வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்வது அவ்வளவு கஷ்டமானதா?

வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்வது அவ்வளவு கஷ்டமானதா?
Published on

வாய் சுகாதாரத்தை தவறாமல் தினமும் பராமரிப்பது நமது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று எனலாம். ஆரோக்கியமான பற்கள் நம்மை அழகாக உணர வைக்க உதவுவது மட்டுமல்லாமல், சரியாக சாப்பிடவும் பேசவும் கூட உதவுகிறது. எனவே நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு ஆரோக்யமான வாய் சுகாதாரம் மிகவும் முக்கியம்.

முறையாகப் பல் துலக்குதல் மற்றும் ப்ளாசிங் உள்ளிட்ட தினசரி தடுப்பு பராமரிப்பு, சிக்கல்கள் உருவாகும் முன் அதை கிரஹித்து நிறுத்த உதவும், இதில் ஃப்ளாசிங் முறையில் பற்களைச் சுத்தம் செய்யும் பழக்கம் நம்மில் பெரும்பாலானோருக்கு இல்லை. காரணம் முயற்சியின்மை, சோம்பல் என்று கூடக் கூறலாம். ஆனால், அம்முறையில் பற்களைச் சுத்தம் செய்வது மிகவும் பயனளிக்கக்கூடியது என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.

ஃப்ளாசிங் முறை:

ஃப்ளோஸிங் என்பது வாய் சுகாதாரத்தில் ஒரு முக்கியமான வழிமுறை. இது உங்கள் பற்களுக்கு இடையில் சிக்கிய உணவை சுத்தம் செய்து வெளியேற்றுகிறது, இது உங்கள் வாயில் பாக்டீரியா மற்றும் பிளேக்கின் அளவைக் குறைக்கிறது. பிளேக் என்பது நாம் உணவுண்ட் பிறகு பற்களில் பரவும் ஒரு விதமான ஒட்டும் படலமாகும், இது பற்களில் உருவாகி தொடர்ந்து படியும் போது ஒரு கெட்டியான கறையாக மாறத் தொடங்கி விடும். இது பின்னர் பல் ஈறு நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே மருத்துவர்கள் பரிந்துரைய்க்கும் ஃப்ளாசிங் டெக்னிக்கை அவர்க்ள் கூறும் முறையில் பின்பற்றி தினமும் பற்களை சுத்தம் ச்ய்து வந்தால் இந்த படலத் தாக்குதலில் இருந்து நமது பற்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

பற்களைப் பொருத்தவரை சொத்தை முற்றிய பின் சென்று வலியுடன் சிகிச்சை பெறுவதைக் காட்டிலும் முன்னரே வரவிருக்கும் பிரச்சனையைக் கணித்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளைத் திட்டமிட்டுக் கொண்டால் வலியைத் தாங்க வேண்டிய அவசியமே இல்லை.

பல் மருத்துவரிடம் தொடர்ச்சியாக ஆரோக்யமான இடைவெளிகளில் பல்பரிசோதனை மேற்கொள்ளச் செல்வதற்கு முன்பும், இடையில், பல் சொத்தை, ஈறு நோய் மற்றும் பிற பல் பிரச்சனைகளுக்காக பல் மருத்துவரை அணுகும் முன்பும் நாம் தவறாமல் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை தற்போது பார்ப்போம்.

· ஒரு நாளைக்கு இரண்டு முறை நன்கு பற்களைத் துலக்குதல் மற்றும் தினமும் ஃப்ளாஸ் செய்தல்

· சமச்சீரான உணவை உண்ணுதல் மற்றும் உணவுக்கு இடையில் சிற்றுண்டிகளை கட்டுப்படுத்துதல்

· பற்பசை உட்பட ஃபுளூரைடு கொண்ட பல் தயாரிப்புகளைப் பயன்படுத்துதல்

· உங்கள் பல் மருத்துவர் சொன்னால் ஃவுளூரைடு கொண்டு வாயை அலசிக் கழுவ வேண்டும்

· 12 வயதிற்குட்பட்ட உங்கள் பிள்ளைகள் ஃவுளூரைடு இல்லாத பகுதியில் வசிக்கும் பட்சத்தில் ஃபுளூரைடு கலந்த தண்ணீரைக் குடிப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

· 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினாலே போதும் உங்களது வாய் சுகாதாரம் ஆரோக்யமாகப் பேணப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com