0,00 INR

No products in the cart.

அன்பான அழைப்பிற்கு அளிக்கும் மரியாதை!

– ஆர். மீனலதா, மும்பை

படங்கள்: பிரபுராம்

அன்பான அழைப்பு! மரியாதை! என்ன விஷயம்?

பிள்ளையார், லக்ஷ்மி, சரஸ்வதி யெனக் கடவுள்களின் படங்கள் 10, சுவரில் மாட்டும் வண்ண ஓவியங்கள் 6, டின்னர் செட் 5, டிஸைனர் கண்ணாடி தம்ளர்கள் 4 டஜன், கிட்டத்தட்ட ஒரே விதமான மெலமைன் செட்கள் 3 டஜன், அலங்காரப் பொருட்கள், கேஸரோல்கள், கடிகாரங்கள் இத்யாதி! இத்யாதி!

எங்கே? மிகவும் நெருங்கிய தோழியின் புதுமனைப் புகுவிழா சமயம் வந்த பரிசுப் பொருட்கள்தான் மேலே கூறியவைகள்..

‘பரிசுகளைத் தவிக்கவும்; வாழ்த்துகளும் ஆசிகளும் போதும்’ என்று அன்புடன் கூறி அழைத்திருந்தாலும், வருகிறவர்கள் வலுக்கட்டாயமாக பரிசு கொண்டு வந்து கொடுத்து விடுகிறார்கள்.

2 பெட் ரூம்கள், ஹால், கிச்சன் என்று இருக்கும் வீட்டில் தோழியின் குடும்பத்தினர் 5 பேர்கள். ஏற்கெனவே, புது வீட்டிற்காக அவர்கள் விருப்பப்படி பொருட்களை வாங்கி வைத்துள்ளனர். இப்போது வந்தவைகளை எங்கே வைப்பதென திண்டாட்டமாக உள்ளது.

ஆண்டு நிறைவா? காது குத்தலா? திருமணமா? உற்றமும், சுற்றமும் வந்து வாழ்த்தினால் போதுமென்றாலும், வருபவர்களுக்கு மனசு கேட்பதில்லை.

வராத்திரி சமயம், சிறு – சிறு பரிசுப் பொருட்கள்? ரவிக்கைத் துண்டுகள் கைமாறிச் செல்வதைப் போல, விழாவிற்கு வருகின்ற பரிசுகளும், வண்ணக் காகிதத்தில் சுற்றப்பட்டு மாறி மாறி பிறரிடம் சென்று விடுகின்றன. அப்போதுகூட சுவர் ஓவியமா? டின்னர் செட்டா? எதைக் கொடுக்கலாமென மனதிற்குள் ஆயிரத்தெட்டு எண்ணங்கள் ஓடும். மனசே வராது.

சிலவற்றைக் கொடுத்தாலும், மீதி இருப்பவை கொடுக்கவும் மனசில்லாமல், உபயோகப்படுத்தவும் முடியாமல் பரண் மற்றும் அலமாரிகளுக்குள் புகுந்துவிடும். தேதவப்படுகையில் இருப்பதை மறந்து மறந்துவிடுவோம். அல்லது தேடி, கிடைக்காமல், திண்டாடி, கடைசியில் கடைக்குச் சென்று புதிதாக வாங்க வைக்கும்.

இதில் ஒரு தமாஷ் என்னவென்றால் உபயோகமற்ற பொருளை ஜிகினா காகிதத்தினுள் அழகாக பேக் செய்து தன் பெயர் எழுதாமல், விழாவிற்குச் சென்று பரிசளித்து, விருந்தை சாப்பிட்டும் சிலர் வருவதுண்டு. பிரித்துப் பார்க்கையில், ஓட்டைக் கடிகாரம், லேசாக கீறல் விழுந்த டிசைனர் தட்டு போன்றவைகள் இருப்பதைக் கண்டு, கொடுத்தவர்களைத் திட்டுவார்கள். தேவையா இது?

மிகவும் தெரிந்த ஒருவரிடம் பேசுகையில் அவர், “என் பெண் கல்யாணம் வரவிருக்கிறது. நுழைவு வாயிலில் உண்டியல்கள் வைத்து, ‘இதனுள் ஒரு ரூபாய் மட்டும் பரிசாக போட்டால் போதும். சித்தி விநாயகர் கோயிலுக்கு காணிக்கையாகச் செலுத்தப்படும். புண்ணியம் அனைவருக்கும் கிடைக்கும். மணமக்களுக்கு ஆசிகள் ஒன்றே போதும்’ என உண்டியல் அருகே எழுதி வைக்கப் போகிறேன்” என்று கூறியதும்,

நல்ல விஷயமாக இருக்கிறதே என்று பாராட்டினேன்.

கல்யாண தினத்தன்று அங்கு சென்ற சமயம், அவர் கூறிய மாதிரியே ஏற்பாடு செய்திருந்தார். ஆனால்… அவரவர்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை என்ன செய்வதெனத் தெரியாமல், உண்டியலருகே வைத்து, ஒரு ரூபாய் நாணயத்தையும் உண்டியலில் போட்டுக் கொண்டிருந்தனர்.

“தலைவலி போய் திருகுவலி வந்த கதைதான்.”

மிகவும் தெரிந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அழைக்கையில் உரிமையுடன் அவர்கள் தேவைகளை கேட்டுத் தெரிந்து பொருட்களாகவோ, பணமாகவோ பரிசாக கொடுத்து விடுவது சிறந்ததாகும்.

அவர்களுக்கும் உதவியாக இருக்கும். எதுவும் தேவைப்படவில்லையெனில், வற்புறுத்திக் கொடுப்பதை தவிர்க்கலாம்.

கிஃப்ட் கூப்பன் கூட தவிர்க்கப்பட வேண்டிதொன்றாகும். ₹ 1,000/-, ₹ 2,000/-,
₹ 5,000/-க்கு கிஃப்ட் கூப்பனை பரிசளிக்க, சிலர் அதை எங்கோயோ வைத்துவிட்டு மறந்து போவார்கள். குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பு, கண்ணில்பட, உபயோகமில்லாமல் போகும்.

மேலும், கிஃப்ட் கூப்பன் உபயோகித்து தேவைப்படும் பொருட்கள் வாங்குகையில் மேலே அதிகமாக பணம் போட வேண்டி வரும்.

சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம் கதைதான்.

“பரிசுகள் வேண்டாம்” என்று கூற முடியாத நிகழ்வு ஒன்றும் உள்ளது. அது  என்ன?

குழந்தைகள் பிறந்த நாள் அன்று பார்ட்டி வைக்கிறார்கள். வருகின்ற குழந்தைகளுடன் சில பெற்றோர்களும் வருவதுண்டு. அவர்கள் கிஃப்ட் கொடுக்க, இவர்கள் ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்க, லங்ச் பாக்ஸ், ஸ்கூல் பேக், பொம்மைகள், விளையாட்டு சாமான்கள், பென்சில் பாக்ஸ் எனக் குவியும்.

வந்தவர்களுக்கு ஸ்நாக்ஸ், கூல்டிரிங்க்ஸ், டீ, காஃபி என அமர்க்களப்படும்.

அனைவரும் சென்றபின், வந்த பொருட்களை எடுத்து வைப்பதும், வீட்டை க்ளீன் செய்வதும் பெரிய காரியம்.

தவிர, பள்ளிக்கூடத்திலுள்ள ஆசிரியைகள், கூடப் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கும் ஸ்வீட் + கிஃப்ட் கொடுக்க வேண்டும்.

“சுத்தி – சுத்தி வந்தீக!” கதைதான்.

பார்ட்டி வைக்க வேண்டாமென நினைத்தாலும் பிறர் வீடுகளில் பார்ட்டிக்கு அழைக்கையில், குழந்தை மனது சங்கடப்படுமென்கிற எண்ணத்தில் நிறுத்த இயலாமல் தொடர வேண்டியதாக உள்ளது.

ஒரு விதத்தில் இது மனதிற்க மகிழ்வாகவும் நிறைவாகவும் உள்ளதெனினும், இந்த வருட பிறந்தநாள் பார்ட்டியின்போது என்ன கிஃப்ட்? என்ன மெனு? என பெற்றோர்கள் யோசனை செய்வது இருக்கிறதே – அப்பப்பா!

கொஞ்சம் டென்ஷன்தான்.

மற்றைய விசேஷங்கள் மாதிரி “நோ கிஃப்ட்” என்று இது போன்றத் தருணங்களில் கூறுவது சங்கடமான காரியம். ஏனெனனில், குழந்தையின் எதிர்பார்ப்பு இதில் அடங்கியுள்ளது. வருடா வருடம் தொடரும் கதை இது. பார்ட்டிக்கு இரு மாதங்களுக்கு முன்பே ப்ளான் ஆரம்பமாகிவிடும்.

மக்களே!

“நோ கிஃப்ட் ப்ளீஸ்!” என அழைப்பு கிடைத்தால், உள்ளத்தில் எந்தவித சஞ்சலமும் இல்லாமல், மகிழ்வுடன் சென்று மனதார வாழ்த்தி, வயிறார சாப்பிட்டு வருவதே அன்பான அழைப்பிற்கு அளிக்கும் மரியாதை.
சரிதானே?

2 COMMENTS

  1. மிகவும் சரி.
    படித்த ஜோக் ஒன்று-ஒருவர் ஒரு கல்யாணத்திற்குச் சென்று, பரிசாக ஓட்டிய கவர் ஒன்று கொடுத்தார். எல்லாம் முடிந்ததும் கவரை பிரித்தார் மாப்பிள்ளை. “அடுத்த வாரம் நடைபெறும் என் கல்யாணத்திற் கும் நீ பரிசு ஏதும் தர வேண்டாம்”.என்று எழுதி இருந்தது.

  2. உண்மையான பதிவு. அதுவும் நவராத்திரி க்கு கொடுக்கும் ரவிக்கை பிட் பூமராங் மாதிரி கொடுத்த வருக்கே திரும்ப வரும். அனாதை ஆஸ்ரமத்தில் வரவேற்க வேண்டிய விஷயம்

மீனலதா
ஆர். மீனலதா, தொலைபேசி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். விருதுகள் பல பெற்றவர். சிறந்த நாடக நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், சினிமா, இசை, கவிதை, சமையல், Ad.supervision, விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்கும் ஆல்ரவுண்டர். நிகழ்ச்சி அமைப்பாளரும்கூட.. பழகுவதற்கு இனிமையான பண்பாளர். பலருக்கும் முன்னோடியாக விளங்குபவர். மங்கையர் மலரின் மும்பை நிருபர். உற்சாக ஊற்று.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...