்.