
பொதுவாக காய்கறிகள், பழங்கள் இவை கெட்டுப் போகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது. ஆனால் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள் என்று சில இருக்கின்றன. அவ்வாறு ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய், தோல் கருத்து விடும்.
கத்தரிக்காயை ஃப்ரிட்ஜில் வைப்பதால், அதன் அமைப்பையும், சுவையையும் சேதப்படுத்தும். அவை அறை வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும்.
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூசணம் பிடிக்க ஆரம்பித்துவிடும்.
பூசணிக்காய், முலாம்பழம் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைப்பதால், அவை சில முக்கிய சத்துக்களை இழந்து விடுகின்றன.
அவகேடோ பழத்தையும் ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. கடைகளில் வாங்கும்போது பழுக்காத நிலையில் இருக்கும் இந்தப் பழம், ஃபிரிட்ஜில் வைத்தால், பழுக்கவே பழுக்காது. மேலும், அதன் சுவையும் மாறிவிடக்கூடும்.
தக்காளியும் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. அதிகக் குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கக்கூடியது.
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களும் ஃபிரிட்ஜில் வைக்கத் தோதானவை அல்ல. அதிகக் குளிரான சூழல், இந்தப் பழங்களின் சிட்ரஸ் அமிலத்தை பாதித்து, சுவையை மாற்றிவிடும்.
ஃபிரிட்ஜில் எப்போதும் வைக்கவே கூடாதது தேன். குளிர்ந்த சூழலில் வைத்திருக்கும்போது அது தனது நிலையை மாற்றிக்கொண்டு, மணல்போலக் கடினமாகவும், சுவை மாறியும் போய்விடும்.
இதேபோல் கிவி பழம், மாங்காய், பப்பாளி ஆகியவற்றையும் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.