0,00 INR

No products in the cart.

மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதை தடுக்கக் கூடாது: நோபல் பரிசு பெற்ற மலாலா அதிரடி!

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக் கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம் நாடெங்கும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் எந்த மதம், இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் பள்ளி, கல்லூரிக்கு படிக்க வரும்போது அதற்குரிய கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அந்த மாணவிகளுக்கு ஆதரவாக சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் குரல் கொடுத்துள்ளார். .

இந்த விவகாரத்தில் மலாலா நேற்று தன் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுப்பது துரதிர்ஷடமானது. அம்மாணவிகளுக்கு படிப்பு முக்கியமா ஹிஜாப் முக்கியமா என்று தேர்வு செய்ய கல்லூரி கட்டாயப்படுத்துகின்றன. ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது அவர்களை ஒடுக்குவதற்கு சமம். இச்செயலை இந்தியத் தலைவர்கள் நிறுத்த வேண்டும்.

-இவ்வாறு மலாலா தன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடியாக, இந்தியாவின் உள்விவகாரங்களில் மலாலா தலையிடுவது தவறு. அப்படிச் செய்ய இவர் யார்? என்று பாஜக தேசிய செயலாளர் சிடி ரவி தன் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

12 மொழிகளில் வெளியாகிறது திருக்குறள்; மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவிப்பு!

0
இந்தி உட்பட 12 மொழிகளில் திருக்குறள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்று மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. -இதுகுறித்து மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்ததாவது; திருக்குறளை இந்தி உட்பட 12...

கிருஷ்ண ஜென்ம பூமியிலுள்ள மசூதியில் அனுமதிக்க வேண்டும்; இந்து மகா சபா மனு தாக்கல்!

0
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியில் சுமார் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் சாஹி இத்கா என்ற மசூதி உள்ளது. இந்த மசூதிக்குள் இந்துக்கள் சென்று வழிபாடு நடத்தவும் அபிஷேகம் செய்யவும்...

IPL கிரிக்கெட் போட்டி; கடைசி இடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி! 

0
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் முதன்முறையானிந்த 15-வது சீசன் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாவது: ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் போட்டி அதன் இறுதிக்கட்டத்தை...

ஷூட்டிங்கில் விபத்து: ஆற்றில் விழுந்த காரில் சமந்தா!

0
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை  சமந்தா நடிக்கும் ‘குஷி’ தெலுங்குப் படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றை காஷ்மீரில் நேற்று முந்தினம் படமாக்கினர். அப்போது அவர்கள் சென்ற கார் எதிர்பாராத விதமாக ஆற்றில்...

குவாட் உச்சிமாநாடு: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமருக்கு வரவேற்பு!

0
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற ஆன்டனி ஆல்பனேசி இன்று ஜப்பானில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க வந்தபோது, அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆஸ்திரேலியாவின்...