மாநாடு.. சிம்புவின் மாஸ்!

மாநாடு.. சிம்புவின் மாஸ்!

.-ராகவ் குமார் 

தமிழ் சினிமாவில் டைம் லூப் வகை சினிமா புதிது! இந்த வகை படங்களை குழப்பம் இல்லாமல் தருவது கடினம். ஆனால் அதை வெற்றிகரமாக சாதித்துள்ளார் 'மாநாடு' படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு.

டைம் லூப் என்பது ஒரு நாளில் ஒரே விஷயம் திரும்ப, திரும்ப நடப்பதாக அமையும். இந்த வகை படங்கள் மேலை நாடுகளில் நிறைய வந்துள்ளது. இதை வெளிப்படையாக ஒரு கேரக்டர் வழியாக  ஒரு காட்சியில்  இயக்குனர் ஒப்புக் கொள்வது பாராட்டப் பட வேண்டிய விஷ்யம். சரி.. கதைக்கு வருவோம்..

துபாயிலிருந்து விமானம் மூலமாக   ஊட்டிக்கு வரும் அப்துல் காலிப் (சிம்பு ) ஒரு இஸ்லாமியர் வீட்டில் நடக்கும் திருமணதை நிறுத்தி அந்த மனப்பெண்ணை கடத்தி தன் நண்பனுக்கு மணம்  முடிக்க முயற்சிக் கிறார்.இதற்கு நடுவே காவல் துறை அதிகாரி தனுஷ்கோடி (எஸ் ஜெ சூர்யா )அப்துலை வைத்து, கட்சி மாநாட்டில்  மாநில முதல்வரை கொலை செய்ய முயற்சிக்கிறார். அப்துலையும் கொன்று விடுகிறரர். மாநாட்டில் நடைபெரும் இந்த கொலை சம்பவம் ஒரே நாளில்  திரும்ப, திரும்ப அப்துலுக்கு நடக்கிறது.இதே போல சம்பவம் காவல் துறை அதிகாரி தனுஷ்கோடிக்கும் நடக்கிறது.

ஏன் இந்த சம்பவங்கள் நடக்கிறது. இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்,முதல்வர் காப்பாற்ற பட்டாரா?இப்படி பல மர்ம முடிச்சுக்களை சிக்கல் இல்லாமல் சொல்லி இருக்கிறார் இயக்குனர். கரணம் தப்பினால் மரணம் என்பதை போல, திரைக்கதையில் கொஞ்சம் கோட்டை விட்டாலும் படம் அதல பாதாளத்திற்கு சென்று விடும் சூழல் உள்ளதால் திரை கதையை நேர்த்தியாக உருவாக்கி உள்ளார்கள். சிம்புவும், எஸ் ஜெ சூர்யாவும் போட்டி போட்டு கொண்டு நடித்து உள்ளார்கள், ஒரு காட்சியில் சிம்பு ஸ்கோர் செய்தால் அடுத்த காட்சியில் சூர்யா ஸ்கோர் செய்கிறார்.துள்ளலான நடிப்பில் அசத்துவதும்,நண்பன் கொலை செய்யப்படும் போது உருகுவதும் என எஸ்.ஜே.சூர்யா அமர்க்களப்படுத்தி இருக்கிறார். இத்தனை நாள் எங்க சார் போனீங்க என்று கேட்க வைக்கிறார்.

ஹீரோ யின் கல்யாணி பிரியதர்சன் சொன்னதை செய்து இருக்கிறார்.ஒய் ஜி மகேந்திரன், எஸ் சந்திர சேகர் என பலரும் சரியான தேர்வு.யுவனின் இசையும், ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப் பதிவும் கை கோர்த்து காதுகளுக்கும், கண்களுக்கும் இனிமை சேர்க்கின்றன.கே எல் பிரவீனின் எடிட்டிங் காட்சியின் பரபரப்பிற்கு வலு சேர்க்கிறது." நீ, அப்புறம் உன் பையன், பேரன்.. இவங்கதான் முதல்வர் சீட்டுக்கு வரணுமா? "என்ற வசனம் சம கால அரசியலை நினைவூட்டுகிறது. கோவை குண்டு வெடிப்பு, அப்பாவி முஸ்லீம் மக்கள் பாதிக்கப்படுவது என்று ஒரு சில விஷயங்களைக் கலந்துகட்டி உருவாக்கப் பட்டுள்ளது மாநாடு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com