0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்!

நடிகை நயன்தாரா திருமணப் பத்திரிகை வந்தால் போவீர்களா?
(ஸாரி, ‘குமுதம்” – அரசு பதில்களில் கேட்க வேண்டியக் கேள்வி… ஒரு ஆர்வக் கோளாறில்…?!)
-ஆர். நாகராஜன், செம்பனார்கோவில்

‘தவறான கேள்விக்குப் பதில் எழுத முயற்சி செஞ்சாலே, முழு மதிப்பெண்’ அப்படின்னு தமிழக அரசுத் தேர்வுத் துறையே அறிவிச்சுருக்கே… அப்புறம் என்ன? வாங்க ட்ரை பண்ணலாம்!

பூர்வஜன்மப் புண்ணியம் இருந்தா கோட்டை விடுவேனா? கண்டிப்பா போவேன் மிஸ்டர் நாகராஜன்.

“‘ஐயா’ படத்துல நடிக்கிறதுக்காக, கேரளாவுல இருந்து நைட் பஸ்ஸுல, கடைசி சீட்டுல தூக்கம் இல்லாம கோயம்பேடு வந்து தனியா இறங்கிய பொண்ணு… இன்னிக்கு தனியார் ஃப்ளைட்டுல உலா போற லேடி சூப்பர் ஸ்டார் ஆயிட்டம்மா. ’விக்கி’ ங்கிற இள வயது மேனேஜர் கம் கணவர் கிடைச்சுருக்காரு. கல்யாணம் ஆனதும், பிடிச்சதைச் சாப்பிட்டு, நல்லா தூங்கி, ரிலாக்ஸ் பண்ணிக்க தாயே! முடிஞ்சா வாழவெச்ச தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யம்மா!”ன்னு சொல்லிட்டு வருவேன்.

நான் சொன்னதுலயே, கடைசி வரியை மட்டும் ‘கப்’ புன்னு புடிச்சுக்கிட்டு, ஏதாவது தேசியக் கட்சியில சேர்ந்தாலும் சேரலாம்! விதி வலியது!

(ஆமா… திரை உலகிலே, சமந்தா, உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி மூணு பேருக்கு மட்டுமே அனுமதியாமே! பட்சி ஜோஸியம்!)

**************************

‘விதி’ என்றால் என்ன?
-எஸ். பாலகிருஷ்ணன், மதுரை

‘வி’ ருப்பமில்லாத ‘தி’ ருப்பங்களின் சுருக்கம்தான் ‘விதி’. அசோக் திரிபாதியும், வைபவியும் விவாகரத்து ஆனவர்கள். மராட்டிய மாநிலம் தானேயைச் சேர்ந்தவர்கள். பிரிந்த இந்தத் தம்பதியர் தங்களது வளர்ந்த பிள்ளைகளுடன் நேபாளத்துக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் ஏர்-லைன் விமானம் விபத்துக்குள்ளானதில் அந்தக் குடும்பமும் உயிரிழந்துவிட்டது.

‘பிரிந்துதான் வாழ்வோம்’ என்று உறுதியாக இருந்த அவர்களை மரணம் ஒன்றாகத் தழுவிக் கொண்டுள்ளது. இந்த வினோதத்தை ‘விதி’ன்னு சொல்லாம வேற என்னத்த சொல்றது?

**************************

இந்த வருட ஐ.பி.எல் ஃபைனல்?
-மஞ்சுவாசுதேவன், பெங்களூரு

புதிய அணியாக அடியெடுத்து வைத்த அறிமுக சீஸனிலேயே, சாம்பியன் கோப்பையை ‘குஜராத் டைட்டன்ஸ்’ அணி உச்சி நுகர்ந்தது உற்சாகமான ஆச்சரியம்.

ஆனால், ரசிக சிகாமணிகள் பலரும் ‘”க்யாரே? செட்டிங்கா?” என்று கலாய்த்திருக்கிறார்கள்! ஒருவேளை… நெசம்தானோ?

**************************

இலங்கை ஆர்.ஜே. சந்துரு – மேனகா ஜோக் பார்த்து ரசிப்பதுண்டா?
-எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

வங்க மொழியிலயே… சொல்றதானா… ஓம்… வடிவான பதிவு!

மத்தவங்களை இழிவுபடுத்தி சிரிக்க வைக்காமல், தங்களுக்குள்ளேயே கலாய்த்துக் கொள்ளும் காமெடி நிஜமாகவே ரசிக்க வைக்கிறது. ஈழத்தமிழ் உச்சரிப்பும், இயற்கையான நடிப்பும் மேனகாவின் ப்ளஸ் என்றால் அப்பாவி முகமும், அடப்பாவி பன்ச்சும் சந்துருவின் ப்ளஸ்!

சந்துரு – உலகக் கணவர்மார்களின் ஒரே அடையாளம்!

மேனகா – அகில உலக டார்ச்சர் மனைவிகளின் ஒட்டுமொத்த வடிவம். டியர் சந்துரு, எல்லார் வீட்டு தோசையிலும் ஓட்டைகள் இருக்கும். ஆனா, உங்க வீட்டுல, தோசைக்கல்லே ஓட்டையா இருக்குப்பா… உன் பொண்டாட்டியை கடைசி வரை நல்லபடியா வெச்சுக்கப்பா. அப்பதான் வ்யூவர்ஷிப்பும், ஃபேமிலிஷிப்பும் நிலைக்கும்!… ஹா ஹா…!

3 COMMENTS

 1. ஆர்.ஜெ .சந்துரு_மேனகா ஜோக் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சிரிக்க
  வைத்து விடும்.நடிப்பு சூப்பரா இருக்கும்

 2. நயனை நல்லா தெரிஞ்சிவச்சிருக்கிற அனு
  மே டம் தாராவுக்கு ஒரு கோ ரிக்கை வேற
  வச்சதை நாங்களும் ஆதரிக்கி றாே ம்.
  து.சே ரன்
  ஆலங்குளம்

 3. இலங்கை ஆர் . ஜே. சந்துரு- மேனகா ஜோக்கை விட நம் ஆசிரியரின் பதில் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

‘செஸ்’ விளையாடத் தெரியுமா மேடம்? - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி செஸ்ஸா? யாராவது அறிவு ஜீவிங்க விளையாடட்டும்! நாம்ப ஜஸ்ட் ரசிக்கலாம்! பொறுமையைச் சோதிக்கும் இந்த விளையாட்டில் எந்த ஆர்வமுமில்லை! ஆனா... ஓரளவு புரியும்! அப்புறம்,...

அன்புவட்டம்!

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றி... - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி பெரிய பெருமைதான் கெஜலட்சுமி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நம்ப சென்னை செஸ் ஒலிம்பியாட். செஸ் ஒலிம்பியாட்டை நடத்தணுங்கிற...

அன்புவட்டம்!

தாலியைக் கழற்றி வைத்து மனைவி செய்த துன்புறுத்தலால் கணவருக்கு விவாகரத்து வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதே! - வாணி வெங்கடேஷ், சென்னை இப்போதெல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆனதுமே, பல நாகரிகப் பெண்கள் போடும் முதல் கண்டிஷனே...

அன்புவட்டம்!

 இளையராஜாவின் எம்.பி. பதவி சர்ச்சைக்குள்ளானதே! - கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி நான் பத்தாவது படிக்கும்போது, வயல் வரப்புகளில் உட்கார்ந்து தேர்வுகளுக்குத் தயாராவது வழக்கம். கால்களின் அடியே ஜில்லென்ற ஏற்றம் பாய்த்த நீர் பாய்ந்துகொண்டிருக்கும். அப்போது நெல்,...

அன்புவட்டம்!

“பயணிகளுக்கு எச்சில் தொட்டு பஸ் டிக்கெட்டுகளைக் கொடுக்கக்கூடாது” என்று பஸ் கண்டக்டர்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளதே! - வாணி வெங்கடேஷ், சென்னை எச்சில் மட்டுமா? எங்க ஊர் கண்டக்டர்களை வந்துப் பாருங்க வாணி! நெற்றி, கழுத்துல...