0,00 INR

No products in the cart.

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

‘என் வாழ்வின் ஒலி’

சிறு வயதிலேயே வானொலி கேட்கும் வழக்கத்தையும், ஆர்வத்தையும் எனக்குள் வளர்த்தது இலங்கை வானொலி நிலையம். இன்று ஒரு படத்தைப் பார்க்கிற பரபரப்பு, அன்று ஒரு பாடலைக் கேட்பதிலே இருந்தது. அதற்கு மிக முக்கியக் காரணம், கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல் ஹமீத், ஜெயகிருஷ்ணா அவர்கள். மறக்க முடியுமா அந்த நாட்களை? மனம் பின்னோக்கிச் செல்கிறது. இலங்கை வானொலி சினிமா பாடல்களை பூம்புனல், அன்றும் இன்றும், நீங்கள் கேட்டவை, நேயர் விருப்பம், புதுவெள்ளம், மலர்ந்தும் மலராத, இரவின் மடியில்… இப்படியான அழகான தமிழ்ப் பெயர்களை வைத்து ஒலிபரப்பியது, நெஞ்சுக்குள் பசுமையாக…!

அதிலும், மாலை 5.30மணிக்கு வரும், ‘பிறந்த நாள்… இன்று பிறந்த நாள்… நாம் பிள்ளைகள் போலவே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்’ டி.எம்.எஸ்.ஸின் குரலை மறக்க முடியுமா?

எங்கள் வீட்டில் மர்பி ரேடியோ இருந்தது. அது தரமான பிளைவுட்டால் செய்யப்பட்ட ரேடியோ என்பதால் வெளியாகும் ஒலி துல்லியமாக இருக்கும். பதின் பருவ வயதில் எஸ்.பி.பி. அவர்கள் மேல் காதல் வரக் காரணம் இலங்கை வானொலிதான்.

கணவன், மனைவியின் அன்னியோன்னியத்தைத் துல்லியமாகப் புரிய வைத்த‌ப் பாடல்கள். மனதைத் தொட்டு, ஏதோ மேஜிக் செய்த பாடல்கள். மனசுக்குள் கலர் கலராய் கனவுகளை வரவழைத்தப் பாடல்கள்.
இப்படியாக, எஸ்.பி.பி. அவர்கள் பாடிய பாடல்களை இலங்கை வானொலி ஒலிபரப்ப, அதைக் கேட்டே நான் வளர்ந்தேன். கல்லூரிப் பருவத்தில் வானொலியை, ‘ஆன்’ செய்து பாடல்களைக் கேட்டுக்கொண்டே அசைன்மென்ட எழுதிய காலம் கண்முன்னே நிழலாடுகிறது.

பிறகு திருமணம், குழந்தைகள் அவர்களின் வளர்ப்பு… இப்படி காலங்கள் ஓடினாலும் வானொலிக்கும் எனக்குமான உறவு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆம்… நிறைய சமையல் சார்ந்த நிகழ்ச்சிகளை வானொலியில் தொகுத்து வழங்கினேன். மேலும், ‘ரசிகர் தேன் கிண்ணம்’ பகுதியை நிறைய முறை தொகுத்து வழங்கியுள்ளேன். அந்த நிகழ்வுகள் எப்போது நினைத்தாலும் சந்தோஷத்தை மட்டுமே தரும்.

இதோ இ(எ)ப்போதும் எனது காலை நேரம் வானொலியை, ‘ஆன்’ செய்வதில் இருந்தே தான் தொடங்கும். மனம் ஏதேனும் ஒரு வருத்தத்தில் இருக்கும்பொழுது, எனக்கு மிகவும் பிடித்த பாடலான, ‘உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை’ என்ற பாடல் மற்றும் ‘நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா…’ இந்த இரண்டு பாடல்களில் ஏதேனும் ஒன்று வானொலியில் நிச்சயம் ஒலிபரப்பாகும். (அடிக்கடி இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. எப்படி என்றுதான் இன்றுவரை எனக்குப் புரியவில்லை.) விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிய, அதைத் துடைத்துக்கொண்டே இதழ்களில் புன்னகையை தவழ விட, மனம் தன்னாலேயே சமநிலைக்கு வந்துவிடும்.

என்னதான் டெக்னாலஜி வளர்ந்து, நினைத்த பாடலை ஒரு நொடிக்குள் கேட்கும் வசதி நம் கையிலே வந்துவிட்டாலும், வானொலியில் பாடல் கேட்பதென்பது ஒரு சுகானுபவம்.
– ஆதிரை வேணுகோபால்.

பளிச் பற்களுக்குப் பழங்கள்!
பழங்களா? எப்படி…?

ற்களில் மஞ்சள் கறை இல்லாமல் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இந்தக் கரை, உப்பு பேஸ்ட் தேய்த்தும் போவதில்லை. பல்லின் மீதுள்ள மஞ்சள் படிமத்தை நீக்க சில வகை பழங்கள் உதவுகின்றன. அவை :
வாட்டர் மெலன் :
இது பற்களின் பளபளப்பை அதிகரிக்க உதவும். மேங்கனீஸ், Zinc, பொட்டாஸியம், இரும்பு, மக்னீஸியம், கால்சியம் ஆகிய தாதுப் பொருட்கள் இப்பழத்தில் உள்ளன. இந்தப் பழத்தை கொஞ்சம் எடுத்து பற்களின் மீது லேசாகத் தேய்த்தால் மஞ்சள் போயே போச்!
ஆரஞ்சு :
உடல் நலத்திற்கு உதவும் இப்பழத்திலுள்ள விட்டமின் சி மற்றும் கால்சியம் ஈறு மற்றும் பற்களைப் பாதுகாக்க உதவுகிறது.
ஆப்பிள் :
இது பற்களுக்கு Scrubber மாதிரி செயல்படுகிறது. Malic ஆஸிட் இதில் இருப்பதால், உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து, கரையை நீக்கிவிடும்.
ஸ்ட்ராபெர்ரி :
இதில் ஊட்டச்சத்துகள் (Nutriants) உள்ளன. மேலும் Malic ஆஸிட் இருப்பதால், பற்களின் கறையைப் போக்குகிறது. சிறிது பழத்துடன், அரை சிட்டிகை சமையல் சோடாவைக் கலந்து பல்லின் மீது தேய்த்துவிட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் விட்டு நன்கு கொப்பளித்தால் மஞ்சள் லேயரை எடுத்துவிடும்.
வாழைப்பழம் :
நியூட்ரிஷியஸ் மிகுந்த இப்பழத்தில் மேக்னீஸியம், பொட்டாஸியம், மேங்கனீஸ் இருப்பதால் இதனுடைய தோலை பற்களின் மீது தேய்த்தால் கறை நீங்கும்.


எலுமிச்சம் பழம் :
பழத்தின் சாற்றுடன் / தோலுடன் சிறிது சமையல் சோடா சேர்த்து பற்களின் மீது தேய்த்தால் நோ மஞ்சள். இதுவும் மருத்துவ குணம் கொண்டது. பற்களுக்கு நல்லதை செய்யக்கூடியவை மேற்கூறிய பழங்கள்.
வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மேற்கூறிய பழங்களில் ஏதாவதொன்றினை உபயோகித்துப் பற்களைப் பளிச்சிட வைக்கலாம். ‘இதற்கெல்லாம் நேரம் எங்கிருக்கிறது?’ என எண்ணிச் செய்யாமல் விட்டுவிட்டால், கறை மேலும் மேலும் படிந்து பற்கள் பார்க்க ஒரே மஞ்சள் மஞ்சளாக இருக்கும். பல் டாக்டரிடம் அடிக்கடி போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இது தேவையா? யோசியுங்கள்.
– ஆர்.மீனலதா, மும்பை

சமையலறையில்…

 • சமையலறையில் பயன்படுத்தும் மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றைப் பயன்படுத்திய பின், சுவிட்ச் போர்டில் இருந்து கழற்றியே வையுங்கள். இதனால் சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

 • முதல் மாதம் மளிகைச்சாமான் வாங்கிய பட்டியலை பத்திரமாக வையுங்கள். அது, அடுத்த மாதம் மளிகை லிஸ்ட் தயாரிப்பதற்கும் விலையை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் எளிதாக இருக்கும்.
 • சமையலறையில் பயன்படுத்தும் வாணலியில் எண்ணைப் பிசுக்கு இருந்தால் வாணலி சூடாக இருக்கும்போதே சிறிது மோர் விட்டு தேங்காய் நாரால் தேய்த்து ஒரு கரண்டி நீர் விட்டுக் கழுவினால் பிசுக்கு அறவே நீங்கி விடும்.
 • மழை, குளிர் காலங்களில் தயிர் விரைவில் உறையாது. உறை ஊற்றும்போது பாலை சற்று சூடாக்கி ஊற்றி, ஒரு பாத்திரத்தைக் கவிழ்த்து மூடி விட்டால் விரைவில் உறைந்து விடும்.
 • சமையலறையில் கை துடைப்பதற்கு சிலர் பழைய ரவிக்கை துணியைப் பயன்படுத்துவர். இதனால் ரவிக்கையிலிருக்கும் கொக்கிகள் நம் கையைப் பதம் பார்க்க வாய்ப்புண்டு. மலிவு விலையில் கிடைக்கும் டவல்களைப் பயன்படுத்துவதுதான் நல்லது.
 • சமையல் செய்யும்போது சில நேரம் கைகளில் சுட்டுக்கொள்வோம். உப்புத்தூள் கொஞ்சம் எடுத்து நீரில் சேர்த்து, சுட்ட இடத்தில் தடவி விடுங்கள். எரிச்சல் தணிந்து விடும்.
 • சமையல் எரிவாயு கசிகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள சோப்புத் தண்ணீரைப் பயன்படுத்திப் பார்க்கலாம். சோப்பு கலந்த தண்ணீரை ரப்பர் குழாயில் வைத்தால் கசிவு ஏற்படும் இடத்தில் சிறு குமிழ் தோன்றும்.
 • மசாலா பொருட்களை அடுப்பு பக்கத்தில் வைக்காமல், இருட்டான குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். ஏனென்றால், உஷ்ணம், வெளிச்சம் மசாலாக்களின் வாசனையைக் கெடுத்து விடும்.
 • மாதாமாதம் மளிகைப்பொருட்கள் வாங்கும்போது ஒரு நாளுக்குத் தேவையானதை மட்டும் தனித்தனியாக எடுத்து சிறு கவரில் போட்டு வைக்கவும். அந்தக் கவர்களையெல்லாம் ஒரு பெரிய டப்பாவில் போட்டு வைக்கவும். மாதக் கடைசியில் மளிகைப் பொருள்கள் தீர்ந்து விட்டதே என்று கையைப் பிசையாமல் சமாளிக்கலாம்.
 • நாம் தினசரி பயன்படுத்தும் சர்க்கரை பாட்டிலில் எறும்பு வந்துவிட்டால் வெங்காயம், உருளைக்கிழங்கு வைத்திருக்கும் தட்டில், பாட்டிலைத் திறந்து வைத்து விடுங்கள். சில மணி நேரங்களில் எறும்பெல்லாம் மாயமாய் மறைந்து போயிருக்கும்.
 • சமையலறையில் இருக்கும் உணவுப் பொருள்களை அடிக்கடி இடம் மாற்றுவதைத் தவிர்க்கவும். காலை வேளையில் அவசர அவசரமாக. சமைக்கும்போது சமையல் பொருட்களை எங்கு வைத்தோம் என்று சட்டென நினைவுக்கு வராது. டென்ஷன் ஆகி விடுவோம்.
  – ஆர்.கீதா, ஆலுவா, கேரளா

குட்டி அரிசியில் இருக்கு அத்தனை விஷயம்!

நம் முன்னோர்கள் அரிசி உணவை சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்றைய தலைமுறையினர் அரிசி உணவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கிறது. உடல் நலத்திற்குத் தீங்கானது. அதைச் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்றெல்லாம் நினைத்து அரிசியை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர்.

 • புழுங்கல் அரிசி எளிதாக மற்றும் விரைவாக ஜீரணம் ஆகக்கூடிய தன்மை கொண்ட ஒரு உணவாகும். அரிசி சாதம் முழுமையாக செரிமானம் ஆக ஒரு மணி நேரம் ஆகும்.
 • உடல் மெலிந்து பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். ஆனால், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் பிரச்னை உள்ளவர்கள் கட்டாயம் பச்சரிசியைத் தவிர்க்க வேண்டும்.
 • சிகப்பரிசியில் அதிகமான பைபர் உள்ளது. அதனைச் சாப்பிடுவதால் ரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. மேலும், சிகப்பசிரியில் எண்ணெய் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
 • மற்ற அனைத்து அரிசி வகைகளையும் விட, பாஸ்மதி அரிசியில் நிறைய பைபர் அடங்கியுள்ளது.
 • மூங்கில் அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர்செய்ய உதவும்.
 • மாப்பிள்ளை சம்பா அரியில் புரதம், நார்ச்சத்து மற்றும் நிறைய தாதுக்கள் நிரம்பியிருக்கின்றன. இதைச் சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும்.
 • சீரகச்சம்பா அரிசி இனிப்பு சுவையடையது. அதனால் அதிகமாகச் சாப்பிடத் தூண்டும். இது சிறுவாதம் நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

 • திணை அரிசி ரத்த சோகையைப் போக்கக்கூடியது. அத்துடன் காய்ச்சல், சளித்தொல்லை இருந்தால் அதன் வேகத்தைக் குறைக்கும் ஆற்றல் திணைக்கு உண்டு. அதிகமாகச் சாப்பிட்டால் அது பித்தமாகவும் மாறிவிடும்.

யாரெல்லாம் அரிசி சாப்பிடக் கூடாது?

ர்க்கரை நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அரிசி உணவுகளைக் குறைத்து உண்ணலாம். அரிசி உணவில் இருக்கும் சத்துக்கள் தேவைக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவை அப்படியே ரத்தத்தில் சேர்ந்துவிடும். இதனால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே, இவர்கள் சாமை, திணை போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

ம் உடலின் வளர்ச்சிதை மாற்றம் பகல் நேரங்களில் அதிகமாக இருக்கும். இதனால் அரிசிகளில் இருக்கும் கார்போஹைட்ரேட் நம் உடலின் சக்தியாக சேரும். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இரவு நேரங்களில் வளர்சிதை மாற்றம் குறைவாக இருப்பதால் அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாகச் சேரும். அதனால், இரவில் அரிசி உணவைத் தவிர்ப்பது நல்லதாகும்.
– ஏ.எஸ்.கோவிந்தராஜன்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...