

அடுத்து பம்பா நதியில் குளியல்.
நால்வருக்குள் ஒரு போட்டியை அறிவித்தார் பொடி சாமி. யார் மூக்கைப் பிடித்து, மூச்சை அடக்கி, தம் கட்டி நீருக்குள் அதிக நேரம் இருக்கிறார் என்று.
முதலில் குட்டி கருணா. அவன் பயத்தில் நடுங்கி உள்ளே குனிய, "ஒன், டூ..." என்று நாங்கள் சொல்லும்போதே வெளியே வந்து விட்டான். அடுத்து இலக்கியா. தோல்வி தான் என்று நிச்சயமாகத் தெரிந்தும் வேறு வழியின்றி முங்கினாள். மல்லுக்கட்டி திணறி 28 வரை தாக்குப்பிடித்தாள்.
அடுத்து பரதனும், பொடி சாமியும் ஒரே கணக்கில் 35 வரை வர... பொடி சாமி "நோ நோ நோ. நீங்க ஸ்லோவா எண்ணுனீங்க. ச்சீட்டிங். நா எப்டியும் 38 வந்திருப்பேன். சோ, நா தான் வின்னர்" என்றான்!