மாணவர்களுக்கு பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

மாணவர்களுக்கு பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

தமிழகம் முழுவதும் பரவலாக கொரனோ பாதிப்புகள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் கடந்த 10 நாட்களில் தினசரி தொற்றுகள் எண்ணிக்கை  கணிசமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் 6 முதல் 10 நபர்கள் ஒரே தெருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நிலையில் அவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று நோய்த்தொற்று கண்டறியப்பட்ட அசோக் நகர் பகுதியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் , சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர் …..

இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதாவது:

சென்னையில் மீண்டும் கொரனோ பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் கொரனோ கேர் மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. மேலும்

மாவட்ட வாரியாக பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை கணக்கெடுக்கும் பணியை சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் மாணவர்களுக்கு பள்ளிகளுக்குச் சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் 3-ம் தேதி 15 முதல் 18 வயதுக்குட்பட்ட அவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை போரூரில் தமிழக முதல்வர் மு ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் இதுவரை 45 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது 16 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மீதம் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் குறித்து 31-ம் தேதி நடைபெறும் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்

இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணீயன் தெரிவித்தார். இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:

சென்னையில் 11 இடங்களில் கண்காணிப்பு மையங்கள் உள்ளது.

1913 என்ற எண்ணுக்கு அழைத்தால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட, அறிகுறி உள்ளவர்களை அழைத்து செல்ல 24 வாகனங்கள் மாநகராட்சியில் உள்ளது.

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com