0,00 INR

No products in the cart.

ஆயிரத்து ஒண்ணாவது பொய்!

அடுத்தடுத்து இரண்டு குட்டிக் கதைகள்…

கதை: கீதா சீனிவாசன்
ஓவியம்: பிள்ளை

திருமணம் நடந்து முடிந்தது. ஒரு வழியாக! வினோத், ரீனா… இனி கணவன் மனைவி… மாற்ற முடியாது… ஆனால் ரீனா வீட்டினர் இதற்காக சொன்ன பொய்கள்… அப்பப்பா…!

எவனோ எப்போதோ சொல்லிவிட்டான்… ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் நடக்கலாம் என்று…!

ஆயிரம் முறை போய் சொல்லி… கல்யாணம் நடத்தலாம்… என்றுதான் இருந்தது. வழக்கம் போல், மக்கள் தங்கள் வசதிக்காக இந்த சொல்லாடலையும் மாற்றிவிட்டார்கள் என்றும் கூறுவதுண்டு.

முதலில் பொண்ணு எம்.பி.ஏ என்றனர். வீடு சொந்த வீடு… நாற்பது பவுனு போடுவோம்.. ஒண்ணாம் நம்பர் கேட்டரிங்… மாப்பிள்ளை ரிசப்ஷன் கோட். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்! கிட்ட வரும்போதுதான் தெரிந்தது.

பொண்ணு எம்.பி.ஏவில் ஒரு சப்ஜெக்ட் மீதம் இருந்தது. வீடு தொண்ணூறு சதவிகிதத்தில் அடமானம்! கேட்டரிங் நளபாக சக்கரவர்த்தி ஒரு கத்துகுட்டி என்று. திரிந்த பாலில் ஒரு காபி கொடுத்தான். வினோத்தின் உடல் அளவை மட்டும் எடுத்துக்கொண்டு… ரீனாவின் அப்பாவுடைய கோட்டை ஆல்டர் செய்தது நன்றாக தெரிந்தது. எல்லா புளுகும் எட்டு மணி நேரத்தில் வெளுத்தது. நகைகள் கூட இரவலாம்… காதில் விழுந்தது.

பொண்ணு ரொம்ப டிமாண்ட் என்பதற்காக வினோத்தின் பெற்றோர் பொறுத்துக் கொண்டனர். ரீனாவின் அழகு வினோத்தின் கண்ணை மறைத்தது. கேட்டதில் பாதி அளவே தரப்பட்டது  கட்டு சாதம்வரை…
அந்த வைபவமும் முடிந்தது… பிரியா விடையுடன் மணமகன் வீட்டார் காரில் புறப்பட்டனர்.

ரீனா, உம்மென்றிருந்த வினோத்தின் அம்மாவிடம், “அம்மா… கல்யாணத்துல ஏதாவது குத்தம் குறை இருந்தா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்,” என்று பணிவாக சொன்னாள்.

“அடியேய் என் மாற்றுப் பெண்ணே.. என்ன சொல்லி கூப்பிட்ட? அம்மான்னா? பரவால்ல, நீ அத்தேன்னே கூப்பிடு. சொன்ன ஆயிரம் பொய் போதும். மறுபடியும் கன்டினியு ஆக வேண்டாம்,” என தன் ஆதங்கத்தை கொட்டினாள் ரீனாவின் மாமியார்.

ரீனா, தன் பேகிலிருந்து, ‘சமையல் செய்வது எப்படி’ என்ற  புத்தகத்தை எடுத்து, ‘காபி போடுவது எப்படி’ என்ற அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தாள்.

………………………………….

எது நடந்ததோ…!

கீதா சீனிவாசன்
ஓவியம்: சுதர்ஸன்

பிரசன்னா… இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சை வெகுமும்மரமாக பார்த்துக் கொண்டிருந்தான்… ஆட்டம் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்தது.

சட்டென்று… டிவி ஒரு சின்ன ஒளியாக குவிந்து… க்யு என்ற சத்தத்துடன் இருட்டானது. வெறுத்துப் போனான் பிரசன்னா.

கரண்ட் கூட இருந்தது. என்னவாயிற்று டிவிக்கு? ரிமோட்டை மாற்றி மாற்றி அழுத்தினான். டிவியிலும் நேரடியாக பட்டன்களைத் தட்டினான். சே… ஏதோ பிரச்னை. டிவி வாங்கி பத்து வருடங்களாகியிருந்தது. வீட்டில் அப்பா, அம்மா இல்லை. அவனிடம் இருந்த ஃபோனில் லைவாக வராது.

ஓவியம்: சுதர்ஸன்

“பாட்டி… பாட்டி” கத்தினான். கோமளம் வந்தாள்.

“பாரு பாட்டி… டி.வி. ரிப்பேராய்டிச்சு. நான் மேட்ச் பாக்கணுமே…” பேரன் வருத்தப்பட்டது அவளுக்கும் கஷ்டமாயிருந்தது.

“விடு கண்ணு…எது நடந்தாலும் நல்லதுக்குன்னு நினைச்சுக்க,” என்று ஆறுதல் சொன்னாள்.

“பாட்டி போதும்… உன் வியாக்யானம்… அப்பாவுக்கு ஃபோன் பண்ணி டிவி மெக்கானிக்க வரச் சொல்லு. நான் கேட்டா… மேட்சா பாக்கற… படின்னு… ஆரம்பிப்பாரு பாட்டி,” என உரிமையோடு அதட்டி கேட்டான் பிரசன்னா.

பேரனுக்காக தன் மகனுக்கு ஃபோன் செய்தாள் பாட்டி, பிரசன்னாவின் அப்பாவும்… “சொல்றேன்” என்றார்.

நேரம் போனது… டிவி மெக்கானிக் வரவில்லை. மீண்டும் பேரன் அவசரப்படுத்தினான், “பாட்டி மேட்ச் முடிஞ்சிடுமே” என்று.

பாட்டி மகனை தொடர்பு கொள்ள… “தெரியலயேம்மா… வரேன்னுதான் சொன்னான்…” என  பதில் கிடைத்தது. நேரம்தான் ஓடியது. பாட்டி பேரனை சமாதானப்படுத்தினாள், “எது நடந்ததோ…” பேரன் முறைத்தான்.

ன்றிரவு அப்பா வந்ததும் டிவி மெக்கானிக்கிற்கு ஃபோன் செய்தார். “சாரி சார்… என்னால வர முடியாது. அங்க கிளம்பும்போது,  எனக்கு  கோவிட் பாசிடிவ்  ன்னு மெசேஜ் வந்தது. நான் குவாரன்டைன்ல இருக்கேன்,” என்று மெக்கானிக் பதிலளித்தார்.

வீட்டில் அனைவருக்கும் அதிர்ச்சியுடன் ஆனந்தம். ஒருவேளை மெசேஜ் பார்க்காமல், இங்கு வந்து போயிருந்தால்?

மேட்சில் இந்தியா தோற்றிருந்தது. பாட்டி மீண்டும் சொன்னாள்… “அடேய் பேராண்டி… எது நடந்ததோ  அது நல்லதுக்கு தான்!”

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

டைரி!

1
கதை: தேன்சிட்டு ஓவியம்: தமிழ்   6/8/2000 இன்னிக்கு காலேஜ்ல ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துச்சு. கீதா, அவளோட பிரண்ட்ஸோட பேய் கிட்ட பேசினேன்னு சொன்னா . "பேயா? ரொம்ப ரீல் விடாதேன்னு," அவளை ஓட்டினேன். ஆனா,  முகத்த சீரியஸா...

ஒரு பக்கக் கதைகள்!

ஓவியம்: பிள்ளை கதை: ச. மணிவண்ணன்  வாடகை ராமமூர்த்தி ஈசி சேரில் படுத்துக் கொண்டு நியூஸ் பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தார். "சார் வணக்கம்!" என்ற குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தார். சங்கர் நின்றிருந்தான். மாடி வீட்டில் குடியிருப்பவன். "சொல்லுப்பா...

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...