0,00 INR

No products in the cart.

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance

-உஷா ராம்கி

ந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து செல்ல (வெல்ல) வேண்டுமென்றால், மிக கவனமாக  சமநிலையில் செல்ல வேண்டும்.

15 வருடங்கள் சர்வதேச வங்கியும் வேலை செய்தும், 2003 முதல் வாழ்வியல் பயிற்சியாளராகப் பணி புரிந்தும், இரண்டு பிள்ளைகளை ஒருவாராக வளர்த்துவிட்டோம் என்ற அனுபவத்தோடும் work-life balance பற்றி நான் பகிர்ந்து கொள்ளும் பதிவு இது:

 

 • வேலை பார்க்கும் குடும்பப் பெண் ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு விதமான சவால்களை சந்திக்கிறாள். ஒவ்வொரு கட்டத்தை கடக்கும் போதும், இந்தப் போராட்டம் தேவையா என்றுகூட அவளுக்குத் தோன்றிவிடும். DON’T GIVE UP. தவிர்க்க முடியாத நிர்பந்தம் ஏற்பட்டாலே ஒழிய, கயிற்றின் மீது நடந்தே தீருவது என்ற முடிவில் இருந்து, வரும் பிரச்னையை இன்னும் முயன்று தீர்க்கலாம். “எவ்வளவோ பார்த்துட்டோம், இதெல்லாம் ஒரு மேட்டரா?” என்ற தோரணையில் செயல்படுவது தளர்வடையாமல் முன்னேற உதவும்.
 • வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், பகுதி நேரமாக செயல்படுபவர்கள், வீட்டுப் பொறுப்புகளிடையே, தங்கள் அலுவலக வேலையை செய்வதில் அதிக சிரமப்படுவார்கள். முக்கியமான வெப்-மீட்டிங் என்கிற போதுதான் மகன் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் கேட்பான், மகள் கணக்கில் சந்தேகம் கேட்பாள்; மாமனார் அடுத்த மூன்று நிமிடங்களில் டீ பருகவில்லை என்றால் ஜென்மம் சாபல்யம் அடையாது என்பார். ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வீட்டுப் பொறுப்புகளுக்கு உங்களை எதிர்பார்க்க முடியாது என்பதைப் அவர்களுக்குப் புரிய வைத்து, உங்கள் வேலைக்கு நேரத்தை ஒதுக்கலாம்.  வீட்டில் ஒரு தனி இடத்தையும் உங்கள் பணிக்காக ஒதுக்கலாம். தவிர்க்க முடியாத திடீர் அலுவலக வேலை வரும்போது குடும்பம் ஒத்துழைக்க வேண்டும் என்னும் ‘வாக்குறுதியை முன்கூட்டியே பெறுவது உத்தமம்; (ஒத்துழைக்க மறுக்கும் குடும்பப் போராட்டக்காரர்களுக்கு, அன்றிரவு கட்டாய உண்ணாவிரதம் என்று பயமுறுத்த வேண்டி வந்தாலும் சரி!)

 • வேலைக்குப் போகும் பெண்களால் அனைத்து வீட்டுப் பணிகளையும் செய்து முடிக்க முடியாது என்பதை உங்கள் மனதுக்கு ஆறுதலாகப் புரிய வையுங்கள். “குற்ற உணர்ச்சிக்குள் போகாதே. செய்ய முடிந்தத்தை நினைத்து சந்தோஷப்படு” என்று மனதை ஊக்கப்படுத்துங்கள். எதை கட்டாயம் செய்யவேண்டும், எதை விடுமுறை நாளுக்குத் தள்ளிப் போடுவது, எதை முழுவதுமாகத் தவிர்ப்பது என்று பாகுபடுத்தி முடிவெடுங்கள்.
 • டல் ஆரோக்கியத்துக்காக எதவாது உடற்பயிற்சி உண்டா” என்று உங்களைக் கேட்டால், “ஐயையோ… அதற்கெல்ளாம் ஏது நேரம்” என்று மறுப்பு சொல்வது போல் பேசினால் எப்படி? உங்கள் உடல் ஆரோக்கியம், அதாவது, உணவு, உடற்பயிற்சி, உறக்கம் இவை மூன்றும் நம் வேலை-வாழ்க்கை சமனுக்கு ஆதாரமாயிற்றே. இருக்கிற 24 மணி நேரத்தில் அரை மணியைத் திருடி நல்ல உடற்பயிற்சிக்காக செலவிடுங்கள். இந்தத் திருட்டு தவறு இல்லை, நன்மைதான்.
 • ல்லாவற்றையும் நாமே பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும் என்ற ‘பெர்ஃபெக்ஷன்’ வியாதியை வெல்ல உகந்த மருந்து, “பல விஷயங்களில் கொஞ்சம் சுமாரும் ஏற்றுக் கொள்ளப்படும்” என்று மானசீக போர்ட் மாட்டிகொள்வதுதான். அது நம் கண்களில் படும் வண்ணம் இருக்க வேண்டும். மனதில் படுவது அதைவிட முக்கியம். எல்லாம் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே இம்பெர்ஃபெக்ஷனைத்தானே காட்டுகிறது!
 • சில வீட்டு வேலைகளுக்கு ஆள் போடுவது, வீட்டு அங்கத்தினர்களுக்கு பொறுப்புகள் தருவது, தவிர்க்கக்கூடிய விஷயங்களுக்கு ‘நோ’ சொல்வது, முதல் நாளே அடுத்த நாளுக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொள்வது போன்றவை நேரத்தை சேமிக்க உதவும் ரகசியங்கள். விடுமுறை நாட்களில், வீட்டை சுத்தம் செய்வது, துணி தோய்ப்பது, பள்ளிக் காலணிகளுக்குப் பாலிஷ் போடுவது என்று உங்கள் வீட்டு வழக்கத்துக்கேற்ப ஆளுக்கொரு பொறுப்பை எடுத்துச் செய்து, ‘முன்ன பின்ன’ இருந்தாலும் பாராட்டிக் கொள்ளலாம். பணிகள் முடிந்தபின், ஐஸ்க்ரீமோடு கொண்டாடி மகிழலாம்.
 • வேலைக்குப் போகும் இடத்தில் பெண்ணென்று சலுகைகளை எதிர்பார்க்காமல், அர்ப்பணிப்புடன் தரமான வேலை செய்வது அங்கே நல்ல பெயரையும், உயர்வையும் அளிக்கும். அந்த வெற்றி நமக்குப் பெரிய ஊக்கமாக இருக்கும். வாங்குகிற சம்பளத்துக்கு இவ்வளவு போதும் என்ற ரீதியில் இல்லாமல், என்னால் என்ன value சேர்க்க முடியும் என்று யோசித்தால், நிறுவனங்கள் பெண் பணியாளர்களைப் பாகுபடுத்தும் காலம் மலையேறும். நாம் விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பான்மை நேரம் அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களோடுதான் செல்கிறது. அவர்களோடு சுமூகமாக, சிரித்து, பாராட்டி பாஸிடிவ்வாக இருந்தால் வேலை பளு தெரியாது.
 • தூங்கி எழுந்தழுவுடன் முதல் அரை மணி நேரத்துக்கும், தூங்கப் போவதற்கு அரை மணி நேரம் முன்பும், மொபைல் என்ற துரோகியை தள்ளி வைத்தல் மன நலத்துக்கு வழி வகுக்கும். இரவில் அது வெளியிடும் கதிர்கள் நம் தூக்கத்தையும், மறுநாள் நாம் செயல்படும் விதத்தையும் பாதிக்கும். எழுந்தவுடன் மனதை இதமாக்கும் நல்ல விஷயங்களோடு தொடங்குவது அந்த நாளுக்குத் தேவையான உற்சாகத்தைத் தரும்.
 • பிள்ளைகள் நன்றாக வளர்வதற்கு உற்றார் உறவினரின் உதவி தேவை. நான், எனது என்று தீவினுள் நுழையாமல், நண்பர்கள், உறவினர்கள் அனைவருடன் சுமூகமாக வாழ்வது ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருக்க உதவும். என்னதான் கம்ப்யூட்டர் யுகமாக இருந்தாலும் மனிதர்களுக்கு மனிதர்கள் தேவை. யாரையும் ஜட்ஜ் செய்யாமல், அரவணைத்துப் போவது சுகம், சௌகர்யம்.
 • ணவர் உங்கள் அணியின் முக்கியமான அங்கத்தினர். பரஸ்பர அன்பு, மரியாதை, விட்டுக்கொடுத்தல் எல்லாம் இருந்தால், வேலையில் முழு கவனம் செலுத்துவது சாத்தியம். சின்ன; சின்ன மனவேற்றுமைகளை ஒதுக்கினால், “குடும்ப வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா” என்பது விளங்கி விடும். மகிழ்ச்சியையும், அமைதியையும் தொலைத்து விடாதீர்கள்; இடையில் தொலைத்தாலும், மறுபடி நம் வசம் ஆக்கிக் கொள்வது நலம் தரும்.

பெண்களின் வாழ்க்கையும் சமுதாயத்தில் நமக்குக் கிடைக்கும் மதிப்பும் நம்மை மேம்படுத்தும். அதில் சவால்கள் இருக்கத்தான் செய்யும். நம்மைச் சுற்றி தினம் தினம் பல பெண்கள் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு ஊக்கம். அதே நேரத்தில் நம் ஓட்டப்பந்தயம் மற்றவர்களோடு இல்லை. யாரோடும் ஒப்பிடாமல் தனிப்பட்ட முறையில் நம்மால் ஜெயிக்க முடியும். அந்த வகையில் நாம் நம் குழந்தைகளுக்கு ரோல்மாடலாக இருப்போம். இருப்போமா?

 அன்பு வாசகீஸ்,

Work-life Balance குறித்த உங்கள் அனுபவத்தை கீழே உள்ள காமென்ட்ஸ் Boxல் நச்சுனு பகிர்ந்து கொள்ளுங்க. உங்களுக்குத் தெரிந்த டிப்ஸும் தந்து அசத்தலாம். (20 words only)

1 COMMENT

 1. வேலைக்கு செல்வதால் பணம் வருது, குடும்பத்தை நல்லமுறையில் காப்பாற்ற முடியுது என்ற மைண்ட்
  செட்தான் என்னை நாற்பது ஆண்டுகள் பணி புரியவும் லைப் பேலன்ஸ் பண்ணவும் உதவியது!

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

0
பீட்ரூட் ரோஸ் மில்க் செய்முறை: பீட்ரூட் நன்கு மண் போக அலம்பிவிட்டு காம்புகளை நறுக்கி எடுத்துவிட்டு துண்டு, துண்டாக நறுக்கி தோலுடன் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். பின்பு வடிகட்டி விடவும். தண்ணீர் கொஞ்சமாகவிட்டு...