குறைவாக பேசுவதே சிறப்பு!

person walking
What kind of people talk less?
Published on

மனித வாழ்வில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள பேச்சு மிகவும் முக்கியமான கருவி. ஆனால் சிலர் மிகவும் குறைவாகவே பேசுவார்கள். இவர்களை நாம் அமைதியானவர்கள், சிந்தனை மிக்கவர்கள் அல்லது கூச்சசுபாவம் உடையவர்கள் என்று அழைப்போம். ஆனால், குறைவாக பேசுவதன் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். இந்தப் பதிவில் குறைவாகப் பேசுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அதனால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

குறைவாக பேசுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்? 

குறைவாக பேசுபவர்கள் பொதுவாக அதிகமாக சிந்திக்கும் நபர்களாக இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு சொல்லையும் மிக கவனமாகப் பயன்படுத்துவார்கள்.‌ இவர்களால் மற்றவர்கள் பேசுவதை கவனமாகக் கேட்க முடியும். பிறர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கி அதற்கு ஏற்றவாறு பதில் அளிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

குறைவாகப் பேசுபவர்கள் பெரும்பாலும் தனிமையிலேயே இருப்பார்கள். அவர்களுக்கு தனிமைதான் மகிழ்ச்சி அளிக்கும். அவர்களது எண்ணங்களையும், உணர்வுகளையும் ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 

எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்கும் நபர்களே குறைவாகப் பேசுவார்கள். இவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என எதையும் செய்ய மாட்டார்கள். இவர்கள் செய்யும் எல்லா விஷயங்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். சிலர் கூச்ச சுபாவம் காரணமாகக் குறைவாகப் பேசலாம். ஏனெனில், புதிய சூழல்கள் அவர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தும். 

குறைவாகப் பேசுவதன் நன்மைகள்: 

குறைவாக பேசுபவர்கள் தான் பேசும் ஒவ்வொரு சொல்லையும் பொருள்பட பேசுவதால் அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இவர்கள் மற்றவர்கள் பேசும் போது கவனமாகக் கேட்பதால், பிறர் கருத்துக்களை சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும். 

குறைவாக பேசினாலும் தரமாக பேசுவது ஒருவரின் தொடர்பு கொள்ளும் திறனை அதிகரிக்கும். இது பிறரிடம் எதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவை அதிகரிக்கும். 

இதையும் படியுங்கள்:
பொது மக்களின் வருமானத்தில் பங்கு கேட்காத நாடுகளை பற்றி உங்களுக்குத் தெரியுமா?
person walking

குறைவாக பேசுவதன் மூலம் எந்த ஒரு விஷயத்தையும் பகுத்து ஆராய்ந்து சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். மேலும், இத்தகைய நபர்களால் தனிமையில் அதிக நேரத்தை கழிக்க முடியும் என்பதால், எந்த சூழ்நிலையிலும் இவர்கள் தனித்து வாழும் தன்மையைப் பெற்றிருப்பார்கள். மேலும் குறைவாக பேசுவதால் மன அமைதி கிடைக்கும். இதனால் தேவையில்லாத விவாதங்கள் நடப்பதைத் தவிர்க்கலாம்.

குறைவாக பேசும் அனைவருமே அமைதியாகவும், சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்கள். அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களே அவர்களின் பேச்சு வழக்கத்தை நிர்ணயிக்கின்றன. ஆனால் பொதுவாக குறைவாகப் பேசுபவர்கள் சிந்தனை மிக்கவர்களாகவே இருப்பார்கள் என சொல்லலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com