படங்கள்: பிள்ளை
“தலைவர் ஆனாலும் இப்படி மானத்தை எடுக்கக் கூடாது!”
“ஏன்? என்ன செய்தார் அப்படி?”
“தலைவர் காரை நிறுத்தி, போலீஸ் அவர் நெத்திப் பொட்டுல ‘தெர்மால் ஸ்கேனர்’ஐ வைச்சதும், ‘ஹேண்ஸ் அப்’க்கு கை தூக்குற மாதிரி ரெண்டு கையையும் தூக்கினாரே!
– சம்பத் குமாரி, பொன்மலை
………………………………………………………..
“ஏண்டா! நான் 96% எடுத்தேன். எனக்கே மெடிக்கல் காலேஜ்ல இடம் கிடைக்கலே. உனக்கு 90க்கு எப்படி கிடைச்சது?”
“டாக்டர் செக் பண்ணபோது என்னோட ஆக்ஸிஜன் அளவு 90 இருந்தது. அதனால, உடனே மெடிக்கல் காலேஜ் ICUவுல சேர்த்துட்டாங்க.”
– சம்பத் குமாரி, பொன்மலை
………………………………………………………..
“என்னப்பா இது! தோசை ரவுண்டா இல்லாம, செவ்வகமா இருக்கு?”
“இது A4 சைஸ் பேப்பர் ரோஸ்ட் சார்! அதான் அப்படி!”
– சம்பத் குமாரி, பொன்மலை
………………………………………………………..
“அது என்ன, மணி மண்டபத்துல இருக்கிற தலைவர் சிலை கையில கத்தையா ருபா நோட்டு இருக்கிற மாதிரி சிலை வடிச்சிருக்காங்க?
“அது ‘Money’ மண்டபம் ஆச்சே! அதான்!”
– சம்பத் குமாரி, பொன்மலை
………………………………………………………..
“பார்லிமெண்ட்ல எதிர்காட்சிக்காரங்க எதுக்கு வெளிநடப்பு செய்யறாங்க?”
“‘காகிதமில்லா பட்ஜெட்’ தாக்கல் செய்தாங்களாம்! இப்படி செய்தா நாங்க எப்படி பட்ஜெட் உரையை கிழிச்சு எறிய முடியும்?னு கேட்டு வெளிநடப்பு செய்யறாங்க!”
– சம்பத் குமாரி, பொன்மலை
………………………………………………………..
“நம் மன்னர் இப்போதெல்லாம் இரவு மாறு வேஷத்தில் நகர்வலம் செல்வதில்லையே ஏன்?”
“நைட்டு புரோட்டா கடையில நிறைய பாக்கியாம்!”
– நிலா, திருச்சி
………………………………………………………..
“என்ன அவர் பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டு காசு தராம போறாரு?”
“அவர் பேப்பர் ரோஸ்ட்டுக்கு ஒரு வருட சந்தா கட்டியிருக்காரு!”
– நிலா, திருச்சி