0,00 INR

No products in the cart.

திருநீறு பட்டையும்; உத்திராட்சக் கொட்டையும்!

மதுரை ஆர்.கணேசன்

சுரேஷ் அன்புமாரி தம்பதியின் ஒரே மகள் எஸ்.எஸ்.யாழினி. ஸ்ரீசாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிவ புராணக் கதைகள் மற்றும் தேவாரம், திருவாசகம் பாடல்கள் பாடியும், சொற்பொழிவு ஆற்றிக்கொண்டும் வரும் யாழினி, ‘திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி கல்வி அறக்கட்டளை’ அமைப்பு சார்பில் நடந்த திருவாசகம், தேவாரம் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பு முதல் பரிசு பெற்று இருக்கிறார்.

எஸ்.எஸ்.யாழினி

தாம்பிராஸ் அறக்கட்டளை’ சார்பில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசு, ‘தமிழ் இசை சங்கம்’ நடத்திய போட்டியில் முதல் பரிசு என பட்டியல் நீள்கிறது.

பள்ளிச் சீருடையுடன் கனிந்த முகம், நடு உச்சி எடுத்து தலைவாரிய வகுடு, நெற்றியிலும், இரண்டு கைகளிலும் திருநீறு பட்டை, கழுத்தில் உத்திராட்ச கொட்டையுடன் இந்த வயதிலேயே பழுத்த பழமாகப் பீடு நடை போடுகிறார் யாழினி.

மதுரை, பொன்மேனி பகுதியில் யாழினி குடியிருக்கும் அக்கம் பக்கத்திலும் மற்றும் பள்ளிக்குச் செல்லும் வழியிலும், ‘பட்டை யாழினி வந்து விட்டாள்’ என்கிற வரவேற்பு எகிறுகிறது!

சிவபெருமான் மீது நாட்டம் வந்ததற்குக் காரணம், திருவாசகத்தில் 43ஆம் திருவார்த்தை என்ற தலைப்பில் ஆறாம் பாடல், ‘…வேவத் திரிபுரம் செற்றவில்லி வேடுவ…’ என்று சொல்லிவிட்டு ராகத்துடன் பாடி காட்டுகிறார். நாமும் அதைக் கேட்போமா?

திருநீறு, பட்டை இல்லாமல் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்” எனக்கூறும் யாழினியிடம் பேசியபோது

என்னுடைய பெற்றோர் தினமும் அதிகாலையில் வீட்டு பூஜை அறையில் திருமுறை பாடல்கள் பாடுவது வழக்கம். அதை நான் தூக்கத்தில் கேட்டு கேட்டு, எனது ஆன்மிக சிந்தனை தூண்டப்பட்டது.

அப்பா, அம்மாவுடன் சேர்ந்து நானும் பாட ஆரம்பித்தேன். தேவாரம், திருவாசகம் பாடல்களின் அர்த்தத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டதால் அனைத்தையும் பாராயணம் செய்தேன்.

நானும் காலையில் ஆறு மணிக்கு எழுந்து குளித்து விட்டு, உடம்பில் பதினாறு இடங்களில் திருநீறு பூசிக்கொண்டு அனுஷ்டானம் பண்ணி, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் பண்ணுவேன். தினமும் பஞ்சபுராணம், சிவபுராணம் மற்றும் திருவாசகத்திலிருந்து ஒரு பதிகம் பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

திருமுறை பாடல்களை நான்கு வயதிலிருந்து விரும்பிப் படிக்கத் தொடங்கினேன். அதேபோல, தேவாரம், திருவாசகம் தெரிந்திருப்பதால் திருவாவடுதுறை ஆதினத்தில் ஏழு வயதிலேயே, ‘தீட்சை’ பெற்றிருக்கிறேன்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் தேவாரத்தை அருளினார்கள். மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல, சிவபெருமான் கரம் வருந்தி எழுதி அருளியது திருவாசகம்.

திருமுறைகள் நம் வாழ்க்கையை செம்மைப்படுத்துகின்றன. புகழ் பெறவும், நோய்கள் தீரவும் கடன் தீரவும், செல்வச் செழிப்பு கூடவும், வீடு வாங்கவும் பதிகங்களில் பாடல்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றை தினமும் படித்து வந்தாலே, நினைத்தது எல்லாம் நடக்கும்.

படிப்பிலும் கவனம் செலுத்தி நன்றாகப் படிக்கின்றேன். பரதமும் பயின்று வருகிறேன்.

எனக்கு உத்திராட்சக் கொட்டையும் திருநீறு பட்டையுமே அடையாளம். தேவாரம், திருவாசகத்தை குழந்தைகளுக்குக் கொண்டு சேர்க்கணும் என்ற லட்சியமும் உண்டு. தற்போது ஐந்து குழந்தைகளுக்கு இலவசமாகப் பாடல்கள் கற்றுக் கொடுக்கிறேன்.”

யாழினியின் பெற்றோர் சுரேஷ் அன்புமாரியிடம் பேசியபோது

எங்க குடும்பம் சைவ சமயத்தைச் சார்ந்தது. எனக்குத் திருமணமாகி யாழினி பிறந்த பிறகு எங்களுக்குத் திருமுறை மற்றும் திருவாசகத்தின் மீது மிகுந்த பற்று ஏற்பட்டது.

அதை எப்படிப் படிப்பது? வழிமுறைகள் என்ன? என்று தேடி அலைந்து, பல சிவனடியார்கள் உதவியின்பேரிலும் திருவாசகத்தை ராகத்துடன் பாடக் கற்றுக்கொண்டோம்.

திருவாசகத்தை கற்றதுடன், எம்பெருமான் மீது பிடிப்பு அதிகமாயிற்று. ஈசனைத் தவிர வேறு எதையும் நினைக்கத் தோன்றவில்லை. அதேபோல, தீட்சை பெற வழியைத் தேடினோம்.

இப்படி ஒவ்வொன்றாய் தேடித் தேடி எம்பெருமான் திருவருள் பெற்றோம். அப்படியே ஒவ்வொரு நிலையிலிலும் எங்க குழந்தை யாழினியையும் வளர்த்து வந்தோம். அவளும் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டு அனைத்தையும் கற்றுக் கொண்டாள்.

இளைய தலைமுறையினரிடம் திருமுறையை அறிமுகப்படுத்துவதே எங்களின் நோக்கம். நம்முடைய இந்து மத பண்பாடு, கலாசாரம் புதுப்பொலிவு பெற்று எங்கும் நிறைந்திருக்க வேண்டும்.”

1 COMMENT

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

புள்ளிக் கோலம் முதல் பொன்னியின் செல்வன் ஓவியம் வரை…

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு   புள்ளிக் கோலத்தினை மையமாகக்கொண்டு என்னென்ன செய்யலாம்? “ஏன்... என்னென்னவோ செய்யலாம். புள்ளிக் கோலம் என்பது நம்முடைய அழியாத பாரம்பரியம். பழைமையான கலாசாரம். நான் பிறந்து வளர்ந்தது கோவையில். திருமணம் ஆகி...

இரண்டு ரூபாய் தோசைக் கடை…!!!

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. “நேத்து வடித்து வுட்ட கஞ்சியிலக் கொஞ்சம் எடுத்து வைத்து, மறுநாள் காலையில அதுலக் கொஞ்சம் தண்ணி ஊத்தி சூடு பண்ணித் தருவாங்க எங்க அம்மா. காலம்பர ஆகாரம் எங்களுக்கு அது தான்....

யோகாவில் சாதிக்கும் சந்தியா… 

-  ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு பொறியியல் கல்வியில் கணினியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தும் ஐடி கம்பெனி வேலை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, தான் சிறுமியாக இருந்த போது ஈர்க்கப்பட்ட யோகாவே தனது வாழ்வு என முடிவு...

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...