0,00 INR

No products in the cart.

இந்திய ராணுவத்தில் அசத்தும்  பெண்கள் 

படங்கள்பிள்ளை 

பெண்கள் எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள் என்பதற்கு சான்றாக இந்த  நூற்றாண்டில் அவர்கள்  பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து வருகின்றனர். குறிப்பாக, இந்திய ராணுவத்தில் பெண்களின் பங்கீடு அதிகரித்து வருகின்றது 

முதலில் இந்திய கடற்படையும், விமானப் படையும்தான், ‘போர் முனையில் சண்டை போடபெண்களை அனுமதிக்கத் துவங்கியது. செப்டம்பர் மாதம்  2021 இல் , ‘இந்திய ராணுவம் ஆயுதப் படையிலும் பெண்களை சேர்க்க வேண்டும்,’ என்ற சட்டத்தை சுப்ரீம் கோர்ட் அமலுக்கு கொண்டு வந்தது. 

இதன் எதிரொலியாக இந்த ஆண்டு நமது நாட்டின் 73வது குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தை சேர்ந்த  பெண்களின் பங்கேற்பு அனைவரும் பிரமிக்கும் விதமாக இருந்தது. அந்த அணிவகுப்பு மாதருக்கான ஒரு கொண்டாட்டம் என்று கூட சொல்லாம் . வானிலும், தரையிலும், இரு சக்கர வாகனத்திலும் அவர்கள் புரிந்த சாகசங்கள்அப்பப்பா! அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. 

 விமான லெப்டினன்ட் ஷிவாங்கி சிங்  

ஃபேல் போர் விமானத்தை இயக்கிய முதல் இந்திய பெண்மணி என்ற பெருமை இவரையே சாரும்போர் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ரஃபேல் விமானத்தை இந்திய அரசாங்கம் பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கியது . இவ்வாறு வாங்கிய விமானங்கன் மொத்தம் 36 மட்டுமே. இதில் ஒன்றை தான் ஷிவாங்கி இயக்குகிறார். குடியரசு தினத்தன்று விமானப் படை நடத்திய அணிவகுப்பில் பங்கேற்ற இவர்  இந்திய பெண்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

 லெப்டினன்ட்  மனிஷா போஹ்ரா 

ரம்பரை பரம்பரையாக இந்திய ராணுவத்தில் பணிபுரியும் குடும்பத்தில் பிறந்த இவர், இந்திய ராணுவத்தில் சேர்ந்ததில் வியப்பொன்றுமில்லை. ஆயினும், இந்த வருட குடியரசு தினத்தன்றுஆர்மி அர்ட்னன்ஸ் கார்ப்ஸ்(Army Ordnance Corps) இன் முழுவதும் ஆண்களால் ஆன படையின் அணிவகுப்பிற்கு தலைமை தாங்கிஆண்பெண் சமத்துவம்போற்றும் பிரதிநிதியாக இருந்திருக்கிறார். 

  மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு   

ந்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ஆயிரக்கணக்கான பெண்கள் இணைந்து நம் நாட்டிற்காக  அரிய சேவை புரிந்து வருகின்றனர்.  சக்தியின் சொரூபமாக இவர்களை நாம் வணங்குகிறோம்…  இவர்களது மோட்டார் சைக்கிள் அணிவகுப்பும்  இதே போன்ற ஒரு காட்சியை  அளித்ததாகவேத் தோன்றியது. 

  லெப்டினன்ட் கமாண்டர் ஆன்சல்  ஷர்மா  

1992 ஆம் ஆண்டு வரை மருத்துவ சேவைக்காகவே இந்திய ராணுவத்தில் பெண்கள் பணியமர்த்தப் பட்டனர். இந்திய கடற்படை தான் முதன்முதலில் மற்ற சேவைகளுக்காக பெண்களை பணியமர்த்த துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே கடற்படையில் அதிக பெண்கள் சேர்ந்துள்ளனர் 

மேலும் கடற்படையில் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக,   இந்த ஆண்டு கமாண்டர் ஆன்சல்  ஷர்மா, 100 பேர் கொண்ட கடற்படையின் அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார். 

இந்த மகளிர் தினத்தன்று, இந்திய நாட்டுக்காக ஆயுதம் தாங்கி, சொந்த விருப்பு வெறுப்புகளைத்  தாண்டி போராடும் ஒவ்வொரு வீரப் பெண்ணையும் மங்கையர் மலர் தலைவணங்குகிறது.

2 COMMENTS

 1. மஞ்சுளா சுவாமி நாதன் எழுதிய கட்டுரை
  மூலம் இந்திய ப் படையின் உ ழைப்பு,முயற்சிமற்றும் விழிப்புணர்வு பாராட்டுக்குரியது .
  து.சேரன்
  ஆலங்குளம்

 2. பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பதால் ஆணுக்கு நிகராக பெண்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு உழைப்பது பாே ற் றுதற்குரியது.
  து சேரன்
  ஆலங்குளம்

மஞ்சுளா சுவாமிநாதன்http://www.joyousassortment.com
மஞ்சுளா சுவாமிநாதன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். பெரும்பாலும் ஆங்கில பத்திரிகைகளில் எழுதிய இவர், இப்பொழுது தமிழிலும் சமூகம் சார்ந்த கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். சரித்திரத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...