விநாயகர் சதுர்த்தி – ஆகஸ்டு 31, 2022.-எம்.கோதண்டபாணி.கணபதியும் எருக்க மலரும்!.விநாயகர் சதுர்த்தி திருநாளில் கோயில்களிலும் வீடுகளிலும் வீற்றிருக்கும் கணபதியின் திருக்கழுத்தை எருக்க மலர்கள் அலங்கரிப்பதைக் காணலாம். பல்வேறு வாசமுள்ள, அழகான மலர்கள் இருக்கையில் இன்று கணபதிக்கு ஏன் எருக்க மலரை அணிவிக்க வேண்டும்?.எருக்க மலரை சமஸ்கிருதத்தில், 'அர்க்க புஷ்பம்' என்று அழைப்பர். 'அர்க்கன்' என்றால் அது சூரியனைக் குறிப்பதாகும். சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் உலக உயிர்களுக்கு நன்மை பயக்கும் ஒருவித கதிர்களை எருக்க இலைகள் தம்பால் இழுக்கும் சக்தி வாய்ந்தவை. அப்படிப்பட்ட எருக்கம் செடியிலிருந்து பூக்கும் மலர்களை விநாயகப்பெருமானுக்கு அணிவித்து வணங்கும்போது, அது மனித குலத்துக்கு நன்மை பயப்பதாக உள்ளது. அதோடு, சூரியனுக்கு மிகவும் உகந்த எருக்கம் மலரை கணபதிக்கு அணிவித்து வணங்கும்போது, விக்னங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சூரிய பகவானின் அருளால் மனோ திடமும், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. மேலும், பக்தர்கள் வழிபடுவதற்கு மிகவும் எளிமையானவர் கணபதி. சாணத்தில் பிடித்து வைத்தாலும், மஞ்சளில் உருட்டி வைத்தாலும் அதில் ஆவாஹனமாகி அருள்பாலிப்பவர் என்பதால், தம்மை வழிபட மிகவும் சாதாரணமாக பூத்துக்கிடக்கும் எருக்க மலரை மாலையாக அணிவித்தாலும், அதைக்கொண்டு அர்ச்சித்தாலும் அதில் மகிழ்ந்து அருள்பாலிப்பவர் விநாயகப்பெருமாள். வெள்ளெருக்கை வீட்டில் வளர்த்தால், அந்த வீட்டில் பண வரவு அதிகரிக்கும், தீய சக்திகள் வீட்டை அண்டாது என்பதும் நம்பிக்கையாக உள்ளது..விநாயகர் கை மோதகம்!.'ஓம்' எனும் பிரணவத்தின் ஸ்வரூபமாய் திகழ்பவர் விநாயகப்பெருமான். ஐந்து கரத்தனாகக் காட்சி தரும் இப்பெருமானின் பின்னிரு கரங்கள் பாசம், அங்குசம் தாங்கியும், முன்னிரு கரங்களில் வலது கை பக்தர்களுக்கு அபயம் அளித்தும் இடது கை மோதகத்தைத் தாங்கியும் அருள் செய்கிறார். ஐந்தாவது கரமான தும்பிக்கை, வாழ்வில் மங்கலம் பெருக்கும் கலசத்தைத் தாங்கிய நம்பிக்கைப் பொருளாக இவரே விளங்குகிறார் என்பதை உணர்த்துகிறது..விநாயகப் பெருமானின் கரத்தில் விளங்கும் மோதகம் சந்தோஷத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. அது உணர்த்தும் தத்துவப் பொருள் யாதெனில், மோதகத்தின் முக்கியப் பொருளான அரிசி மாவு ஒரு சுவையற்றது. அதன் உள்ளே வைக்கப்படும் இனிப்புச் சுவையான பூரணம், சந்தோஷத்தைக் குறிப்பதாகும். அதாவது, மாவுப் பொருளாக விளங்கும் இந்த உலகம் எனும் மாயையைக் கடந்தால், பூரண இனிப்புச் சுவையாக விளங்கும்; சந்தோஷ பிரம்மத்தை அனுபவிக்கலாம் என்பதே கணபதியின் திருக்கரத்தில் விளங்கும் மோதகம் நமக்கு உணர்த்தும் தத்துவப் பொருளாகும்..ஆனைமுகனுக்கு அறுகு ஏன்?.அறுகம்புல் ஒரு இடத்தில் முளைத்தால், அநேக இடங்களுக்கு வேரோடி பரவும் தன்மை கொண்டது. அதனால்தான், 'ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி' என்ற பழமொழி உண்டானது. அறுகம்புல் கொண்டு ஆனைமுகனை வழிபடும்போது வழிபடுபவரின் அனைத்து ஆதார சக்திகளிலும் புகுந்து கணபதி அருள் செய்வார் என்பதை உணர்த்தவே அறுகு கொண்டு வழிபடுகிறோம். 'தூர்வா' எனப்படும் அறுகு எல்லா நாடுகளிலும் முளைப்பதில்லை. இது பாரத பூமியின் சிறப்பு. பெரிதாக எந்த முயற்சியுமின்றி வளரக்கூடியது அறுகு. அதேபோல், பெரிய முயற்சி எதுமின்றி மனதால் நினைத்தாலும் கூட உடனே அருளக்கூடியவர் கணபதி. 'அறுகம்புல்லை கையால் தொட்டு கணபதிக்கு சமர்ப்பித்தாலே, பலவித தோஷங்கள் பறந்தோடிப் போகும்' என சாஸ்திரம் சொல்கிறது..தேவர்களுக்குத் தொல்லை தந்த அனலாசுரனை கணநாயகனாம் விநாயகப்பெருமான் விழுங்கிவிட, அவரது உடல் அனலாய் தகித்தது. உடலெங்கும் அனல் பரவி தவியாய் தவிக்கிறார். கங்கா அபிஷேகத்தாலும் தணிக்க முடியாத ஐங்கரன் உடல் வெப்பத்தை, மகரிஷிகளின் அறுகம்புல் அர்ச்சனை அரை நொடியில் தணித்து விட்டது. இதனால் விநாயகரின் உடலும் உள்ளமும் குளிர்ந்து ரிஷி பெருமக்களை வாழ்த்துகிறார். வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சித் தரக்கூடிய மகத்துவம் பொருந்தியது அறுகு என்பதை வையகத்துக்கு உணர்த்த கணபதி நடத்திக் காட்டிய திருவிளையாடல் இது. இதனால்தான் விநாயகப்பெருமான், 'தங்கப் பூக்களால் பூஜை செய்தால் நான் மகிழ மாட்டேன். அருகம்புல் பூஜைக்கு ஆனந்தமடைவேன்'என்று அருளியுள்ளதாக முத்கல புராணம் கூறுகிறது..விக்னேஸ்வரனுக்கு விளாம்பழ நிவேதனம்!.கணபதி பூஜையில் படைக்கப்படும் ஒரு நிவேதனப் பொருளாக விளங்குகிறது விளாம்பழம். மனித வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் தத்துவப் பொருளாகத் திகழ்கிறது இந்தப் பழம். விளாம்பழம் மரத்தில் காயாக இருக்கும்போது இதன் ஓடு பச்சையாக இருக்கும். மேலும், அதன் உள்ளே இருக்கும் சதையும் அந்த ஓட்டோடு ஒட்டி இறுகி இருக்கும். அதுவே பழமாக மாறிய பிறகு அதன் ஓடு மஞ்சள் நிறமாக மாறி விடும். மேலும், உள்ளே இருக்கும் அதன் தசைப் பகுதி ஓட்டை விட்டு தனியே பிரிந்து விடும். அதோடு, அந்தப் பழத்தின் நறுமணமும் கூடிவிடும்..இந்தப் பழத்தைப் போலவே மனித வாழ்வும் பக்குவமில்லாத நிலையில், உலக பந்தங்கள் எனும் கடின ஓட்டோடு ஒட்டியே இருக்கும். அதிலிருந்து அவனைப் பிரித்தெடுப்பது கடினம். அவனே ஞான நிலையாகிய பழமாக மாறி பக்குவப்படும்போது, உலகப் பற்றுகளிலிருந்து விடுபட்டு தனியே பிரிந்து விடுகிறான்..கனிந்த பழத்தை அதன் மணம் காட்டிக் கொடுத்து விடும். அதுபோல், அறிவு முதிர்ச்சியால் பழுத்த ஒருவரது மனதை அவருடைய ஞானம் காட்டிக் கொடுத்துவிடும். இந்த உலக பந்தத் தத்துவத்தை விவரிக்கும் கனியை ஞான முதல்வனாம் விநாயகப் பெருமானுக்கு அவனது அவதாரத் திருநாளில் சமர்ப்பித்து வழிபடுவது சாலச்சிறந்ததல்லவா! விநாயகச் சதுர்த்தியின்போதே இந்தப் பழங்களின் வரவும் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடுவது எத்தனைப் பொருத்தம் பாருங்கள்!