வாசனை திரவியம் : நன்மையும், தீமையும்!

வாசனை திரவியம் : நன்மையும், தீமையும்!

அக்காலத்தில் வாசனை திரவியம் என்றால் சந்தனம் தான் பிரதானம். பின் அத்தர், ஜவ்வாது என பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போதோ அது தனி உலகமாக, தனி சாம்ராஜ்யமாக நம்மை அடிமைப்படுத்தியுள்ளது.

எப்போதாவது விழாக்கள், விருந்துகளுக்கு போகும் போது உபயோகிக்கப்பட்ட வாசனை திரவியங்கள் இன்று பல நூறு விதமாக வாசனைகளிலும், வடிவங்களிலும் நம்மை மயக்குகின்றன என்றால் அது மிகையில்லை.

பெண்களுக்கு, ஆண்களுக்கு என்றும், மைல்ட், ஹாட் அல்லது ஹார்ட் என்று பல விதங்களில் வேறுபடுகிறது. சாதாரண விலை முதல் பல ஆயிரக்கணக்கான விலை வரை பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

அளவாக பயன்படுத்தும் போது பிரச்சனையில்லை. அதுவே உடல் முழுவதும் அடித்துக் கொள்வது, குறிப்பாக கழுத்து, அக்குள், பிரைவேட் பகுதியில் என வாசனை திரவியங்களை தொடர்ச்சியாக அடித்துக் கொள்வது மிகவும் தவறு என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

கழுத்து, கை பகுதியில் அடிக்கும் போது தோல் எரிச்சல், தடிப்பு போன்ற அலர்ஜி பிரச்சனைகள் வரக்கூடும். அரிப்பை உண்டாக்கி அதை நுகர்வதாலும் தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் என தொல்லைகளைத் தரும்.

கால் பகுதி, முட்டி பகுதியில் அடிப்பது நரம்பு சம்பந்தமான பாதிப்புகளைக் தந்து விடும். நுரையீரல் சம்பந்தமான பாதிப்புகளைக் தந்து விடும். ஆஸ்த்துமா, அலர்ஜி உள்ளவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

காதுகளின் பின்புறம் அடிப்பது தவறான பழக்கம். இதனால் காதில் ஈரப்பதம் குறைந்து வறட்சியை தரும். சரும பாதிப்பை தருவதோடு, தோல் தடித்தல், கருத்து போதல் போன்ற பிரச்சனைகளையும் தரும்.

தொடர்ச்சியாக தரமில்லாத வாசனை திரவியங்களை பயன்படுத்த சரும பிரச்சனைகளை உருவாக்குவதோடு தோல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது என எச்சரிக்கின்றனர்.

இதற்கு தீர்வு தரமான, வாசனை திரவியங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம். நாடித் துடிப்பு உள்ள இடத்திற்கு தள்ளி பெர்ஃப்யூம் அடிப்பதே சரியான முறை. நல்ல வாசனை நம் மோசமான மனநிலையையும் மாற்றும் சக்தி கொண்டது. அளவான விரும்பிய வாசனை திரவியத்தை பயன்படுத்த தூக்க பிரச்சினை, தலைவலி மயக்கம், கோபம் போன்றவற்றை தீர்க்கும் திறன் கொண்டது.

பிடித்த மைல்டான வாசனை திரவியங்கள் நம்மை புத்துணர்ச்சியாக உணர வைப்பதோடு, வியர்வை வாடை போன்றவற்றால் நம்மை தர்மசங்கடத்திலிருந்து காக்கும்.

பெர்ஃப்யூம் அடிக்கும் போது நேரடியாக உடலில் படும்படி அடிக்காமல் துணிகளில் படும்படி உபயோகிக்க வாசனை தருவதுடன், உடலுக்கும் தீங்கு தராது.

பாடி ஸ்ப்ரே, லோஷன் போன்ற எதுவானாலும் தரமான பிராண்டையே உபயோகிக்க நம்மையும், நம் சுற்றுப் புறத்தையும் மணமாக வைத்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com