0,00 INR

No products in the cart.

மகரவிளக்கு பூஜை: சபரிமலை ஶ்ரீஐயப்பன் கோயில் நடைதிறப்பு!

சபரிமலையில் ஜனவரி 14ம் தேதி பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதையடுத்து மகரவிளக்கு பூஜைக்காக இன்று முதல் சபரி மலை ஶ்ரீஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் இன்று நடைதிறக்கப் பட்டது. அதையொட்டி இன்று அதிகாலை முதல் பக்தர்கள் வரத் தொடங்கினர்.

இதுகுறித்து தேவஸ்தானம் தெரிவித்ததாவது:

சபரிமலை செல்வதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பெரிய பாதை இன்று அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு ஐயப்ப பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப் பட்டுள்ளது. காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை எருமேலியிலிருந்து கோழிகல் கடவு வழியாக பம்பை செல்லும் பாதையில் தினந்தோறும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப் படுகிறது. அதேபோல் அழுதா நதி, கடவு, முக்குழி பாதை வழியாக பம்பை செல்ல காலை 7 மணி முதல் 12:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். பெருவழி பாதையில் செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு 2 இடங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது கேரள வனத்துறை சார்பில் 8 இடங்களில் உணவு விடுதிகளும் மருத்துவத் துறை சார்பில் நான்கு இடங்களில் அவசரகால மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகளுக்கா நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது இன்று அதிகாலை 4 மணிக்கு ஶ்ரீஐயப்பனுக்கு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஜனவரி 20ம் தேதி வரை இக்கோயில் நடை திறந்திருக்கும் என்றும் ஜனவரி 19ம் தேதி இரவு வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

தமிழக பொறியியல் படிப்புகள்; தரவரிசைப் பட்டியல் வெளியீடு! 

0
தமிழக பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப் பட்டது.  -இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்ததாவது:  தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது....

தங்கம் விலை அதிரடி சரிவு: மக்கள் மகிழ்ச்சி! 

0
தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.   –இதுகுறித்து சென்னை தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்ததாவது:   கடந்த ஆண்டு ஏற்பட்ட...

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி; சென்னையில் ஏற்பாடுகள்! 

0
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதன்முறையாக நடத்தப்பட உள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் வருகிற செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில...

இந்திய கால்பந்து கூட்டமைப்பு உரிமம் ரத்து! 

0
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, தற்காலிகமாக ஃபிபா ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.  இந்திய கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் இந்த கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம்! 

0
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்று நாளை காலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.   –இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...