0,00 INR

No products in the cart.

‘வாய்தா’ பெளலின் ஜெசிகா Exclusive

-ராகவ் குமார்
பௌலின் ஜெசிகா நேர்காணல்: 

மீபத்தில் வெளியான ‘வாய்தா’ படத்தில் நடித்த பௌலின் ஜெசிகா பார்ப்பதற்கு அழகாகவும், நம்ம வீட்டு பொண்ணு, பக்கத்து வீட்டு பொண்ணு, எதிர் வீட்டு பொண்ணு என நாம் அன்றாடம் பார்க்கும் பெண்களை போல இருக்கிறார்.

இனி ஓவர் டு ஜெசிகா :

உங்களைப் பற்றி…?

ந்திராவில் இருக்கும் ஒரு சிறிய ஊர்தான் என் சொந்த ஊர், நான் ஆந்திராவில் இருந்தாலும்  அங்க தமிழ் வழி பள்ளியில்தான் படிச்சேன். (அட!). ஸ்கூல் முடிச்சதும்  பி.காம்  சேர்ந்தேன்.  சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பி.காம் படிப்பைத் தொடர முடியல. சென்னை வந்து பிரபல நாளிதழில் வேலை செய்தேன். சில சேனல்களிலும் வேலை பார்த்தேன். எனக்கு அடிப்படையில் நடிக்கும் ஆர்வம் இருந்தது. அதனால் குறும்படங்களில் நடிக்க முயற்சித்தேன். அநீதி கதைகள் என்ற குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சினிமா என்ட்ரி எப்படி?

ன் குறும்படங்களை பார்த்த சிலர் சினிமாவில் நடிக்க ஊக்குவித்தார்கள். ‘துப்பறிவாளான்’ படத்தில் நடிக்க மிஸ்கின் சார் அழைப்பு விடுகிறார் என்று கேள்விப்பட்டு அவரை அணுகினேன். சில ஆடிஷன்களுக்குப் பிறகு எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு விதார்த் நடித்த ‘கார்பன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன்.

‘வாய்தா’ பட அனுபவம்…?

‘வாய்தா’ படத்தில் நெசவாளர்ப் பெண்ணாக நடித்திருக்கிறேன். நான் வாழ்ந்த ஊரில் என் உறவினர்களில் சிலர் நெசவு வேலை செய்து வந்தார்கள். இவர்கள் பேசுவது, உடல் மொழி பற்றி ஓரளவு தெரியும். ‘வாய்தா’ டைரக்டர் மகிவர்மன் நெசவு செய்யும் பெண்ணின் கேரக்டர் பற்றி சொன்னவுடன் நான் எங்கள் ஊரில் பார்த்த பலரின் உடல் மொழியை மனதில் வைத்து நடித்தேன்.

இதற்கான தனி பயிற்சி ஏதாவது…?

யக்குனர் படப்பிடிப்பு துவங்கும் முன் சில நாட்கள் பயிற்சி தந்தார். எப்படி வசனம் பேச வேண்டும், எப்படி உட்கார வேண்டும், நடக்க வேண்டும் என ஒவ்வொரு அசைவுக்கும் டைரக்டர் பயிற்சி தந்தார். இந்த பயிற்சியின் பிரதி பலிப்புதான் என் நடிப்பு.

‘வாய்தா’ படத்தில் காதலில் நெருக்கமும், பிரியும்போது வருத்தமும் பிரதிபலிக்கும்படி மிக நன்றாக நடித்துள்ளீர்கள். முன் அனுபவம் ஏதேனும் உதவியதா…?

ரியல் வாழ்க்கையின் அனுபவம்தான். ஆனால் எனக்கு ஏற்பட்டது இல்லை. என் நண்பர்கள் சிலர் காதலித்தவர்களை கரம் பிடிக்க முடியாமல், மிக மோசமான நிலைக்கு ஆளானார்கள்.இதை பார்த்த அனுபவம் நடிக்கும்போது ஓரளவு கை கொடுத்தது.

சினிமா பாதுகாப்பானதா?   

னைத்து பெண்களுக்குமே சினிமா பாதுகாப்பானதுதான். நாம் எப்படி இருக்கிறோம், எப்படிப் பார்க்கிறோம், எவ்வாறு சிந்திக்கிறோம், எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதே முக்கியம். சினிமா ஒரு கண்ணாடி போல. எதிரில் நின்றால் நம்மைத்தான் பிரதிபலிக்கும்.

சினிமா தாண்டி…?

நிறைய ஸ்கிரிப்ட் எழுதுவேன். நான் வாழ்ந்த எங்கள் ஊரை மையப்படுத்தி ஒரு கதை எழுதி இருக்கிறேன். எங்கள் பகுதியை சேர்ந்த தயாரிப்பாளர் அதை தயாரிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

விருப்பம் நிறைவேற வாழ்த்துகள் ஜெசி!

ராகவ்குமார்
ராகவ்குமார் கல்வித் தகுதி: எம் பில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்.கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி குழும பத்திரிகைகளில் தம் படைப்புகளை ஏற்றி வரும் நிருபர், எழுத்தாளர். திரை விமர்சனங்கள், நேர்காணல்கள், சினி கட்டுரைகள் இவரது கோட்டை. 12 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா, கிராபிக்ஸ் & அனிமேஷன் துறையில் ஆசிரியர் பணி.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...