0,00 INR

No products in the cart.

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க…

பக்டித் துணி

ராஜஸ்தானில் தலையில் பக்டி என்ற தலைப்பாகை அணிவது உண்டு. அந்தத் தலைப்பாகைத் துணியின் நீளம் எவ்வளவு தெரியுமா? அது அங்குள்ள மாவட்டத்துக்கு மாவட்டம் வித்தியாசப்படும். அங்குள்ள கிணறுகளின் நீர்மட்டம் எவ்வளவு ஆழமோ அவ்வளவு நீளமிருக்கும். ஏனெனில் தண்ணீர் எடுக்க பக்டி துணியைத்தான் பயன்படுத்துவார்கள்.
.லெட்சுமி, செங்கோட்டை

பொட்டுக்கடலை வடை
பாயசம், வடையில்லாமல் பண்டிகையா? செய்வதற்கு எளிய சுவையான பொட்டுக்கடலை வடை செய்வோமா!

தேவை: பொட்டுக்கடலை – 2 கப், தேங்காய்த் துருவல் – 1 கப், பச்சை மிளகாய் – 3, முந்திரிப் பருப்பு – 6, கசகசா – 3 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது – 1 கப், எண்ணெய் பொரிக்க.

செய்முறை: பொட்டுக்கடலை சிறிது வறுத்து ரவை போல் பொடிக்கவும். கசகசா, முந்திரிப் பரப்பு, தேங்காய்த் துருவல், உப்பு இவற்றை அரைக்கவும். எல்லாவற்றையும் கலந்து, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை சேர்த்து, தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். மாவை வடைகளாகத் தட்டி, காய்ந்த எண்ணெயில் போடடுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால் பொட்டுக்கடலை வடை தயார்.
எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்

…………….

உலக மண் தினம் டிசம்பர் – 5

லக மண் தினம் டிசம்பர் 5ம் தேதியாகும். மண்ணில் களிமண், செம்மண், வண்டல் மண் எனப் பல்வகை உண்டு. தமிழ்நாட்டில் மண்வளப் பகுதிகள் பற்றிய தகவல்கள் மூன்றில் ஒரு பங்கு நிலம் செம்மண் நிலம், கரிசல் மண், களி மண்ல வண்டல் மண், உவர் மண், வடிகால் நிலம், களர் நிலம் ஆகிய மண் நிலங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செம்மண் நிலப் பகுதிகள் அமைந்துள்ளன. மண் வாசனையை நுகர்ந்து மகிழாதோர் இல்லை. மண்ணாசை என்பது மன்னர் காலத்திலிருந்து இன்றுவரை தொடர்கிறது. மண் இல்லையேல் விளைச்சல் இல்லை. உணவும் இல்லையே!

…………….

துண்டுதகவல்கள்
முகம், உடலைத் துடைத்துக் கொள்ள உதவும் ’துண்டு’க்கு பல்வேறு குணங்கள் உண்டு. முண்டாசு போலக் கட்டிக் கொணடால் கௌரவம். தோளில் போட்டுக் கொண்டால் மரியாதை. துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டால் பணிவு. முக்காடாகப் போட்டுக் கொண்டால் அவமானம். துண்டால் வாயைப் பொத்திக் கொண்டால் துக்கம். கக்கத்தில் துண்டை வைத்தால் அடிமை.
-ஆர். பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்

…………….

காய்கறிகளின் மகத்துவம்

 • கேரட்டை சாப்பிட்டால்
  சாரட்டையும் இழுக்கலாம்.
 • ரத்தம் இல்லையேல் சோகை
  கீரை சூடிடுமே வாகை.
 • வெண்டை சாப்பிட்டால்
  மண்டையுள் பெருகுமே மூளை.
 • வைட்டமினுக்கு நெல்லிக்காய்
  மொத்த பலத்துக்கும் பேரிக்காய்.
 • ஜீரணத்தைத் தந்திடுமே முள்ளங்கி
  அதை ஒதுக்குபவன் ஒரு கோணங்கி (பழங்கள்)
 • மஞ்சள் நிறப் பழங்கள்
  நஞ்சைக்கூட முறிக்குமே.
 • ஆப்பிள் என்றாலே ஆரோக்யம்
  ஆதாம் ஏவாளின் அறிமுகம்.
 • பலத்தைத் தந்திடுமே கம்பு
  அதை வேண்டாம் என்றால் வந்திடும் வம்பு.
 • கேழ்வரகு கொடுத்திடுமே பலம்
  அதைச் சமைப்பதிலோ மிகச் சுலபம்.
 • முளை கட்டிய தானியம் உண்டால்
  களை கட்டுமே உங்கள் உடல்.
  ஆர். பார்வதி, சென்னை

…………….

விடுகதைகள்!
கோரத் தாய்க்கு ஐம்பது குஞ்சுகள்
பிஞ்சுகள் வாயெல்லாம்
நஞ்சுதான் மிஞ்சி நிற்கும்.
அது என்ன?
தீப்பெட்டியும் தீக்குச்சிகளும்

ங்கமுத்து வாசலிலே
தங்கமுத்து காயுது.
அதை எடுத்து வாயில் போட்டால்
திக்குமுக்கு ஆகுது!
அது என்ன?
மிளகாய்

நித்தம் மூடும் திறக்கும்
கதவு சத்தம் மட்டும்
கேட்காது.
அது என்ன?
கண்ணின் இமைகள்
என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி

…………….

ஜலதோஷம் போக்கும் தும்பை தொக்கு
தேவை: தும்பை இலை (பூவுடன்) – 2 கைப்பிடி
பச்சை மிளகாய் – 6, சிறிய புளியம் பிஞ்சு– 8 அல்லது புளிசிறிய எலுமிச்சை அளவு,
தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு,கடலை பருப்புதலா 1ஸ்பூன், பெருங்காயம்,கருவேப்பிலைசிறிது, எண்ணெய், உப்பு –தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் தும்பைக் கீரையைப் 3 நிமிடங்கள் வேக விட்டு வடிகட்டவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பச்சை மிளகாயை வதக்கி ஆற விடவம். அதே வாணலியில் இன்னும் சிறிது எண்ணெய் ஊற்றி வடிகட்டிய தும்பை கீரையை அதில் போட்டு வாசம் போக நன்றாக வதக்கவும். மிக்ஸியில் வதக்கிய கீரை, பச்சை மிளகாய், புளி, உப்பு சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைத்தெடுக்கவும். தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அதில் சேர்க்கவும். விரும்பினால் ஐந்து பூண்டுப் பற்களை வதக்கி சேர்க்கலாம். தும்பை மிகுந்த மருத்துவ குணம் கொண்டது .மழைக் காலங்களில் வரும் காய்ச்சல்,ஜலதோஷம்,இறுமல்,தலைவலியைப் போக்க வல்லது. எல்லா இடங்களிலும் இக்கீரை சுலபமாகக் கிடைக்கும் . அல்லது கீரை விற்பவரிடம் கேட்டால் கொண்டு வந்து தருவார் .
-வி.ரத்தினா, ஹைதராபாத்

…………….

உடல் எடையைக் குறைக்க வெள்ளைப் பூசணி சாறு!

வெள்ளைப் பூசணியில் வைட்டமின் பி, சியுடன் கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து,பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

 • அல்சர் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் வெள்ளைப் பூசணிச்சாறு அருந்த உடனடிப் பலனைக் கொடுக்கும்.
 • அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்னையை குறைக்கவும் பூசணி சாறு உதவும்.
 • தினமும் காலையில் வெள்ளைப் பூசணிச் சாறுடன் தேன் கலந்து குடிக்க, வயிற்றுலுள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்று உபாதைகள் , தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கம்.
 • இச்சாறில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
 • உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால் உடல் சூடு தணியம். உடலில் உள்ள நீர்ச்சத்து அதிகரித்து உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
 • இச்சாற்றை காலை, மாலை என 2 வேளை குடித்து வர ரத்தம் சுத்தமாகும். நோய் தொற்று ஏற்படாமல் காக்க உதவும்.
 • சிறுநீரகத் தொற்றை தடுக்க உதவுகிறது.
 • சிறுநீருடன் ரத்தம் வெளியேறுவது, அல்சரினால் உடலில் ரத்த கசிவு, பைல்ஸ் போன்றவற்றால் ஏற்படும் ரத்தக்கசிவை கட்டுப்படுத்த வெள்ளைப் பூசணி சாறு அருமருந்தாகப் பயன்படுகிறது.
  மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...