

சஷ்டி என்றாலே முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்தது. அதுவும் கார்த்திகை மாதத்தில் வரும் சஷ்டி மிகமிக உகந்ததாகும். முருகப்பெருமானை வளர்த்தெடுத்த கார்த்திகை பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக உருவானதே கிருத்திகை நட்சத்திரமும், கார்த்திகை மாதமும். இதனால் கார்த்திகை மாதத்தில் வரும் சஷ்டி மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.
அதுவும் நாளைய தினம் முருப்பெருமானுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில் வரும் உதயோக சஷ்டி வருகிறது. உதயோக சஷ்டி என்பது கார்த்திகை மாதத்தில் வரும் சஷ்டி நாளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்வதை குறிக்கிறது. பொதுவாக சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது மிகுத்த பலன்களை தரும். அன்றைய தினம் எளிமையான சைவ உணவு உண்ணுதல், முருகனை நினைத்து இருத்தல், ஷட்கோண தீபம் ஏற்றுதல் போன்றவை வழக்கத்தில் உள்ளன.
அன்றைய தினமும் முழுவதும் முருகனை நினைத்து மனதார விரதம் அனுஷ்டிக்க வேண்டும். உங்க வாழ்க்கையில் எந்த தடைகள் இருந்தாலும், எந்த சங்கடமும் இருந்தாலும் இந்த நாளில் முருகப்பெருமான வழிபட்டால் அது அனைத்தும் நீங்கி விடும்.
அதிலும் முக்கியமாக நாளைய தினம் காலையிலோ அல்லது மாலையிலோ வீட்டிலோ அல்லது அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வைத்தும் அல்லது ஷட்கோண கோலமிட்டு ஆறு விளக்குகள் ஏற்றியும் வழிபாடு செய்வதால் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் கரைய ஆரம்பிக்கும் என்று நம்பிக்கை. அதனால் நாளைய தினத்தை தவறவிடாமல் வழிபாட்டு முறையை கடைப்பிடியுங்கள்.
இந்த நாளில் அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, பக்தியுடன் விரதம் மேற்கொள்ள வேண்டும். முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்களை படைத்து வழிபட வேண்டும். மேலும முருகப்பெருமானுக்கு உகந்த பால், பழமும், நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல் மாறல், திருப்புகழ் பாராயணம் செய்ய வேண்டும். முருகப் பெருமானுக்குரிய "ஓம் சரவண பவ" மந்திரத்தை 108 முறை சொல்லியோ, அல்லது எழுதியோ வழிபட வேண்டும். இதனால் முருகப்பெருமான் அருள் முழுவதுமாக நமக்கு கிடைப்பதுடன் நமது துன்பங்களும், வறுமை நிலையும் மாறும்.
தாங்க முடியாத துன்பத்தில் இருப்பவர்கள், பல ஆண்டுகளாக குழந்தை வரத்திற்காக காத்திருப்பவர்கள் ஆகியோர் இந்த நாளில் விரதம் இருந்து, பக்தியுடன் வழிபடுவதால் உங்களின் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.
இந்த நாளில் முருகனின் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபடுவதும், யாருக்காவது ஒருவருக்கு அன்னதானம் வழங்குவதும் மிகவும் சிறந்தது.
நாளைய தினம் 10 ரூபாய் கொடுத்து முருகனுக்கு இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கி வைப்பது உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீருவதற்கு வழி பிறக்கும் என்பது ஐதீகம்.
உங்களுக்கு தீராத கடன் பிரச்சனை இருந்தாலும் அல்லது உங்கள் வாழ்வில் நீங்கள் எந்த பிரச்சனையை எதிர்கொண்டிருந்தாலும் நீங்கள் 10 ரூபாய் செலவு செய்து எலுமிச்சை பழத்தை வாங்கி முருகனின் காலுக்கு அடியில் வைத்து பூஜை செய்து பின்னர் அதை வீட்டில் கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும். இப்படி செய்வது முருகப்பெருமானே உங்களது வீட்டிற்கு வருவதற்கு சமம். உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் முருகனே பார்த்துக்கொள்வார். தீர்த்தும் வைப்பார்.