–மீனலதா, மும்பை.மராட்டிய மாநிலத்திலுள்ள ரெய்கட் தாலுகாவிலிருக்கும் சிஞ்சவ்லியைச் சேர்ந்த விசாகா சத்யஜித் டாங்கே சிற்பக்கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். குறிப்பாக, விநாயகர் சிலைகளை வடிவமைப்பதில் ஈடுபாடு கொண்டவர். 35 வருட காலமாக இத்தொழிலில் தேர்ச்சி பெற்றவராகிய விசாகா கூறிய விபரங்கள் அருமை..குடும்பப் பின்னணி:.எனது தகப்பனார் திரு. ஜனார்தன் டி.ஷிண்டே பிரபலமான சிற்பி. தனது 12வது வயதில் ஆரம்பித்த விநாயகர் சிலைவடிப்பை 87 வயதிலும் தொடர்ந்து செய்கிறார். கடந்த 75 ஆண்டுகளாக பக்தி சிரத்தையுடன் செய்பவர். இது குடும்பத் தொழில் எனலாம்..இக்குடும்பத்தில் பிறந்த எனக்கும் சிறுவயது முதலேயே இதில் ஆர்வம் ஏற்பட்டது. சிலை செய்ய சிக்கட்மட்டியை (ஒருவகை களிமண்) உபயோகப்படுத்துவார். நாங்கள் ஐந்து குழந்தைகள்..விநாயகர் சிலை மட்டுமே:.அந்த சிக்கட்மட்டியை எடுத்து, பழங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவைகளைச் செய்து பார்க்க எனக்கு ஆசையாக இருக்கும். தகப்பனார் அதற்கு அனுமதிக்க மாட்டார். பொருளாதார சூழ்நிலை காரணம் இருக்கும். களிமண்ணால் விநாயகர் உருவச்சிலை மட்டுமே செய்ய வேண்டும். மற்றவைகளைச் செய்து பார்த்து வேஸ்ட் பண்ண அனுமதி கிடையாது. எவ்வளவு பணநெருக்கடி ஏற்பட்டாலும், எங்கள் ஐவரிடமும் காட்டிக் கொள்ள மாட்டார்..கல்வி முக்கியம்:.தகப்பனார், எங்களை இத்தொழிலில் முழுமையாக ஈடுபட வைக்க விரும்பவில்லை. கல்வி முக்கியமென எண்ணி, பள்ளியில் சேர்த்து பாடுபட்டு படிக்கவைத்தார். எனக்கு படிப்பில் ஆர்வமிருந்த காரணம் நன்கு படித்து S.S.C. யில் முதல் ரேங்க் வாங்கினேன்..மேற்படிப்பும், விநாயகர் வடிப்பும்:.பத்தாவது முடித்தபின், உல்லாஸ் நகரிலுள்ள நேஷனல் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். எங்கள் கிராமத்திலிருந்து 45 கிலோமீட்டர் தூரமாதலால், போய்வரச் சிரமப்பட்டது. மேலும், சரியான போக்குவரத்தும் கிடையாது..திருமணமாகி 'கல்யாண்' என்கிற இடத்தில் வசித்து வந்த பெரிய அக்கா வீட்டில் தங்கி படிப்பைத் தொடரச் சொன்னார் தகப்பனார். அங்கிருந்து கல்லூரி 12 கி.மீ. தூரம்தான். சகோதரியின் கணவரும் ஒரு சிற்பக் கலைஞர். கல்லூரி முடிந்து வீடு திரும்பியதும், அவருக்கு உதவியாக விநாயகர் சிலைகளைச் செய்யச் செய்ய, கைதேர்ந்த சிற்பியாகிவிட்டேன். விதவிதமான அச்சு வைத்து செய்ய ஆரம்பிக்க, அனைவரையும் கவரும் வகையில் சிலைகள் அமைந்தன. அமோக விற்பனை ஆனது..கல்லூரி விடுமுறை நாட்களில், பெற்றோர் வீடு சென்றபின், தகப்பனாருக்கு உதவியாக விநாயகர் சிலைகளை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்தேன்..வேலை மற்றும் திருமணம்:.B.A. B. Ed முடித்தபிறகு 700/- மாத சம்பளத்தில் Primary ஆசிரியர் வேலை கிடைத்து வாங்கிய முதல் மாத சம்பளத்தில், வீட்டிற்கு சுவர்க்கடிகாரம் வாங்கி மாட்டியது இன்றும் மறக்க முடியாத விஷயம். எனது கிராமத்திலிருந்து ஆசிரியையாக பணிபுரியச் சென்ற முதல் பெண் நான் என்பதில் பெருமைப்படுகிறேன். 1996 ஆம் ஆண்டு இசை பயில்விக்கும் ஆசிரியர் சத்யஜித் டாங்கே என்பவருடன் திருமணம் நடந்தது. அதன் பின்னர் 'அலிபாக்'கில் இருக்கும் எஜுகேஷன் சொஸைட்டியில் நிரந்தர ஆசிரியர் பதவி கிடைத்தது..எங்களது தகப்பனார் அன்று விதைத்த விதை, விழுதுகள் நிரம்பிய ஆலமரமாக இன்று நிற்கிறது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பசங்களுக்கும், எனது மாணாக்கர்களுக்கும் இதைக் கற்றுக் கொடுக்கிறேன்..திருமணத்திற்கு முன்பு எனது பெயர் தயா. கடந்த 26 ஆண்டு காலமாக இப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். எனது மாணவர்களுக்கு புத்தகப் படிப்போடு நின்று விடாமல், இதர சிறு தொழில்களும் தெரிய வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்படுகிறேன். எனது வழிகாட்டுதலின் மூலம், மாணவர்கள் விதவிதமான கைத்தொழில்கள் செய்வது; அழகான ரங்கோலி வரைவது; மண்சட்டி விளக்குகள் தயார் பண்ணுவதென ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்..மேலும், அவர்களை வெவ்வேறு கைத்தொழில்கள் செய்யும் இடங்களுக்கு அழைத்துச்சென்று காண்பித்து விவரிப்பேன். செயல்பாடு அடிப் படையிலான கல்வி (activity based education) அவர்களை முன்னேற்றும்..தற்சமயம் குடும்பம் மற்றும் வேலை காரணமாக, அதிகமாக சிலைகள் வடிப்பதில்லை. எங்களது வீட்டிற்காக செய்யப்படும் கணபதி சிலையை, அனைவரும் பார்த்து பெருமைப்படும் வகையில் உருவாக்குகிறேன்".