0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

ஹாய் கண்மணீஸ்…
புது வருஷத்தன்னிக்கு உங்களுக்கெல்லாம், ‘இளமை, இதோ… இதோ…’ பாட்டைத்தான் (40 வருஷமா) நிறைய பேர் அனுப்பியிருப்பாங்க! கரெக்டா?
ஆனா, நான் கொஞ்சம் வித்யாசம்!

நான் அனுப்பியது, ‘வரவு எட்டணா… செலவு பத்தணா…’ பழைய பாடலை!
காரணம், செலிப்ரேஷனை விட, அதில் உள்ள ஷார்ப் மெசேஜ் அவசியங்கிறதனால!

 • ஜனவரி 3ம் தேதி நாளிதழில் இடம்பெற்ற இரண்டு செய்திகள் தந்த துயரப்பூச்சு மிக அடர்த்தியானது!
 • மனைவி, 2 மகன்களைக் கொன்று, சென்னை வங்கி அதிகாரி தற்கொலை!
 • மனைவி, 2 மகன்களைக் கொன்ற பூ வியாபாரி – கேரளாவில் பயங்கரம்!
  இரண்டு சம்பவங்களுக்கும் காரணம் கடன் தொல்லை.
  ஆடம்பர வாழ்க்கை + சூதாட்டம் + கடன் தொல்லை + நெருக்கடி + குடும்பச் சண்டை + விரக்தி = அழகிய அப்பாவிக் குழந்தைகளின் அநியாயச் சாவு!
 • இன்றைக்கு நம்மில் பலருக்கும் மற்றவர்களைப் பார்த்து வாழும் ஆசை மிக அதிகமாகக் காணப்படுகிறது. மத்தவங்க மதிக்கணும், பெருமைப்படணும்னு நினைச்சே வாழறோம் (உள்ளுர ஆசை… பொறாமைப்பட வைக்கணும்?!). நமக்குத் தேவையோ இல்லையோ, தவணையில் கார் வாங்குவது (அதுவும் பெரிய கார்)… காருக்கேற்ற வீடு வாங்குவது, மிகப் பிரபலமான பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது, பிறந்த நாள், மண நாள் போன்றவற்றை கடன் வாங்கியாவது விமரிசையாகக் கொண்டாடுவது, விலையுயர்ந்த நாய்களை பிள்ளைகளுக்குப் பரிசளிப்பது, கிரெடிட் கார்டில் பிளாஸ்மா டீ.வி வாங்குவது… இப்படி ஏகப்பட்ட பியர் சோஷியல் பிரஷரில் தொங்கி ஊசலாடிக் கொண்டிருக்கிறோம்!
 • முகநூலிலோ, வாட்ஸ்அப் ஸ்டேடஸிலோ எந்தத் தோழியோ, சம வயது உறவினரோ வெளிநாட்டில் குதூகலமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை, ‘ஷேர்’ செய்துவிட்டால்… பதிலுக்கு நாமும் என்னவாவது… எப்படியாவது…?
 • உங்களைத் தூண்டிவிட, வெறுப்பேற்ற அவர்கள் போடும் போஸ்ட்டுகளால் நீங்கள் ஏன் தடுமாறணும்? அவங்க வாழ்க்கையை அவங்க வாழட்டும்! நம்ப வாழ்க்கையை நாம்ப வாழ்வோம்!யானை சாப்பிடுதேன்னு பூனையும் சாப்பிட்டா, பூனைக்கு செரிக்குமா?
 • பெண்களாகிய நாம், நல்ல நிர்வாகிகள். இயல்பாகவே, அமைதி நாடுபவர்கள். நாம் மனசு வெச்சா, ஆடம்பரங்களை அறவே தவிர்க்கலாம். கடன் இல்லாத, அமைதியான, நிம்மதியான, எளிமையான, அர்த்தப்பூர்வமான வாழ்க்கை வாழலாம். கூந்தல் உள்ள சீமாட்டிகள் எப்படி வேண்டுமானாலும் கொண்டை போட்டுக்கலாம். அவர்களைப் பார்த்து நாமும் வாழ நினைத்தால், ஆடம்பர வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு, ‘சேமிப்பு’ என்பதே இல்லாமல், சிரமமாகி விடும்!

ங்களையும் மீறி பகட்டான, தேவையற்ற எண்ணங்கள் ஏதேனும் வந்தால் உடனே, ‘ரத்தன் டாடாவே நமஹ’ என்று உச்சரியுங்கள்.
84 வயதில், ஒரே ஒரு கப் கேக்கை மட்டுமே வெட்டி, தம்முடைய பிறந்த நாளைக் கொண்டாடிய மனிதரல்லவா!
டாடா குழுமத் தலைவரே, அப்படின்னா? நாம்ப…?
அநாவசிய, ஆடம்பர விழாக்களைக் கொண்டாட, இந்தக் கொடுந்தொற்று காலத்திலாவது மனசுக்குள் 144 போட்டுடலாமே!
அப்படியும் ஏதாவது ஆடம்பர மோகம் தலைதூக்கினால், அந்த கப் கேக்கை ஞாபகப்படுத்திக்கோங்க ப்ளீஸ்!
அது சாதா கேக் அல்ல! புத்திமதி கேக்!
பிரச்னைக்கு வழிவகுக்கும் பகட்டு வாழ்க்கைக்கு, ‘டாடா’ சொல்லும், ‘ரத்தின’ கேக்! மீண்டும் பேசுவோம்.

7 COMMENTS

 1. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும். நமது வாழ்க்கையை நாம் வாழ்வோம்…. அருமை.
  84 வயதில் ஒரு கப் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரத்தன் டாடா கிரேட்!

  ஆ. மாடக்கண்ணு
  பாப்பான்குளம் .

 2. முடி இருக்கிற சீமாட்டி இட கொண்டையும் போடலாம் , வலக் கொண்டையும் போடலாம். மற்றவர்களுக்காக வாழாமல் நமக்காக வாழ பழகணும் .அப்பொழுதுதான் நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும். நாம் நினைத்தால் ஆடம்பரங்களை தவிர்த்து எளிமையான நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். நம் வாழ்க்கை நம் கையில் தான் உள்ளது.

 3. புத்திமதி கேக் அனைவருமே உணர வேண்டும் ஆடம்பரம் அழிவைத் தரும் அருமையான ஒரு வார்த்தை

 4. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் தான்
  இருக்கிறது. வருமானத்திற்கு தகுந்த வாறு
  செலவுகள் செய்து. பேராசை தவிர்த்து,
  பொறாமை தவிர்த்து, சூதாட்டங்கள்
  இல்லாமல் வாழ்ந்தால் வாழ்வில் நிச்சயம்
  வெற்றி அடையலாம் என்பதை ‘ஒருவாரத்தை’ உணர்த்திவிட்டது.

 5. ‘ஒரு வார்த்தை ‘ பகுதியை திரும்ப திரும்ப படித்து மனப்பாடமே ஆகி விட்டது. ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு சூதாட்டம், கடன் தொல்லை, நெருக்கடி , குடும்ப சண்டை , விரக்தி, குழப்பம் ஆகியவற்றால் மனைவி, குழந்தைகளோடு குடும்பமே அழிந்து போவது கொடுமை. ஆடம்பரத்தை தவிர்த்து , மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்கிற போதையில் போலி வாழ்க்கை வாழ்வதை விட்டொழித்து சேமிப்புடன் கூடிய வாழ்க்கையை வாழ்வோம். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும். நமது வாழ்க்கையை நாம் வாழ்வோம் என்ற சிந்தனை அறிவு, அனுபவத்தால் கிடைத்த ஞானம். மேடம், புத்தாண்டில் புத்துணர்வு ஏற்படுத்துகிறது உங்களின் ‘ஒரு வார்த்தை ‘ . தெளிந்த, உயர்ந்த , காலத்துக்குரிய சிந்தனை. கிரேட்!

  ஆ. மாடக்கண்ணு,
  பாப்பான்குளம்.

 6. சிக்கனம் வா ழ்க்கைக்கு அவசியம். அந்த சிக்கனத்தை எப்படிக் கடை பிடிப்பது ? என்ற கேள்விக்கு விடையும், பணத் தின் அருமையை யும் விவரமாக எடுத்துச் சாெ ல்லிய ” ஒரு வார்த்தை “தலையங்கம் அருமை. மங்கையர் மலரின் அற்புதமான
  இத் தலையங்கத்தை நண்பர்களிடம்,உற் றார் உறவினர்களிடம் எடுத்துக் கூறி னால்
  கடன், வீண் ஆடம்பரத்தை த் தவிர்த்து பணத் தின் பயனை அ றிந்து நல்ல வாழ்வு வாழ்வார்கள் என்பதை உறுதிபடக் கூற லாம்.” ஒரு வார்த்தை “யில் இவ்உலகில்
  வாழ்வாங்கு வாழ வழி முறையை வகுத்துக் காெ டுத்த அ னுஷா நடராஜன் அவர்களுக்கு நல் வாழ்த்துகள்.
  து.சே ரன்
  ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

நான் படிச்ச காலத்துல, ஸ்கூல்ல, பசங்க எல்லாம் பேப்பர் ஏரோப்ளேன் செஞ்சு ‘சொய்ங்... சொய்ங்’னு பறக்கவிட்டு, விளையாடுவாங்க... அது கேர்ள்ஸ் பக்கமா வந்து விழுந்தா, எடுத்து டேபிள் மேல வெச்சுடுவோம். நாம்பளும் அதைத்...

ஒருவார்த்தை!

சில சமயங்கள்ல, தமிழ் சினிமாவை மிஞ்சும்படியான சம்பவங்கள் நடக்கிறப்போ, அதை உங்களோட பகிர்ந்துக்கத் தோணுது நட்புகளே! அது ஒரு ரொம்பவே நடுத்தரக் குடும்பம். கணவன் – மனைவி இரண்டு பேருமே கஷ்டப்பட்டு இன்னிக்கு ஒரு...

ஒரு வார்த்தை!

இந்த வார ‘ஒரு வார்த்தை’க்கு சிந்தனை வித்திட்ட ஆர்யா ராஜேந்திரன் மற்றும் ராஜராஜேஸ்வரிக்கு நன்றி.... ஒருவர் கோபத்தில்... அடுத்தவர் ஆபத்தில்...! திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யாவைப் பற்றி நமக்குத் தெரியும். 22 வயதான இவர்,...

ஒரு வார்த்தை!

பெங்களூருவின் பிஷப் காட்டன் பெண்கள் பள்ளி மிகவும் பிரபலமானது மட்டுமல்ல; பாரம்பரியமானதும் கூட! ஒழுக்கம் மற்றும் கல்விக்குப் பெயர் போனது. வசதியான, பிரமுகர்களின் செல்லப் பிள்ளைகளுக்குத்தான் பெரும்பாலும் அட்மிஷன் கிடைக்கும். அந்தப் பள்ளி, ஸாரி......

ஒரு வார்த்தை!

எட்டு ஆண்டுகளாக ஏங்கித் தவித்துப் பிறந்த குழந்தை அவள்! ப்ரீத்திக்கு மூன்று வயசாக இருக்கும்போது, அவளது அப்பா ஸ்ரீநிவாசன், அவளை நீச்சல் குளத்தில் தள்ளிவிட, தானே முயன்று நீந்தி மேலே வந்ததோடு, பயமில்லாமல்...