0,00 INR

No products in the cart.

புகார் பிரேம்குமார்…

சங்கடம் தருபவர்களை சமாளிப்பது எப்படி? – 5

ஜி.எஸ்.எஸ்.
ஓவியம் : சுதர்ஸன்

ங்கி மேலாளரின் அறைக்குள் வேகமாக நுழைந்தார் பிரேம்குமார்.

இப்ப மணி என்ன சார்?’’ என்று கேட்டார்.

10.10’’ என்றார் மேனேஜர்.

கேஷியர் சரியான நேரத்துக்கு வரலே. எழுத்து வடிவில் புகார் கொடுக்கலாம்னு இருக்கேன்’’ என்றார்.

மேனேஜர் கொஞ்சம் பதற்றத்தோடு வெளியில் வந்து பார்த்தார். கேஷியர் அவருடைய இடத்தில் உட்கார்ந்திருந்தது தெரிந்தது. “வந்துட்டாரே சார்’’ என்றார்.

ஆனால், அவர் பத்து மணிக்கே வேலையைத் தொடங்கணும் இல்லையா? நீங்க வந்து விசாரிக்கிறீர்களா? இல்லையா?’’

விதியை நொந்துகொண்டு கேஷியரை மேனேஜர் விசாரிக்க, தான் பத்து மணிக்கே வங்கிக்கு வந்துவிட்டதாக அவர் கூற, “பத்து மணிக்கு வங்கிக்குள் நுழைந்திருக்கலாம். ஆனால், அவர் சீட்டிலே உட்கார்ந்தது 10.03க்குதான்’’ என்று அடம் பிடித்தார் பிரேம்குமார்.

சார் இயற்கையின் அழைப்புக்காக ஒரு மூணு நிமிஷம் செலவாயிடுச்சு” என்றார் கேஷியர் கொஞ்சம் பரிதாபமாக.

எந்த அழைப்பாக இருந்தாலும் நீங்க அதை அலட்சியம் செய்திருக்கணும்’’ என்று கறாராகக் கூறும் இவர்தான் பிரேம்குமார். தெரிந்தவர்கள் இவரை, ‘புகார் பிரேம்குமார்’ என்பார்கள்.

அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு பரிசுத் தொகுப்பில் ஒரு முழு கரும்பு வழங்கப்படும்’ என்ற அறிவிப்பு வந்தவுடன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகாரை எழுப்பினார் பிரேம்குமார். அந்த ஒவ்வொரு கரும்பும் ஒரே அளவு கொண்டதாக இருந்தாக வேண்டுமாம். ஓரிரு சென்டி மீட்டர் உயரம் வேண்டுமானால் வேறுபடலாமாம்.

நாளிதழ் ஆசிரியர் ஒருவரை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது பிரேம்குமார் அனுப்பியிருந்த ஒரு கடிதம். கடும் வெயிலில் மக்கள் அவதிப்படும்போது முதல்வருக்கு அதைப்பற்றி சிறிதும் கவலை இல்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதை அடுத்த நாளே, ‘ஆசிரியருக்குக் கடிதங்கள்’ பகுதியில் பிரசுரித்தாக வேண்டுமாம். அப்போது தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! பிறகுதான் விவரம் தெரிந்தது. பங்களாதேஷில் அப்போது கடும் வெயில். அந்த மக்களின் நிலை குறித்து வருந்தி, தமிழக முதல்வர் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டுமாம்!

லங்கை அகதிகளுக்கு வாக்குரிமை இல்லாததைக் கடுமையாகச் சாடிய பிரேம்குமார், அதற்கான காரணத்தையும் தவறாமல் குறிப்பிட்டார். தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி, கட்சிகள் பொதுமக்களுக்கு கையூட்டு அளிக்கிறார்கள். வாக்குரிமை இருந்தால்தான் அகதிகளுக்கும் அப்படித் தொகை கிடைக்கும். அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்!

அவர் இருந்த பகுதிக்கு மழை வெள்ளத்தைப் பார்வையிட வந்த அமைச்சர் குறித்து ஒரு புகார் எழுப்பினார். அப்போது அவர் அணிந்திருந்த மழைக்கோட்டு வெளிநாட்டு தயாரிப்பாம். ‘தேசபக்தி இல்லாத அமைச்சர்’ என்று அந்தப் புகாருக்கு தலைப்பிட்டிருந்தார்.

ரு முறை, ‘உங்கள் புகார்களை இந்தப் பெட்டியில் போடலாம்’ என்ற அறிவிப்பைச் செய்ததும், உடனடியாக ஒரு புகார் எழுதி அந்தப் பெட்டியில் போட்டார் புகார் பிரேம்குமார். அதில் இருந்த குறை, ‘புகார் பெட்டி சிறியதாக இருக்கிறது. இதைவிட அதிக அளவில் அது இருக்க வேண்டும்’ என்பதுதான்.

உங்கள் ஊர் எது?’ என்று யாராவது கேட்டால், பிரேம்குமாரின் முகத்தில் ஒரு தனி ஒளி பிறக்கும். பூம்புகார்.

னக்கென்ன வந்தது?’ என்று சமூகப் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பவர்களை விட, சமூக அவலங்களைக் கண்டதும் புகார் எழுப்புபவர்கள் அவசியம் தேவைதான். ஆனால், பிரேம்குமார் போல எடுத்ததற்கெல்லாம் புகார் படிப்பவர்களை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போமா?

இப்படிப்பட்டவர்களுடன் பழக நிச்சயம் பொறுமை தேவை. என்றாலும்கூட, அவர்கள் பேசுவதை கவனத்துடன் கேளுங்கள். பின்னர் அவர்களின் புகாரின் அடிப்படைத் தன்மையை நீங்களே சுருக்கமாகக் கூறிவிட்டு, “இதுதான் உங்கள் புகாரா?’’ என்று கேளுங்கள். இந்த இரண்டு செயல்களிலுமே அவர்களின் ஈகோ திருப்தியடைந்து விட வாய்ப்பு உண்டு. அதுவும் அவர் தொடர்ந்து நீளமாக அளித்த புகாரை நீங்கள் சுருக்கிக் கூறும்போது, ‘இவ்வளவு சுருக்கமான விஷயத்தை நாம் அதிக நேரம் வளவளவென்று கூறி இருக்கிறோமே’ என்ற சிறு குற்ற உணர்ச்சி தோன்றி, அவர்கள் அடக்கி வாசிக்கக் கூடும்.

பிரேம்குமார் குறித்த வங்கி நிகழ்வில் நீங்கள் இப்படி நடந்துகொள்ளலாம். “சரியாகப் பத்து மணிக்கு கேஷியர் தனது வேலையைத் தொடங்கியிருக்க வேண்டும்தான். இப்போது என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்?’’ என்று நீங்கள் கேட்கும்போது, ‘சும்மா நடந்ததையே பேசிக்கிட்டு இருக்காதீங்க? என்ன ஆகணும்னு சொல்லுங்க’ என்ற மறைமுக தொனி அதில் ஒலிக்கிறது. அவரும் புகார் மனநிலையிலிருந்து, நிகழ்கால மனநிலைக்கு வருவார்.
‘‘
நாளையிலே இருந்தாவது ஒழுங்காக நேரத்துக்கு அவரை வரச்சொல்லுங்க’’ என்பது போல் கூறுவார். “நிச்சயம் சொல்றேன்’’ என்று மேனேஜராகிய நீங்கள் கூறிவிட்டால் பெரும்பாலும் பிரச்னை தீர்ந்து விடும். புகார் பிரேம்குமார் அடங்கி விடுவார்.

இப்படிப்பட்டவர்கள் எதைக் குறித்தாவது நீண்ட புகார் கூறும்போது, அவர்களுக்குப் (உங்களுக்கும்) பிடித்த வேறு ஏதாவது சப்ஜெக்ட் குறித்து பேச்சை திசை திருப்புங்கள். அவர்கள் எது குறித்து அதிகமாகப் புகார் கூறுவார்களோ, அந்த விஷயம் உங்கள் உரையாடலில் இடம்பெறாமல் கவனமாகத் தவிர்த்து விடுங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் நண்பர் தனது அலுவலகப் பணி குறித்து எப்போதும் புலம்புவார் என்றால், அலுவலகம் குறித்து எதுவும் (உங்கள் அலுவலகம் உட்பட) பேச வேண்டாம்.

நியாயம்தான். ஆனால், இதற்கு என்ன செய்ய முடியும் சொல்லுங்க?’ என்பதுபோல் கேட்டால், அவர் ஒரு பதிலைக் கூறாமல் இருக்க மாட்டார். ஆனால், அந்த பதிலில் இருக்கக்கூடிய அபத்தங்களை ஒருவழியாக உணர்ந்துகொண்டு பேச்சை மாற்றக் கூடும்.
(தொடரும்)

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...