0,00 INR

No products in the cart.

 “குழந்தைத் தொழிலாளர் வயது வரம்பை பதினெட்டாக உயர்த்த வேண்டும்”

 “குழந்தைத் தொழிலாளர் வயது வரம்பை பதினெட்டாக உயர்த்த வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி ப்ரியதர்ஷினி.
-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு    

 

கும்பகோணம் அருகே வலங்கைமான் அரசினர் பெண்கள் மேனிலைப்பள்ளியில்,  பிளஸ்ஒன் படிக்கும்  மாணவி பிரியதர்ஷினி, தனது விடாமுயற்சியினால் மட்டும் பள்ளி படிப்பிலிருந்து இடை நின்று போன சுமார் இருபது மாணவ மாணவியரை அழைத்து வந்து அவரவர் பயின்ற பள்ளிகளில் மீண்டும் சேர்த்திருக்கிறார் ப்ரியதர்ஷினி.

அரசுப் பள்ளிகளில் பிள்ளைகள் இடைநிற்றல் என்பது ஆங்காங்கே நிகழ்ந்து வருகிற ஒன்றுதான் என்பதும், இதனைச் சீர்திருத்த வேண்டி,
ஆசிரிய ஆசிரியைகளே கள ஆய்வு செய்து, அந்தப் பிள்ளைகள் மற்றும் அவர்கள் பெற்றோர்களிடம் பேசி, அவர்களின் மன நிலையினைச் சரிசெய்து, இடைநின்று போன அந்தப் பிள்ளைகளை மீண்டும் பள்ளி நோக்கி அழைத்து வருவார்கள் என்பதும் இயல்பான ஒன்றுதான்.

ஆனால், ஒரு சக மாணவியாக இருந்து இந்த நற்பணியை மேற்கொண்ட பிரியதர்ஷினிக்கு பூச்செண்டு அளித்து நாம் பேசியதிலிருந்து 

“என் அப்பா ஒரு பெயிண்டர். அம்மா கூலி வேலை செய்கிறார். நான் பள்ளிக்குச் சென்று வந்த நேரம் போக, மீதி நேரத்தில் மளிகைக் கடையில் வேலைக்கும் போய் வந்தேன். மாலை ஆறு மணிக்குப் போவேன். இரவு பத்து மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவேன். மளிகைக் கடையில் பொட்டலம் கட்டும் வேலை.

இப்படியிருக்க, என் பெரியம்மா மகன்,  என்னிடம் ஒரு நாள்  நான் இந்த மளிகைக் கடைக்கு வேலைக்குப் போய்வருவது சம்பந்தமாகப் பேசினார்.  “டெய்லி வேலைக்குப் போய் வர்றே. எந்த நேரம் நீ படிப்பே?” என்று கேட்டார். “பகல்ல கிடைக்குற நேரத்துல படிப்பேன்,” என்றேன். ‘அதெல்லாம் சரிப்பட்டு வராது. பள்ளி விட்டு வந்து தினசரி நீ மாலை இரவு நேரங்களிலும் படித்தாக வேண்டும். டென்த், பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளில் பாடங்கள் அதிகமாக இருக்கும். அதனால் இனிமேல் மளிகைக் கடை வேலைக்கு நீ போக வேண்டாம். உனக்கு ஆகும் செலவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன்,” என்று  அண்ணன் சொன்னார். அதில் இருந்து நான் மளிகைக் கடைக்கு வேலைக்குப் போகவில்லை. அதனால் பத்தாம் வகுப்பில் என்னால் நன்றாகப் படிக்கவும் முடிந்தது.

அப்போதுதான் குடும்பக் கஷ்டங்களுக்காக இடையில் படிப்பை விட்டுவிட்டு குழந்தைத் தொழிலாளர்களாக வேலைக்கு போய் வருபவர்கள் குறித்து சிந்தித்துப் பார்த்தேன். நானே ஏன் அவர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களது முடிவினை மாற்றி அவரவர் படித்த பள்ளிகளில் மீண்டும் சேர்த்து விடக்கூடாது என்று எண்ணினேன். அக்கம்பக்கம் எல்லாம் விசாரித்தேன். குழந்தைத் தொழிலாளர்களாக வேலைக்குச் சென்று வருபவர்கள் விபரங்கள் சேகரித்தேன்.

அந்தப் பிள்ளைகளைத் தனியாக அழைத்துப் பேசினேன். பின்னர் அவர்களது வீடுகளுக்குச் சென்று அவர்களின் பெற்றோர்களிடம் பேசினேன். முதலில் என் அம்மா அப்பா இருவருமே, “உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று கேட்டனர்.  படிப்பின் அவசியம் குறித்து என்னுடைய அண்ணா எனக்கு புரிய வைத்தது போல், என் பெற்றோர்க்கும் புரிய வைத்தேன்.

என்னோட முயற்சிகளுக்கு எல்லாம் எங்க ஸ்கூல் ஆசிரியை புவனா கோபாலன் மேடம்தான் வழிகாட்டியா இருந்தாங்க.

வலங்கைமான், தில்லையாம்பூர், நத்தம், சித்தன்வாளூர் போன்ற மேலும் சில  கிராமங்களில் நான் அலைந்து திரிந்து, படிப்பில் இடை நின்ற பிள்ளைகளை ஒரு பட்டியலுக்குள் கொண்டு வந்தேன். பதினாறு பையன்கள், நான்கு பெண்கள் என இருபது பிள்ளைகளை ஆறாம் வகுப்பு தொடங்கி பத்தாம் வகுப்பு வரை அவரவர் இடை நின்ற வகுப்புகளில் மீண்டும் சேர்த்து விட்டேன். இப்போது அவர்கள் அனைவரும் தொடர்ந்து அவரவர் பள்ளிகளுக்குச் சென்று வருகிறார்கள். எனக்கு ரொம்ப மகிழ்ச்சி”  என்றார்.

ந்தத் தகவல்கள் கேள்விப்பட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்டக் கல்வித்துறை அதிகாரியும் பிரியதர்ஷினியை நேரில் வரவழைத்துப் பாராட்டினார்கள். அதன் பின்னர் அவரை  சென்னைக்கு வரவழைத்தனர். கல்வித்துறை மாநில திட்ட இயக்குனர் சுதன் ஐஏஎஸ், மற்றும் இல்லம் தேடி வரும் கல்வித் திட்டத்தின் சிறப்பு அலுவலர் இளம் பகவத் ஆகியோரும்  பிரியதர்ஷினியைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார்கள். அவர் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி ‘சமூகப் பணி’ இயல் வகுப்பு மாணவிகள் மத்தியில், தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும், “குழந்தைத் தொழிலாளர் வயது உச்ச வரம்பை பதினான்குக்கு பதிலாக, பதினெட்டு வயதாக உயர்த்தித் தர வேண்டும்,”  என்ற கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி முன் வைத்திருக்கிறார்  பிரியதர்ஷினி.

பிரியதர்ஷினியின் கோரிக்கையும், உயர்ந்த எண்ணங்களும் நிறைவேற மங்கையர் மலர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

1 COMMENT

  1. பிரியதர்ஷினியின் உயர்ந்த எண்ணங்களை
    நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
    வாழ்த்துக்கள்.

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. பள்ளி நாட்களில் இருந்தே கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் தீராத ஆர்வம். வானொலி நாடகங்கள் எழுதுவதிலும் கால் பதித்தது உண்டு. சமூகப் பார்வையுடனான கட்டுரைகள், நேர்காணல்கள் படைப்பதிலும் வல்லுனர். கல்கி, மங்கையர் மலர், தீபம் போன்ற கல்கி குழும இதழ்களின் நடைபாதைதனில் பயணிக்கும் நிரந்தரப் பார்வையாளன்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...