0,00 INR

No products in the cart.

அமாவாசை நிலா மகளும் அழகுதானே !!

கருப்பு நிறத்தழகி –  சென்னையில் பிரம்மாண்ட போட்டி!

சிவப்பாய் இருப்பவர்கள் மட்டுமே அழகானவர்கள் என்று எண்ணுப வர்களுக்கு சாட்டை அடி அளிக்கும் விதமாகவும் கருப்பு நிறத்து பெண்களை கெளரவப்படுத்தும் வகையிலும், கின்னஸ் சாதனைக்காக சென்னை சாந்தோமில் வைத்து பிரமாண்டமான மணப்பெண் அலங்கார போட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் ’லேடர் கமர்ஷியல் சல்யூஷன்ஸ்’ நிறுவனத்தார்.  பெண்களை பெருமைப்படுத்தும் இடத்தில் மங்கையர் மலர் இல்லாமலா? கருப்பு நிறத்து அழகிகளைப் பாராட்ட நாமும் இணைந்தோம் இந்நிகழ்ச்சியில்.

400 கரு நிறத்து அழகிகள் பங்கேற்ற இந்த  வித்தியாசமான போட்டியில், அவர்களை மேலும் அழகுப்படுத்த பெண் அழகு கலைஞர்கள் மட்டும் அல்லாமல் ஆண் கலைஞர்களும் பங்கேற்றது சூப்பர்! இவர்கள் அனைவரும் சேர்ந்து புதிய உலக சாதனை படைத்தனர். இவர்களில் முதல் மூன்று இடம் பிடித்த அழகிகளுக்கு பிரமாண்டமான பரிசுகளும், மேலும் 50 அழகிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. 400 போட்டியாளர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் சிறப்பாக செயல்பட்டு, நேர காரணங் களுக்காக போட்டியிலிருந்து விலக்கப்படாமல் இருந்ததே மாபெரும் சாதனை என்றுதான் சொல்லவேண்டும். இந்திய நாட்டில் வெவ்வேறு மாநில கலாசாரப்படி மணப்பெண்களை  அழகுபடுத்தி சமத்துவத்தின் அடையாளமாகத் திகழச் செய்தனர்.
“வித்தியாசமாக முயற்சி செய்து பார் வையகம் உன்னை வியந்து பார்க்கும்” என்ற கூற்று வலியுறுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியின் வாயிலாக.

ஆரம்பக்கட்ட கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், புதிய வாய்ப்புகளை அளித்த இடமாகவும், துயரங்களை மறந்து மகிழ்ச்சியுடன் பங்கேற்க வாய்ப்பளித்தத் தளமாகவும் இந்நிகழ்வு அமைந்தது.

அரங்கத்தில் 400 அழகிகளை ஒரு சேர கண்ட போது தெரிந்தது அமாவாசை  நிலாமகளும் அழகுதான் என்று.

தொகுப்பு:

அபிராமி மற்றும் ஹர்ஷினி

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...