0,00 INR

No products in the cart.

ஜோடிப் பொருத்தம் படு ஜோர்!

– உஷா ராம்கி

பாரத் மேட்ரிமோனி நிறுவனம், இந்தியாவில் இணையதள வழி ஜோடித் தேடலில் முன்னோடி. 21 வருடங்களில் வெற்றிகரமாக பத்து லட்சத்துக்கும் மேலான ஜோடிகளை திருமணம் மூலம் இணைத்துள்ளது.

இதில் என்ன ஹைலைட் என்றால், இதன் நிறுவனர் முருகவேல் ஜானகிராமன் தன்னுடைய வாழ்க்கைத் துணையை இந்த இணையதளம் மூலம்தான் கண்டெடுத்திருக்கிறார்.

உயர்தட்டு மக்களுக்கு எலீட் மேட்ரிமோனி, சமூகங்கள் வகையிலான இணையதளங்கள், இது தவிர மண்டபம் தேடல், திருமணப் பொருட்கள் வாங்குதல் என்று தனது ஆன்லைன் சேவையை பல வகைகளில் தந்து கொண்டிருந்தவர்கள், இப்போது ‘ஜோடி’ என்ற சாமானிய தமிழர்களுக்கான பிரத்யேக தயாரிப்போடு வருகிறார்கள்.

முருகவேல் ஜானகிராமன்

‘‘தமிழருக்காக, மத வாரியாக, ஜாதி வாரியாக எக்கச்சக்கமான அறிமுகம் இருக்கு சார். அதெல்லாம் ஓகே. ஆனா, எனக்கு தமிழ்லயே படிச்சு, தமிழ்லயே ரெஜிஸ்டர் செய்யற மாதிரி வேணுமே.”

“மேல் தட்டு மக்கள் நிறைய படித்தவர்கள், சம்பாதிக்கிறவர்கள். இவங்களுக்கெல்லாம் சரி… குறைந்த சம்பளம், கம்மியான படிப்பு இருக்கிற நாங்க, திருமண ஜோடியை எப்படித் தேடுறதாம்?”

இதுபோன்ற கேள்விகளுக்குத் தீர்வுதான் இந்த தமிழ் செயலி. ஐந்தாவது வரை மட்டுமே அல்லது பட்டப்படிப்பு வரை படித்தவராக இருக்கலாம். சம்பளம் குறைவு என்று நினைக்கலாம். இதில் யாராக இருந்தாலும், ‘நமக்கு தமிழ்தான்‘ என்பவர்கள் இங்கே வரலாம். குறிப்பாக, வண்டி ஓட்டுனர்கள், செவிலியர்கள், தொழிலாளிகள், டெலிவரி செய்பவர்கள், கடை விற்பனையாளர்கள் இவர்கள் எல்லாம் தங்களுக்கான வழித்துணையைத் தேட, டிஜிட்டல் உலகத்தில் இது ஒரு எளிதான வழி.

“கொரோனாவுக்குப் பிறகு மக்கள் இன்னும் அதிக அளவில், செல்போன் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். 4ஜி குறைந்த செலவில் கிடைக்கிறது. அப்படியிருக்க, ஒரு சுலபமான செயலியை தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்காக ஏன் செய்யக்கூடாது என்று யோசித்ததன் விளைவுதான் இந்த அறிமுகம்” என்கிறார் முருகவேல். ஆனால் ஒன்று, அங்கீகரிக்கப்பட்ட ID ஆவணம் கட்டாயம். அதனால பதிவு செய்யறவங்களுக்குப் பாதுகாப்பு இருக்கு.

“மூன்று மாதங்களுக்கு ரூபாய் 900, ஆறு மாதங்களுக்கு ரூபாய் 1,500 என்ற வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதுதாங்க விஷயம். ஒரு தமிழ் APP, அதை சுலபமாக உங்கள் அலைபேசியில் டவுன்லோட் செய்யலாம். பதிவு செய்யும்படி கேட்கும் இடத்தில், உங்கள் பெயர், முகவரி, படிப்பு, வேலை மற்றும் சம்பள விவரம் போன்றவற்றைத் தந்து, உங்கள் விவரங்களையும், நீங்கள் தேடும் வரனிடமிருந்து தாங்கள் எதிர்பார்ப்பதையும் தர வேண்டும். கட்டணத்தை செலுத்தும் வகையும் சுலபம். உங்கள் பதிவைப் பார்த்து ஒருவர், ‘லைக்’ அழுத்தினால் அதன் பிறகு உங்களுக்கும் சம்மதமென்றால் நீங்கள் இருவரும் வாட்ஸாப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

“மகிழ்ச்சியான குடும்பங்கள் சேர்ந்ததுதான் சமுதாயம், தேசம். அப்படிப்பட்ட மகிழ்ச்சியான குடும்பத்துக்கு ஆதாரம், மகிழ்ச்சியான தம்பதிகள். இதை மனதில் கொண்டுதான் பாரத் மேட்ரிமோனி செயல்பட்டு வருகிறது. இப்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உதவி செய்வதன் மூலம், எங்கள் பயணம் முழுமை அடையும் என்று நம்புகிறேன்” என்ற நம்பிக்கையுடன் பேசினார் முருகவேல்.

‘அம்மா, அப்பா பார்த்து வைத்தால் சரிப்படாது’ என்று நினைக்கும் இளம் தலைமுறை தங்களுக்குப் பொருத்தமானவரை தாங்களாகவே ஆன்லைனில் தேடிக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் டேட்டிங் செயலிகள் போல் இல்லாமல், இந்தியாவின் ஆணி வேரான குடும்பம், கலாசாரம் ஆகியவை இதில் பாதுகாக்கப்படுகின்றன. நெடுந்தூர குடும்பப் பயணத்தின் வாசலாக அமைகிறது இச்சேவை.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...

சகுனியும் நானே…  பாஞ்சாலியும் நானே…  நாகக் கன்னியும் நானே…   திரௌபதியும் நானே…  

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு         லால்குடியில் வசித்து வரும் பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம். அவருக்கு வயது ஐம்பத்தி நான்கு. நாடகம், இசைச் சொற்பொழிவு, ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து எனப் பல்துறைகளிலும்...

கந்து வட்டியிலிருந்து மீட்போம் பெண்களின் சுயம் காப்போம்!

-சேலம் சுபா  தாங்கள் நடத்தும் என் ஜி ஓ மூலம் பெண்கள் சுயதொழில் செய்து பொருள் ஈட்டவும், தவறு செய்யும் கணவனை தட்டிக்கேட்டுத் திருத்தவும் தேவையானத் துணிவை பெண்களுக்கிடையே மூட்டி வருகின்றனர் கொடைக்கானலைச் சேர்ந்த டேவிட்...

இல்லத்தரசியின் கனவு!

முயன்றால் எதுவும் முடியும்...     - சேலம் சுபா நல்லதொரு குடும்பம் அமைந்த பெரும்பாலான  பெண்கள் தங்களிடம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஆர்வமின்றி குடும்பம் எனும் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்து வெளியே வர விரும்ப...