0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

ந்த விளையாட்டுக்கு உங்க ஊருல என்ன பேர்னு தெரியல… நாங்க வெச்ச பேரு ‘தோசை!

சீட்டுக் கட்டில் உள்ள அத்தனை சீட்டுக்களையும் குப்புற பரப்பி வெச்சுடணும். ஆளுக்கு இரண்டு சீட்டுக்களைக் குருட்டாம் போக்கில் எடுக்கணும். அது ரெண்டுமே ஒரே எண்ணாக மேட்சிங்காக இருந்து ஒத்துப் போனால், அந்தச் சீட்டு்களை நாம் ஜெயித்ததாக எடுத்து வைச்சுக்கலாம்… இல்லைன்னா, அந்தந்த இடத்துல மறுபடி வெச்சுடணும்.

அடுத்த சிறுமி ஆடும்போது, மறைந்து கிடக்கும் கார்டின் எண்ணை ஞாபகத்துல வெச்சுக்கிட்டு ‘டக் டக்‘னு ஜோடி சேர்க்கணும். கவனத்தையும் நினைவாற்றலையும் சோதிக்கும் குழந்தைகள் விளையாட்டு! சீட்டுக்களைக் கவிழ்த்து, திருப்பித் திருப்பிப் போடுவதால் அந்த விளையாட்டுக்கு ‘தோசை’ன்னு பெயர்!

எங்க வீட்டு வராந்தாவில் ‘ப்ளேயிங் கார்ட்ஸ்’களைப் பரப்பிக் கொண்டு ‘தோசை’ விளையாடினாலே, பெரியவங்க திட்டுவாங்க… ‘ரம்மி’ ஆடினால் பெண்டுதான்! (அதுவும் காசு வெக்காமல்…!)

‘சீட்டுக் கட்டைத் தொடுவதே பாவம்! அது ஒரு மோசமான சூதாட்டம்‘ என்ற எண்ணத்தைச் சிறு வயதிலேயே பதியனிட்ட பெற்றோருக்கு நன்றி!

ஆனால், இப்போது நாளிதழ், டீ.வி, செல்ஃபோன் எல்லாவற்றிலும் ஏகப்பட்ட சீட்டு விளையாட்டுத் தூண்டில்கள். ‘இந்தியா ரம்மி சீரிஸ் – 2.5 கோடி வரை வெல்லுங்கள். உடனே ஸைன் – அப் செய்யுங்கள். புதிய உறுப்பினருக்கு பத்தாயிரம் ரூபாய் போனஸ்’ என்றெல்லாம் மினுக்கி மினுக்கி ஆசையைத் தூண்டுகிறார்கள்.

இது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களால், கவரப்பட்டு ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்து ஆண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டது.

——————–

மீபத்தில் ஒரு குடும்பத் தலைவியும் இந்த விளையாட்டுக்கு பலியாகி யிருக்கிறார்.

சென்னை, மணலிப் புதுநகரைச் சேர்ந்த பாக்யராஜின் மனைவி பவானிக்கு வயது ஜஸ்ட் 29. நான்கு, மூன்று வயதுகளில் பிஞ்சுக் குழந்தைகள். பாக்யராஜுக்கு ஏதோ தனியார் நிறுவனத்தில் வேலை… நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், பேயாகப் புகுந்தது சூது ஆசை. பவானிக்கு ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. எப்போதும் அதைப் பற்றியே பேசுவது. இரவுப் பகலாக ஆன்லைன் ரம்மி விளையாடுவது என அடிமையே ஆகிவிட்டார். கணவரும் பெற்றோரும் கண்டித்துப் பார்த்தும், பவானியால் அதிலிருந்து மீள முடியவில்லை.

“போட்டதை எடுத்துடணும்!” என்ற வெறி தலைக்கேறியது. தமது தங்கையரிடம் 3 லட்சம் ரூபாய் வாங்கி, சில மாதங்களிலேயே மொத்தமாக இழந்துள்ளார். அப்புறம், வீட்டில் இருந்த இருபது பவுன் நகையை விற்று, அதையும் சீட்டு ஆடித் தோற்றிருக்கிறார். மேலும் ஆட பணம் இல்லாத நிலையில், மிகுந்த மனஉளைச்சலில் தூக்குப் போட்டு இறந்தே போனார்!

இரண்டு குழந்தைகளுக்குத் தாய் செய்யும் காரியமா இது! அதுவும் படித்த, பட்டதாரிப் பெண்!  எவ்ளோ பார்க்கிறோம், கேட்கிறோம். ஒரு விழிப்புணர்வு வேண்டாம்! யாரோ ஓர் அரக்கன் காசு பார்ப்பதற்காக, பிஞ்சுக் குழந்தைகள் தாயை இழந்து தவிக்கின்ற பரிதாப நிலை!

ஒரு விஷயம் கண்மணீஸ்… ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஜெயிப்பது என்பது மிக மிகக் கடினம். அது ‘R.N.G.’ எனப்படும் Random Number Generation அல்காரிதம் அடிப்படையில் மிகவும் நுணுக்கமாக உருவாக்கப்பட்டிருக்கும் சூது! அல்காரிதத்தை வென்று லட்சாதிபதி ஆக எல்லாம் வாய்ப்பே இல்லை… ஆடுபவர்களை வளைத்துப் போட்டு, அடிமை ஆக்குவதற்காக எப்போதாவது சொற்ப வெற்றி தரும். அவ்வளவே!

இந்த விளையாட்டு விளம்பரத்தின் கீழே, கடுகு சைஸில் ‘இது உங்களை அடிமையாக்கும்; நிதி சார்ந்த அபாயம் கொண்டுள்ளது. பொறுப்புடன் விளையாடுங்கள்!” என்று தரப்பட்டிருக்கும். அது சும்மா நம்மை ஏமாற்ற!

காபாரதம், இராமாயணம் எல்லாம் வெறும் பொழுது போகச் சொல்லப் படும் கதைகள் அல்ல. அதில் எல்லா வாழ்வியல் கருத்துகளும், நீதி போதனைகளும் பொதிந்துள்ளன.

ஆனானப்பட்ட தருமராஜனையே சூதாட்டம் படாதபாடு படுத்திய கதை நமக்கெல்லாம் தெரியுமே!

பவானி போன்ற பெண்கள் எம்மாத்திரம்?

உஷார்… பெண்களே… சூது கவ்வும்!

குடும்பமே கவிழும்.

அரசுக்கும் ஒரு வேண்டுகோள்!

மதுவால் குடும்பங்கள் சீரழிந்தது போதாதா?

சீட்டுக்கட்டும் சேர்ந்து கொள்ளணுமா?

அவசர சட்டம் கொண்டு வந்து, முதலில் தடை செய்யுங்க… இந்த உயிர்ப்பலி கொள்ளும் சூதாட்டத்தை!

3 COMMENTS

 1. போர்கால வேகத்தில், கொரானா வேகத்தில் இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லாட்டரி சீட்டை ஒழித்து கட்டியதை போன்று இதையும் ஒழித்து கட்ட வேண்டும். ..பெண்களே ..இப்படி என்றால் ஆண்கள் கேட்கவே வேண்டாம்.

 2. குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய
  தாய் சீட்டு கட்டை தொட்டதே பாவம். அதுவும்
  அல்லாமல் குழந்தைகளை அம்போ என்று
  விட்டு விட்டு தற்கொலை செய்ததை என்ன
  வென்று சொல்வது.

 3. ஒரு வார்த்தையில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் சமூக அக்கறை கொண்டது. அரசு ஆவன செய்வது மிக அவஸியம்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

இந்த வாரம் எப்படிப் போச்சு அனுஷா? -பி. வந்தனா, விருத்தாச்சலம் நிறைய்ய பெருமையும் பெருமிதமா! கொஞ்சம் பயமா...! காமன்வெல்த் போட்டியிலும், செஸ் ஒலிம்பியாட்டிலும், தங்கம், வெள்ளி, வெங்கலம்னு அள்ளி வந்த செல்லங்களுக்குப் பாராட்டு! 135 கோடிக்கும்...

அன்புவட்டம்!

‘செஸ்’ விளையாடத் தெரியுமா மேடம்? - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி செஸ்ஸா? யாராவது அறிவு ஜீவிங்க விளையாடட்டும்! நாம்ப ஜஸ்ட் ரசிக்கலாம்! பொறுமையைச் சோதிக்கும் இந்த விளையாட்டில் எந்த ஆர்வமுமில்லை! ஆனா... ஓரளவு புரியும்! அப்புறம்,...

அன்புவட்டம்!

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றி... - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி பெரிய பெருமைதான் கெஜலட்சுமி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நம்ப சென்னை செஸ் ஒலிம்பியாட். செஸ் ஒலிம்பியாட்டை நடத்தணுங்கிற...

அன்புவட்டம்!

தாலியைக் கழற்றி வைத்து மனைவி செய்த துன்புறுத்தலால் கணவருக்கு விவாகரத்து வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதே! - வாணி வெங்கடேஷ், சென்னை இப்போதெல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆனதுமே, பல நாகரிகப் பெண்கள் போடும் முதல் கண்டிஷனே...

அன்புவட்டம்!

 இளையராஜாவின் எம்.பி. பதவி சர்ச்சைக்குள்ளானதே! - கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி நான் பத்தாவது படிக்கும்போது, வயல் வரப்புகளில் உட்கார்ந்து தேர்வுகளுக்குத் தயாராவது வழக்கம். கால்களின் அடியே ஜில்லென்ற ஏற்றம் பாய்த்த நீர் பாய்ந்துகொண்டிருக்கும். அப்போது நெல்,...