எஸ். சந்திர மௌலி.இந்திய நாட்டின் பாதுகாப்பு அரணாக 24 X 7 இருந்து வரும் முப்படைகளுக்கு பக்க பலமாக இன்னொரு அமைப்பும் வீர தீரத்துடன் செயல்பட்டு வருகிறது. அதுதான் எல்லை காவல் படை எனப்படும் BSF. அதாவது பார்டர் செக்யூரிடி ஃபோர்ஸ். மேற்கு பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய குஜராத் தொடங்கி, ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிண் சர்வதேச எல்லைப் பகுதிகளில் இவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு துணை ராணுவப் படையாக இதனை மத்திய அரசு 1965 டிசம்பர் முதல் தேதி உருவாக்கியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் இந்தப் படையின் முக்கிய பணி எல்லைப்பகுதிகளில் அன்னியரது ஊடுருவலைப் தடுப்பதும், எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதும் ஆகும்..ராணுவத்தைப் போலவே, எல்லைப் பாதுகாப்புப் படையிலும் ஏராளமான பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் களைக் கொண்டு உருவாக்கப்பட்ட குழுதான் சீமா பவானி. இவர்கள் புல்லட் மோட்டார் சைக்கிளில் சாகசங்கள் செய்யும் பயிற்சி பெற்றவர்கள். 2016ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தில் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தேகன்பூரில் உள்ள BSF அகாடமியின் ஒரு அங்கமான மோட்டார் வாகன மத்திய பள்ளியில் சீமா பவானி குழு துவக்கப்பட்டது..குவாலியரில் பயிற்சி பெற்ற பி.எஸ்.எஃப் BSF வீராங்கனைகள் 2018 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் புரிந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். அந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஓபாமா. ஒபாமா, சீமா பவானி வீராங்கனைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக ஊடங்கங்கள் மூலமாக சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரது கவனத்தையும் ஈர்த்தது. அதன் பின் இந்த ஆண்டு அவர்கள் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொண்டு, மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு சாகசங்களைச் செய்துகாட்டி கலக்கினார்கள்.."பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை; அவர்களால் சாதிக்க முடியும்" என்று எடுத்துக் கட்டும் நோக்கத்துடன் அவர்கள் அண்மையில் 350 சிசி ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளில் டெல்லியில் இருந்து புறப்பட்டு, சுமார் பல்வேறு மாநிலங்கள் வழியாக 5400 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து கன்னியாகுமரியை வந்தடைந்தார்கள். அவர்களுக்கு அண்மையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை வளாகத்தில் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ராயல் என்ஃபீல்டு நிறுவன செயல் இயக்குனர் கோவிந்தராஜன் சீமா பவானி குழுவினரைப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினார்..இப்படி முழுவதும் பெண்கள் கொண்ட ஒரு குழு மோட்டார் சைக்கிளில் நெடும்பயணம் மேற்கொண்டது ஒரு சாதனையாக 'லிம்கா சாதனைப் புத்தகத்தில்' இடம்பெறப் போகிறது..சீமா பவானி குழுவில் இடம்பெற்ற 36 BSF வீராங்கனைகள் இந்த அகில இந்திய சாலை வழி பயணத்தில் பங்கேற்றனர். இந்த பெண்கள் குழுவுக்குத் தலைவர் இன்ஸ்பெக்டர் இமான்ஷு சிரோஹி. சீமா பவானி குழுவின் இந்த விழிப்புணர்வுப் பயணம் கடந்த மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று டெல்லியில் இந்தியா கேட்டில் இருந்து துவக்கி வைக்கப்பட்டது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக மொத்தம் 5400 கி.மீ. தூரம் சாலை வழியே பயணம் செய்து கன்னியாகுமரியை அடைந்தார்கள்..சீமா பவானி குழுவைச் சேர்ந்த பெண்கள் தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்: " எங்களுக்கு, புல்லட் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வதற்குத்தான் பயிற்சி தரப்பட்டிருக்கிறது. எங்களுக்கு நீண்டதூரம் பைக் ஓட்டிய அனுபவம் கிடையாது. ஆனாலும், துணிச்சலுடன் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு, நாங்கள் எங்களை அதற்குத் தயார்ப்படுத்திக் கொண்டோம்..இந்த நெடும்பயணத்தின்போது, தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மலைப்பகுதிகளில், காட்டுப் பகுதிகளில் உள்ள சாலைகள், பள்ளத்தாக்குகள், கரடுமுரடான சாலைப் பகுதிகள், போக்கு வரத்து நெரிசலான சாலைகள் என பலதரப்பட்ட இடங்களில் நாங்கள் புல்லட் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல வேண்டி இருந்தது. குறிப்பாக, மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளில் செல்வது பெரும் சவாலாக இருந்தது. முன்னால் செல்கிற ஒருவர் ஏதாவது சிறு சிக்கல் காரணமாக தடுமாறி, திடீரென பைக்கை நிறுத்தினால் கூட, பின்னால் வருகிறவர் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும், விபத்து ஏற்பட்டு, அதன் காரனமாக அடுத்தடுத்து பின்னால் வரும் வாகனங்களும் விபத்துக் குள்ளாகிவிடும். எனவே, மிகுந்த கவனமாக புல்லட்டை ஓட்டிச் சென்றோம்..சராசரியாக ஐம்பது, அறுபது கிலோமீட்டர் வேகத்தில் புல்லட்டை ஓட்டிச் சென்ற நாங்கள், ஒரு நாளைக்கு நாநூறு, ஐநூறு கிலோ மீட்டர்கள் கூட பயணம் செய்தோம். வழியில் நிறைய பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவிகளை சந்தித்தோம். அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் எங்களை வரவேற்றுப் பேசினார்கள். எங்களுக்கு, அவசர உதவி தேவைபட்டால் உதவுவதற்காக கூடவே BSF படையைச் சேர்ந்த ஒரு டாக்டர் அணி, ஆம்புலன்சில் வந்தார்கள்..இந்த சீறிப்பாயும் சீமா பவானிகளுக்கு நீண்ட தூர மோட்டார் சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லும்போது சற்றே சோர்வு ஏற்பட்டால், என்ன செய்வார்களாம் தெரியுமா? அணியில் கேப்டனான இமான்ஷு, "பாரத் மாதா கீஈஈஈஈ!" என்று குரல் கொடுக்க, மற்றவர்கள் அனைவரும் "ஜே!" என்று பதில் குரல் கொடுக்க… அவர்களுக்கு சோர்வு போயே போச்சு!