
உற்சாக இசையைக் கேட்டால் மனதில் மகிழ்ச்சி பொங்கும் என்பதை அமெரிக்காவின் மிசெளரி பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஓர் ஆய்வு மூலம் நிரூபித்துள்ளனர்.
உற்சாகமான இசையானது, செவிகள் வழியே புகுந்து மனதை நிறையச் செய்து டென்ஷனையும், கவலை களையும் துரத்தியடித்து விடும். இசையோடு நடனமும் ஆடினால் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்குமாம்.
நடைப்பயிற்சியின்போது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறைகிறது. பதற்றம் தணிகிறது. மனதை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. வாக்கிங் போகும்போது இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். தூய்மையான காற்றை சுவாசிக்கலாம்.
நிறைய நெருக்கமான நண்பர்களை கொண்டிருப் பவர்களைக் கவலையும், மறதிநோயும் தாக்குவதில்லை. கைகளால் கடிதம் எழுதினால் உற்சாகம் அடையலாம்.
பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களைப் பார்த்து ரசித்தால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பளிச்சென உடை அணிந்தால் மனது பளிச்சிடும்.
மனதில் ஏதேனும் மென் சோகம் படரும்போது பழைய புகைப்படங்களை எடுத்துப் பார்த்து நினைவுகளை அசை போடுங்கள். அது பல இனிய நினைவுகளை கிளர்ந்தெழச் செய்யும். மனம் குழந்தையாகும்.
மற்றவர்களுக்கு இயன்றவரையில் சிறுசிறு உதவிகளைச் செய்தால் மனதில் சந்தோஷம் உண்டாகும்.
புத்தகங்களை நம் நெருங்கிய நண்பர்கள். நல்ல புத்தகத்தைப் படித்தால் மன அழுத்தம் குறையும்.