தண்ணிக்கஷ்டம் தீர எங்க வீட்ல உடனே கிணறு தோண்டணும்னு இவர்தான் சொன்னார்!
யார் இவர்?
என்னோட 'வெல்' விஷர்!
*********************************************
செல்ஃப் சர்வீஸ் னு ஹோட்டல்ல போர்டு வச்சது தப்பாப் போச்சு!
என்னாச்சு?
கல்லாவுல காசையே காணோம்!
*********************************************
இந்த முறையும் நான் தேர்தல்ல நான் தோத்துப்போனா கட்சியை
விட்டு விலகிடுவேன்!
விலகிடுவேன் அல்ல தலைவரே, விலக்கிடுவாங்க!
*********************************************
என்ன ராப்பிச்சை, நாயையும் கூட்டிட்டு வந்திருக்கே?
நல்ல சாப்பாடா ஊசிப்போன சாப்பாடான்னு இது
மோப்பம் பிடிச்சிடும் தாயீ!
*********************************************
'நூறு நாள் ஓடின படம்'னு போஸ்டர் வச்சிருக்காங்களே, படம் அவ்வளவு நல்லா இருக்குமா?
அட நீங்க வேற, படத்தோட டைட்டிலே அது தாங்க!
*********************************************
பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை ஃ பைனான்ஸ் கம்பெனியில வேலை செய்யறவர்னு எப்படிச் சொல்றே?
பொண்ணுக்கு பாடத்தெரியுமான்னு கேட்காம, பொண்ணுக்கு ஓடத் தெரியுமான்னு கேட்கிறாரே!
*********************************************
தலைவர் மேடையில ரொம்ப பயத்தோட பேசுவார்!
பேச்சு நல்லா வரணும்னா?
பேசிட்டு நல்லபடியா வரணும்னு!
*********************************************
எதிரி நாட்டு மன்னனின் தலையை சீவிவிட்டு வரச்சொல்லி மகாராணி சொன்னதை மன்னர் தப்பாக புரிந்துகொண்டு விட்டார்!
எப்படிச் சொல்றே?
போர்க்களத்துக்கு சீப்பை எடுத்துக்கொண்டு போறாரே?
*********************************************
நீங்க செஞ்சதை சொல்லி ஓட்டு கேளுங்க தலைவரே!
ஊழல் செஞ்சதை சொல்லி ஓட்டு கேட்டா அடிக்க வருவாங்களேய்யா!
*********************************************
இங்கு வந்தால் இங்கிலிஷ்ல பேச சுலபமாக கற்றுத் தரப்படும்னு
போர்டு மாட்டியிருக்கே, டியூஷன் சென்டரா?
டாஸ்மாக் கடை!
*********************************************
அந்தக் கட்சித்தலைவர் ரொம்ப வெளிப்படையானவர்!
அதுக்காக உண்ணாவிரதப்போராட்டம் சுவையான பிரியாணியுடன் நடத்தப்படும்னா போர்டு வைக்கிறது?
*********************************************
டியர்! நான் உன்னை காதலிக்கறதுக்கு முன்னாடி நீ வேறு யாரையாவது காதலிச்சிருக்கியா?
இப்படி திடீர்னு கேட்டா எப்படிங்க, எண்ணிப் பார்க்க கொஞ்சம் சாவகாசம் தாங்க!