0,00 INR

No products in the cart.

கமெண்ட் கல்பனா தேவி!

சங்கடம் தருபவர்களை சமாளிப்பது எப்படி? – 10

– ஜி.எஸ்.எஸ்.
ஓவியம் : சுதர்ஸன்


‘ந
க்கீரரே வந்தாலும் இந்தப் பேச்சில் குற்றம் கண்டுபிடிக்க முடியாது’ என்று யாராவது கூறினால், அவரருகில் கல்பனா தேவி இல்லை என்று பொருள். பிறர் எதையாவது செய்யும்போது கல்பனா தேவி கூர்ந்து கவனித்து அன்னப்பறவை போல, அதை அலசி அதில் உள்ள ஏதாவது ஒரு சிறு குறையை கவனித்து அதை வெளிப்படுத்தத் தயங்க மாட்டாள் . எது பேசினாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து கருத்து உதிர்ப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பாள். என்ன செய்தாலும் (அல்லது செய்யாவிட்டாலும்!) அவளது கமெண்ட்களிலிருந்து தப்ப முடியாது.

கல்பனா தேவியின் அண்ணன், அவள் வசிக்கும் அடுத்த தெருவில்தான் வசிக்கிறார். உறவினர்கள் யாராவது அவர் வீட்டுக்குப் போய்விட்டு, பிறகு தன் வீட்டுக்கு வந்தால் ‘என்னைவிட உங்களுக்கு அண்ணன்தானே உசத்தி’ என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வாள். மாறாக, அவள் வீட்டுக்கு அவர்கள் முதலில் வந்தால், ‘தெரியும்… இங்கே இருக்கிற குறைகளை எல்லாம் கவனிச்சு அண்ணன்கிட்டே பட்டியல் போடலாம் என்பதற்காகத்தானே முதல் வருகை இங்கே!’ என்பாள்.

எதையாவது குதர்க்கமாகக் கூறிவிட்டு, கணவனின் பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பாள்; சூடாக பதிலடி கொடுக்கத்தான். ஆனால், அவளைப் பற்றி அறிந்த கணவன் வாயை மூடிக்கொண்டு இருப்பான்.
‘என்ன பதிலையே காணோம்? நான் என்றால் அவ்வளவு அலட்சியமா?’ என்று கேட்பாள்.

பதில் கூறுவதற்காக அவன் வாயைத் திறக்கும்போதே சீறுவாள். கணவனது வாய் திறந்தது திறந்தபடி நின்றுவிடும்.

அடுத்த வீட்டில் வசிக்கும் ஆறு வயதுச் சிறுமி பள்ளி ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாக வந்து அதற்கான பரிசை ஆசையுடன் காட்டினால், ‘இந்தத் தகர பென்சில் டப்பாதான் பரிசா? இதுக்கு நீ பரிசு வாங்காமலே இருந்திருக்கலாம்’ என்று கூறி, அவளது முகத்தை சுருங்க வைப்பாள்.

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரிடம், ‘தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாததால் எத்தனை பேர் இறந்தார்கள்? உனக்கு என்ன கேடு?’ என்பாள்.

தடுப்பூசி போட்டுக்கொண்டதைப் பெருமையாக யாராவது சொன்னால், ‘நடிகர் விவேக் கூட இப்படித்தான் சொன்னார், பாவம்’ என்று அவர் நிம்மதியைப் போக்குவாள்.

இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டு அதில் யாராவது கொஞ்சம் நிம்மதி அடைந்தால், அப்படிப் போட்டுக்கொண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமலஹாசனை நினைவுப் படுத்தி விட்டுத்தான் ஓய்வாள்.

விமர்சனம் செய்வது வெகு எளிது. அதை எதிர்கொண்டு மாற்றிக்கொள்வது கடினம். சில சமயம் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் உங்களை சரியாகச் செதுக்கிக்கொள்ள உதவும்.

ஓவியம் : சுதர்ஸன்

விர, கல்பனா தேவி போன்று எதற்கும் குறை கூறுபவர்களை உங்களால் சமாளிக்க முடிகிறது என்றால், வாழ்க்கையில் வேறு பல சங்கடங்களை உங்களால் வருங்காலத்தில் சமாளிக்க முடியும்! எதற்கும் எதிர்மறைக் கருத்து கூறுபவரிடம் எது குறித்தும் ஆலோசனை கேட்காதீர்கள்.

‘குட் பாஸ் பேட் பாஸ்’ என்ற புத்தகத்தில் டாக்டர் ராபர்ட் சட்டன் இப்படிக் கூறுகிறார்… ‘எல்லாவற்றிலும் தவறு கண்டுபிடிப்பவர்களைக் கொண்ட அணிகள், அப்படி இல்லாதவர்கள் உள்ள அணிகளை விட, சுமார் 50 சதவீதம் குறைவாகவே செயலாற்றுகின்றன.’

நீங்களும் கல்பனா தேவியாக இருந்தால் ஓர் ஆலோசனை. பிரச்னைகள் இருக்கலாம்… ஆனால், அவற்றை குறைகளாகக் கருதாமல் சவால்களாகக் கருதி, தீர்வுகளை நோக்கி அல்லவா செல்ல வேண்டும்?

தினமும் கல்பனா தேவி போன்றோரை, அதாவது குறை கூறுவதையே வழக்கமாகக் கொண்டவர்களை சந்திக்க வேண்டியிருப்பவர்கள், ‘உண்மைதான்… ஆனால், இதை எப்படி சரி செய்வது?’ என்று கேளுங்கள்.

அவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ ஏதாவது ஒரு தீர்வைக் கூறும் கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும். அப்போதும், ‘இதையெல்லாம் சரி செய்யவே முடியாது’ என்றோ, ‘இதையெல்லாம் மாற்றவே முடியாது’ என்று எதிர்மறையாகக் கூறினாலோ, ‘கொஞ்சமாவது சரிசெய்யவோ மாற்றவோ என்ன செய்யலாம்?’ என்று விடாமல் கேளுங்கள். அதாவது எதிர்மறை அணுகுமுறையிலிருந்து கொஞ்சமாவது அவர்களை நேர்மறை அணுகுமுறையை நோக்கித் திருப்புங்கள்.

‘கூறிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்பது போல், கல்பனா தேவி போன்றவர்களைக் கேட்டால் சில சமயம் நிஜமான பதில் கிடைக்கும். பாதுகாப்பற்ற உணர்வு அல்லது பொறாமை காரணமாக சிலர் பிறரை குறை கூறிக் கொண்டிருப்பார்கள். அந்த உண்மையை அவர்களை உணரவைக்க முடிந்தால், அவர்கள் அணுகுமுறை ஓரளவு மாறும்.

உங்களைப் பற்றி தொடர்ந்து இப்படி குறை கூறிக்கொண்டு இருப்பவரிடம், ‘நான் பிறரை மரியாதையுடன் நடத்துவேன். என்னையும் பிறர் அப்படி நடத்த வேண்டும் என்று நிச்சயம் எதிர்பார்ப்பேன்’ என்பது போல் பளிச்சென்று கூறிவிடலாம்.
(நிறைவுறுகிறது)

2 COMMENTS

  1. அருமையான ஐடியா தந்த சாருக்கு நன்றி. என்னைச் சுற்றி சில நட்பு,உறவுகள் கமெண்ட் என்று எதையாவது சொல்லி மனதை கஷ்டப்படுத்துவர்இனி அவர்களை சமாளிக்க வழி கிடைத்து விட்டது..

    • எதிர்மறையாக கருத்து கூறுபவர்களிடம் எது குறித்தும் ஆலோசனை கேட்காதீர்கள் என்பது நல்ல விழிப்புணர்வு, நம்மை தொடர்ந்து குறை கூறுபவர்களிடம் ‘ நான் பிறரை மரியாதையுடன் நடத்துபவன். என்னையும் பிறர் அப்படியே நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பேன் ‘ என்ற கருத்து மிகவும் வலுவானது . நாம் செல்லும் பாதையின் தடைகளை தகர்க்கும். தொடர் அருமை. தொடரட்டும்.

      ஆ. மாடக்கண்ணு,
      பாப்பான்குளம்.

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

0
‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். பகுதி - 7 ரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லக்...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி... பகுதி -10 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல்... 1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் "வேட்டைக்காரன் "படத்தில் கேவி மகாதேவன் இசையில் கவியரசு...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

 பாகம் - 4   -சுசீலா மாணிக்கம்   திருக்குறளின் நான்காம் அதிகாரம் 'அறன் வலியுறுத்தல்' "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை" பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப்...

இனியில்லை கடன்!

1
சென்ற வார தொடர்ச்சி... சிறுகதை: நாமக்கல் எம்.வேலு ஓவியம்: தமிழ் அதற்கப்புறம் ராமசாமியிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை.  எப்போது பணம் கொடுப்பாய் என்று எப்போவும் போல சோமசுந்தரமும் போன் போட்டு கேட்கவுமில்லை.  ஆபரேசன் நல்லபடியாய் நடந்ததா,...

குரு அருள் திரு அருள்!

பகுதி -2 -நளினி சம்பத்குமார் ஓவியம்; வேதா அனைத்தையும் அருளிடும் குருவின் பார்வை சமஸ்க்ருதத்தில் சுபாஷிதம் அதாவது நல்ல அர்த்தங்கள் பொருந்திய வாக்கியம் ஒன்று உண்டு. குருவின் பார்வை என்பது 1011 பார்வைக்குக் கூட ஈடாகாது, அதற்கும்...